ரஸ ஆஸ்வாத தரங்கிணி நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ராம பிரசாதம்...தனது வாழ்நாளில் நூற்றுக்கு மேலான ஸ்ரீ ராம பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தியவரும் பருத்தியூர் பெரியவா என்று போற்றப்பட்டவருமானவர் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள். மக்கள் அவரை
ராமாயண சாஸ்திரிகள் என்றே அறிவார்கள். சிறந்த சங்கீத ஞானம். ஹரிகதா காலக்ஷேபங்கள் நிறைய நடத்தியவர். சமஸ்க்ரிதம் தமிழ் தெலுங்கு போன்ற பாஷைகள் அக்காலத்தில் வித்வான்கள் அறிந்திருந் தனர். சாஸ்திரிகள் ராமாயணம் தவிர பாகவதம், உபநிஷத், கீதை, புராணங்களில் ஈடற்ற உபன்யா சங்கள் நிகழ்த்தியவர் . பல ஜமீன்கள், ஆதீனங்கள், சமஸ்தானங்களில் வரவேற்கப்பட்டு கௌரவம், நிறைய பொன்னும், வெள்ளி, நவரத்தினங்கள், பட்டு வஸ்திரங்கள் என்று எண்ணற்ற பரிசுகள் பெற்றவர். அப்படியே எல்லாவற்றையும் வாரி வழங்கிவிடுவார். ஒவ்வொரு உபன்யாசம் கடைசியிலும் அவரை
ரசிகர்கள் சூழ்ந்து சந்தேகங்கள் விளக்கங்கள் கேட்பார்கள். நிதி பொருள் உதவி கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை இயன்றவரை வழங்குவார்.
சென்னையில் நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். நெல்லூர் வெங்கடாசலம் கடினமான உழைப்பாளி, சாது, ஏழை பிராமணன். ராம பக்தன். அவன் பெண்ணுக்கு சரியான வரன் அமைந்து கல்யாணம் நிச்சயமாகி விட்டது. பிள்ளை வீட்டார் அடுத்த வாரம் ஏற்பாடுகள் பற்றி பேச வரப்போகிறார்கள். கையில் காலணா இல்லை. கவலை அவனைத் தின்றது.
அவன் வீட்டுக்கு அருகே கோவிலில் யாரோ ஒருவர் ராமாயண பிரசங்கம் என்று அறிந்து கிருஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசத்தை கேட்டான். ராமர் மஹிமையில் தன்னை மறந்தான். பிரசங்க முடிவில் சிலர் அவரை அணுகி உதவிகள் பெறுவதை பார்த்து தானும் பெண் கல்யாணத்திற்கு உதவி கேட்கலாமா என்று எண்ணம். ஆனால் அருகில் சென்றும் வார்த்தை வரவில்லை. தினமும் கால் அவரை கேட்க இழுத்தது. அற்புதமாக பிரசங்கங்கள் கேட்டான். அருகில் சென்று வணங்கினான். ஆசி பெற்றானே தவிர கூச்சமாக இருந்ததால் அவரிடம் நிதி உதவி கேட்கவில்லை.
ஆச்சு இன்னும் ரெண்டே நாள். பிள்ளை வீ ட்டார் வரப் போகிறார்களே எப்படி சமாளிப்பது? ராம ப்ரபோ. அன்றும் சாஸ்திரிகள் ராமாயண உபன்யாசம் கேட்டான்.
கண்களில் நீர் மல்க அன்று ப்ரவசன முடிவில் அவர் எதிரே நின்றான். அவர் பார்வை அவன் மேல் விழ அவரை நமஸ்கரித்தான். வாய் பேச வரவில்லை. எதிரே தட்டில் இருந்த ஒரு பழத்தை அவன் கையில் கொடுத்து சாஸ்திரிகள் ஆசிர்வதித்தார். அன்றோடு கோவில் உபன்யாச நிகழ்ச்சி நிறைவேறி சாஸ்திரிகள் வேறு இடம் சென்றுவிட்டார். வெங்கடாசலம் வீடு திரும்பினான்.
மறுநாள் காலை யாரோ ஒரு பையன் வாசல் கதவை தட்டினான்.
''யாரப்பா நீ என்ன வேண்டும்?'
'''வெங்கடாச்சலம் அய்யர் என்று இங்கே...
.''''நான் தான் பா. என்ன விஷயம் சொல்லு?''
''ராமாயண சாஸ்திரி இதை உங்க கிட்டே கொடுக்க சொல்லி அனுப்பினார்''
தனது இடுப்பு வேஷ்டியிலிருந்து ஒரு பிரவுன் கவரை
எடுத்து பிரசாதம் புஷ்பம் மேலே வைத்து நீட்டினான் அந்த பையன்
''யார் இவன் ? சாஸ்திரிகளுக்கு எனது வீட்டு விலாசம் எப்படி தெரிந்தது. அவர் கேட்கவும் இல்லை, நான் சொல்லவும் இல்லை. அவரிடம் நான் கேட்கவில் லையே.? என்ன பிரசாதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.?
