Monday, October 17, 2022

PANCHAYATH


 ஒரு பஞ்சாயத்து தீர்ப்பு - #நங்கநல்லூர்_J_K_ SIVAN


 
பாம்புக்குடி  எனும்  சின்ன க்ராமத்திலே  பரமசிவ நாயக்கர் வயதான  விவசாயி.  ஆறுவேலி நிலம் .பரம்பரை சொத்து.  அவர்  மாந்தோட்டத்தில்   பக்கத்து  வயல் மார்த்தாண்டம்  ஒருநாள் சில  கோணிகளில்  மாங்காய்  பறித்துக்  கொண்டு வந்து ''நாயக்கரே இதுக்கு எவ்வளவு காசு தரணும்?'' என்று கேட்டான். 

''எலே, நீ உள்ளே பூந்து பறிச்சதே  எனக்கு தெரியாம. இப்போ அதுக்கு விலை என்னானு கேக்கிதே .  பத்து ரூபா வழக்கமா கேக்கறது. உனக்கு இருவது ரூபா.  பணம் எடு ''

''ஐயோ அம்புட்டு காசுக்கு நான் எங்க போவறது.   இந்தாங்க  உங்க மாங்கா ,  உள்ளே போய் பறிச்சதுக்கு என் கோணிப்பைகளை இங்கேயே  விட்டுட்டு போறேன்''

நாயக்கர்  ஊர் முழுதும்  மார்த்தாண்டம் அயோக்கியன்,  திருடன்,களவாணி என்று சொல்லி அட்டகாசம் பண்ணி இது விஷயம் பஞ்சாயத்துக்கு தெரிந்து  மார்த்தாண்டத் தை  மரத்துலே கட்டி கைது பண்ணி கேஸ் விசாரணைக்
கு வந்தது. 

''மார்த்தாண்டம் திருடலை. மாங்காயை பறிச்சு நேரா  அவனே  நாயக்கரிடம் கொண்டாந்து  காட்டி காசு தரேன்னு வேறே சொன்னானே.'' பஞ்சாயத்து மார்த்
தாண்டத்தை விடுதலை செய்தது.
 
'தப்பு செய்யாத  என்னை பத்தி  அவதூறா சொல்லி,  ஊர்லே என் பேரை  ரிப்பேர் பண்ணிய  நாயக்கருக்கு தண்டனை கொடுக்கணும்'' என்று மார்த்தாண்டம் வழக்கு தொடுத்தான். 

''நாயக்கரே ஏன் இப்படி சொன்னீஹ? செஞ்சீஹ?''' -  பஞ்சாயத்தார் கேட்டார்கள்.

''சும்மா  வாய் வார்த்தையா கூட  சொல்லக்கூடாதா? தப்பா? நான் என்ன அடிச்சேனா, பிடிச்சேனா?''''ஓஹோ. 

நீங்க  எப்படி வந்தீஹ  இஞ்சே?'

''ஏன், என் ஒத்த மாட்டு வண்டியில  தான்''

பஞ்சாயத்தார்  நாயக்கர்  மார்த்தாண்டத்தை  பற்றி  சொன்ன வார்த்தைகளை காகிதத்தில் எழுதி  அவர் கையில் கொடுத்தது பஞ்சாயத்து.

''இதை துண்டு துண்டா கிழிச்சு வழியெல்லாம் போட்டுக்கிட்டு  போங்க  நாயக்கரே. நாளைக்கு காலைலே  ஓம்பதுக்கு  டாண்ணு   இஞ்சே வரணும். தீர்ப்பு  அப்போ சொல்றோம் கேட்டுக்கிடுங்க''

''இதென்னடா அக்குறும்பு?''  நாயக்கர்  காகிதத்தை சுக்குநூறா கிழிச்சு மாட்டு வண்டியில் போகும்போது எல்லா இடத்திலும் எறிந்துகொண்டே  வீடு போய் சேர்ந்தார்.

மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு  ஊர்  பொது இடத்தில் ஆலமரத்தடியில் பஞ்சாயத்து  கூடியது.

''நாயக்கரே, நாங்க தீர்ப்பு சொல்றதுக்கு முன்னாடி, நேத்து நீங்க தூக்கிப்போட்ட அத்தனை காய்த துண்டுகளையும் இஞ்சே கொண்டாந்து கொடுக்கணும். சீக்கிரம் போய் எடுத்துக்கிட்டு வாங்க''

''இன்னாங்க சாமி  இது, அதெப்படிங்க முடியும்,  காத்துலே அந்த துண்டு காய்தம் எல்லாம் எங்கேயோ பறந்து போயிருக்கும்  நான் எப்படி அதெல்லாம் சேகரிச்சு கொண்டார  முடியும்?''

''அதான் விஷயமே நாயக்கரே, மார்த்தாண்டம் பாவம்  உங்களாண்ட சொல்லாமே  தோட்டத்திலே  போய் பக்கத்து வயல் காரன் என்கிற உரிமையிலே உங்க தோட்டத்திலே போய் காய்  பறிச்சு ஒண்ணு  விடாம உங்களாண்டேயே கொண்டு காட்டி, எவ்வளவு காசு தரணும் னு கேட்டதை, அவன் திருடன் கேப்மாறி , களவாணிப்பய  ன்னு ஊர் முச்சூடும் பரப்பிட்டீங்க. அவன் கௌரவம் என்னாச்சு? மானம் மருவாதி  என்னாச்சு? ஊர்லே அவனை தப்பான ஆளாக்கிட்டீங்க உங்க வார்த்தையால .  உங்க வாய்க்கு நீங்க  எஜமானா இருக்கோணும்.  உங்க வார்த்தைக்கு நீங்களே  அடிமையாயிட கூடாது. இனிமே இப்படி செய்யாதீங்க.   நீங்க போங்க. போங்க நாயக்கரே. பத்து கோணி மாங்காயை அவனுக்கு சும்மாவே கொடுக்க
ணும் அதான் தண்டனை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...