Thursday, October 6, 2022

BANANA FLOWER



 கல்பதரு 2  -#நங்கநல்லூர்_J_K_SIVAN


வாழைப்பூ

தலையில் சூடிக்கொள்ளும் பூ வை விட  தலைக்கு மேல்  ஏற்றி போற்றி  கொண்டாட வேண்டிய ஒரு பூ  வாழைப்பூ. விசித்திரமாக இதற்கு பூ என்று பெயரே தவிர இது ஒரு காய்கறி மாதிரி தான் உபயோகிக் கிறோம். எதற்காக பூ என்று பெயர் என்றால், பூவிலிருந்து தான் எல்லா மரத்திலும் காய் வரும். வாழைமரத்தில் முதலில் வாழைப்பூ அப்புறம் அதிலிருந்து  வாழைக்காய் தார்  விடும்.   ஆசையாக  வாழைத்தார் வரட்டும் என்று மரத்தில் பூ வளர்த்து, அது  தொங்கினால், வாழைக்காய் பருத்து பெரிதானதும் ஒரு நாள் ராத்திரி காணாமல், மறுநாள்  காலை பார்த்து  ஏமாந்த அனுபவம் எனக்கு நிறைய  உண்டு.
வாழைப்பூவின் நிறம் அற்புதமானது. நிறைய பெண்கள்  நல்லி குமரன் போன்ற  புடவைக்கடைகளில்  பல  புடவைகளை அலசி வாழைப்பூ கலர் இருக்கா? என்று தேடுவதைப்  பார்த்திருக்கிறேன்.உலகத்திலேயே அதிக பொறுமை தேவையான உத்யோகம் புடவைக்கடை சேல்ஸ்மேன்  உத்யோகம் தான்.  அவ்வளவு வேகமாக  எல்லா புடவைகளை பிரித்து பலபெண்களுக்கு காட்டி, அவர்கள் திரிப்படாமல்  புடவைகளை உதறி, விசிறி தன்  தோள்  மேல் போட்டுக்காட்டி   ''ஹுஹும்  வேணாம். அதோ இருக்கிறதே அதைக் காட்டுங்கள்''  என்று நிராகரித்து,  எல்லா புடவை மலைகளையும்  அழகாக  அடுக்கி, மடித்து வைப்பதற்கு நிச்சயம் பத்ம ஸ்ரீ தரலாம்.

ஆஹா,  வாழைப்பூவை  பகவான் அழகிய  வாட்டர் ப்ரூப்  WATERPROOF  மடல்களால் பின்னி, அதற்குள்  வரிசையாக சீப்புசீப்பாக  ஒரே அளவில்  குட்டி குட்டியாக  வாழைப்பூ மொட்டுக்கள்  வைத்திருக் கிறான். அவை தான் வாழைக்காயாகும்.    மடல் தானே அவிழ்ந்து கீழே விழும்.  வாழைப்பூவை சுற்றி இருக்கும் மடல்களில் நாங்கள்  சாதம் ஊறுகாய் வைத்துக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். அகலமாக  மணமாக  இருக்கும். நிறைய  குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அப்போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் தனி தட்டு கிடையாது. கையில் பிசைந்த சாதம் வாங்கி சாப்பிடு வது வழக்கம். வாழைப்பூ சமையல் பண்ணும் அன்று நிறைய மடல்கள் பெரிதாக  எங்களுக்கு தட்டாக கிடைக்கும்.

வாழைப்பூ மடல்களை ஒன்றின் மேல் ஒன்று குறுக்காக ரெண்டு பேர் தேய்த்து கிச்சு கிச்சு தாம்பாளம் விளை யாடி யிருக்கிறோம்.

வாழைப்பூவின் ருசி அதி அற்புதமானது. வாழைப்பூ உசிலி  கண்டுபிடித்தவனை ஏனோ கின்னஸ் ரிகார்டில் காணோம்.   நிறைய  ஹோட்டல்களில்  வாழைப்பூ வடை பிரபலம்.  வாழைப்பூ அடை , பொரிச்ச கூட்டு, இணையற்றவை. 

வாழைப்பூ  நோய் நீக்கும் மருந்துகளில் முக்கியமான ஒன்று. அதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து,  வைட்டமின் A , B1.  C ஆகிய  முக்கிய உயிர்ச்சத்துக்கள்  ரொம்ப இருக்கிறதே.

.வாரத்தில்  ரெண்டு தடவை சாப்பிட்டால்  கொழுப்பு
களைக் கரைக்கும்,. ரத்த ஓட்டம் சீராக வேகமாக செல்லும். கொலஸ்ட்ராலை  கரைக்கிறது. ரத்த சோகைபோய்விடும். 

. ரத்தத்தில்  உள்ள  அதிகளவு சர்க்கரையை வாழைப்பூவின்  துவர்ப்பு கரைக்கும். சர்க்கரை அளவு குறைகிறது.
வயிற்று புண்களை குணமாக்கும் 

.PILES  மூலநோய் ஆசாமிகளுக்கு  கடுப்பு, வலி,  பாதிப்பு நீங்கும்.  சீதபேதியையும் DYSENTERY  நிறுத்தும்.  வாய் புண், வாய் நாற்றம் போக்கும். 

பெண்களுக்கு  கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கின் போது  அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் WHITE DISCHARGE போன்ற நோய்களுக்கு வாழைப்பூ சாப்பிடுவது  நிவாரணம்.

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டால்  நீரிழிவு  நோய் DIABETES  கட்டுப்படும். அஜீரணம் தொந்தரவு இருக்காது. உடம்பில் சூடு குறையும். 

வாழைப்பூ ரஸம்  நான் இதுவரை சாப்பிட்டதில்லை. ஒருநாள் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...