தன் கண்களை நம்பவே முடியாமல் வெங்கடாசலம் அந்த ப்ரவுன் கவரை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார். கோந்து போட்டு ஓட்டிய கனமான பிரவுன் கவர். உள்ளே என்ன என்று பிரித்து பார்க்கும்போதே ''நான் வருகிறேன்'' என்று பையன் வேகமாக கிளம்பிவிட்டான்.
கவர் உள்ளே 2500 ரூபாய்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு அது பல லக்ஷங்களுக்கு சமம். ஐந்து நாள் ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணி ஊர் கூட்டி சாப்பாடு போடலாமே. எல்லாம் பண்ணியும் கையில் மிச்சம் கூட மீறும்.
''ஸ்ரீ ராமா'' என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழும் பியது. அவன் தன்னுடைய பெண் கல்யாணத் துக்கு மொத்த செலவு 1500 ரூபாய்க்கு என்ன வழி என்று தேடும் நேரத்தில் இப்படி ஒரு பரிசா?
பிள்ளை வீட்டார்கள் வந்து'பேசி, குறித்த நாளில் பெண்ணின் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. கல்யாணம் முடிந்த கையோடு வெங்கடாசலம் சாஸ்திரிகள் இருந்த அக்ரஹாரம் தேடி சென்று பலர் சூழ்ந்திருக்க, அவரை நமஸ்கரித்து அவர் செய்த எதிர்பாராத பெரிய உதவிக்கு நன்றி கூறினான்.
'' நான் எத்தனையோ நாள் எதிரே நின்றும் வாய் திறந்து உங்களை என் பெண் கல்யாணத்துக்கு ஏதாவது பொன் பொருள் யாசகம் கேட்க விரும்பி தயக்கத் தோடு கேட்காமலேயே இருந்தும், என் நிலைமை புரிந்து என் மனதில் உள்ளதை சொல்லாமலேயே அறிந்து சரியான சமயத்தில் நீங்கள் செய்த உதவிக்கு என் ஜென்மம் பூரா, என் குடும்பம் முழுக்க உங்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம்.''
தட்டு தடுமாறி வார்த்தைகள் விழ அவரை கீழே விழுந்து நமஸ்கரித்தான். கண்களில் நன்றிக் கண்ணீர்.
கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்னப்பா சொல்கிறாய் நீ.? யார் நான் அனுப்பின பையனா.? நான் 2500 ரூபாய் கொடுத்தனுப் பினே னா??? உங்க ஊரில் எந்த பையனையும் எனக்கு தெரியாதே, உன்னையும் தெரியாதே? பணம் கொடுத்து எதுவும் யாரிடமும் உனக்கு அனுப்பவில் லையே அப்பா?''
இந்த நிகழ்ச்சி சாஸ்திரிகள் மீது பக்தி பரவசத்தை
மேலும் அதிகரிக்க வைத்து வெங்கடாசலம் அவர் குடும்பத்தில் ஒருவனானான். மீதி பணத்தில் ஏதோ சில வியாபாரங்கள் பண்ணி பணக்காரனான். அவரை அழைத்து ஊரில் நிறைய ப்ரவசனங்கள் ஏற்பாடு செய்தான்.
எத்தனையோ அதிசயங்கள் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரி கள் வாழ்வில் நடந்திருக்கிறது என்று படித்தேன். அவரது வம்சாவளியினர்கள் நிறைய புத்தகங்கள் போட்டிருக்கி றார்கள். அவருடைய கொள்ளுப்பேரன் ஒருவர் எனது நண்பர். சமீபத்தில் காலமான வித்வான், ஸ்ரீ சுந்தர ராம
மூர்த்தி கொள்ளு தாத்தா பற்றி எனக்கு அவர் நிறைய சொல்லி இருக்கிறார். மனது உங்களோடு பகிர்ந்து
கொள்ள துடித்ததால் இந்த கட்டுரை.. அப்பப்போ நடு நடுவே ருசிகர தகவல் உங்களைத் தேடி வரும்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக சாஸ்திரிகளின் ''ரஸ நிஷ்யந்தினி'' க் குள்ளும் செல்வோம். ரஸம் என்ல் தெரியுமே. சுவை, ருசி. டேஸ்ட் . நிஷ்யந் தினி என்றால் ஊற்று. ராமனின் பெயர் அளவில்லாத அம்ரித ஊற்று. அதன் ருசியைப்பற்றி சொல்லமுடியாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அருமையான பெயர் வைத்திருக்கிறார் சாஸ்திரிகள்.
No comments:
Post a Comment