குருக்ஷேத்திர நீதி - நங்கநல்லூர் J K SIVAN
குருக்ஷேத்ரம் ஒரு பெரிய யுத்த பூமியா, இல்லை துவாபர யுகத்தில் மிகப்பெரிய மயான பூமியா?
எங்கும் ரத்த வெள்ளம், உயிரற்ற உடல்கள், சேதமான ஆயுதங்கள், தேர்கள், ...... 18 நாள் யுத்தம் பல உயிர்களைக் குடித்து விட்டதே. எங்கும் அரைகுறை உயிர்களின் ஈனஸ்வரங்கள் ஓய்ந்து போய்விட்டன. காக்கை, கழுகு, பிணந்தின்னி மிருகங்களின் அசைவைத்தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. இந்த அமைதி தான் மயான அமைதியோ? அத்தனை பிணங்களும் சில நாட்களுக்கு முன்பு எவ்வளவு, அகம்பாவத்தோடு பேசிய. எவ்வளவு வீரமான சொற்கள். படைகள், பலசாலிகள். இதோ இப்போது காக்கை நரி கழுகு ஓநாய் தான் அவற்றை சுற்றி. மற்ற உறவினர்கள் வீராதி வீர பணியாட்கள், நாடு நகரம், யானை குதிரை எங்கே அவை எல்லாம்?
சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு தெரிந்த உலகத்தில் இருந்த எல்லோருமே காணாமல் போன இடமல்லவா இந்த குருக்ஷேத்ரம். இங்கே தான் கிருஷ்ணனும் அர்ஜுனனும் வாழைக்காய் சீவுவது போல் எண்ணற்ற உ யிர்களை சூறையாடி னார்களோ? எறும்பு புற்றை மிதித்து நசுக்கிய யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானோ? ஓஹோ , இது தான் 'உலகே மாயம் வாழ்வே மாயம் '' பாடவேண்டிய இடமோ?
''சஞ்சயா என்ன புரிந்து கொண்டாய்?என்றது ஒரு குரல்.
''யார் பேசுவது? என்று திரும்பிப் பார்த்த சஞ்சயன் முன் ஒரு காவி அணிந்த முதியவன்.
''யார் பேசுவது? என்று திரும்பிப் பார்த்த சஞ்சயன் முன் ஒரு காவி அணிந்த முதியவன்.
''ஐயா நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள் இங்கே?- சஞ்சயன் கேட்டான்.
''நீ என்ன செய்கிறாய் நினைக்கிறாய் சொல். ....உனக்கு உண்மையிலேயே இங்கே நடந்தது என்ன என்று புரிகிறதா சரி? அப்போது தான் குருக்ஷேத்ர அர்த்தம் புரியும் ''
'' சுவாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. எனக்கு மஹாபாரதம் ஒரு கதையல்ல, ஒரு தத்துவம் என்றஅளவு தான் புரிகிறது''
“நீ கெட்டிக்காரன். ஆமாம் மஹாபாரத யுத்தம் ஒரு தத்துவம் தான். உன் மனதில் எழுகிற சந்தேகங்கள் எனக்கு புரிகிறது சொல்கிறேன் கேள். சஞ்சயா நீ இருந்த இடத்திலிருந்தே குருக்ஷேத்திர மஹா பாரத யுத்தத்தை முழுதும் திவ்ய தரிசனம் பெற்று திருத ராஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்னவன். நான் கேட்பதற்கு பதில் சொல். பாண்டவர் யார்?
''நீங்களே சொல்லுங்கள்''
''உன்னுள்ளே இருக்கும் ஐந்து புலன்கள் .
''கௌரவர்கள் யார் தெரியுமா?
''தெரியவில்லை, சொல்லுங்கள் சுவாமி''
“உனக்கு உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் நூறு தப்பிதங்கள். ஒவ்வொருநாளும் உன்னுடைய ஐந்து புலன்கள் அவற்றோடு போராடுகிறதே. எப்படி என்று தெரியுமோ?''
'சத்தியமாக என்னால் உணர முடியவில்லை சுவாமி சொல்லுங்கள் ''

“ கிருஷ்ணன் குதிரைகளை ஓட்டினானே , அந்த குதிரைகள் தான் உன் மனம், ஐம் புலன்கள். ஒ குதிரைகளை அடக்கி ஓட்டியவன் தான் உன் உள்ளே இருக்கும் ஆத்மா, அந்தர்யாமி. மனசாக்ஷி. வழி காட்டி. அவன் உன்னை செலுத்தும்போது வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும்..''
''சுவாமி, ஒரு சந்தேகம்?கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஏன் பீஷ்மாச்சார்யார், த்ரோணர் போன்றவர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் புரிந்தார்கள்?''
'சஞ்சயா, வயதானால் மட்டும் ஒருவன் பெரியவன் இல்லை. தவறு செய்வது எல்லோர்க்கும் சகஜம். தெரிந்து செய்வது தான் குற்றம். அதற்கு எல்லோரும் தண்டனை பெற்று பலனை அனுபவிக்கவேண்டும். பாண்டவர்கள் அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டியிருந்தது. அது புரிய கீதை சொல்வது உனக்கு புரிய வேண்டும். கிருஷ்ணன் கீதையை நமக்கு அதற்காகத் தான் உபதேசித்தான்.”
''கர்ணன் என்பது...."
'கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர் ஆசை. ஆசையால் தான் எல்லா துன்பங்களும் விளையும். திருமூலர் சொன்னது நினைவிருக்கிறதா. ஆசை படப்பட ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.'' தவறுகளை செய்ய தூண்டிவிடுவது தான் ஆசை. கௌரவர்களுக்கு கர்ணன் போல...''
சஞ்சயன் மனதில் எண்ணங்கள் சுழன்றன. நடந்ததை எல்லாம் ஆரம்பத்திலிருந்து மீண்டும் சினிமாவை ரீ வைண்ட் REWIND பார்ப்பது போல் கவனித்தான். குருக்ஷேத்திர பூமியை மீண்டும் சுற்றி முற்றிலும் பார்த்தான்.

''ஆஹா, ஆசையால் விளைந்த பலன் இது தான்.. பேராசை பெரு நஷ்டம்..பொறாமை...... புரிந்துவிட்டது.
சஞ்சயன் முகம் வியர்த்தது. நெஞ்சம் படபடத்தது. சத்யம் வெல்லும். பொறுத்தார் பூமி ஆழ்வார்.... பாண்டவர்கள் வென்று பூமி ஆண்டார்கள்... உண்மை புலப்பட்டது.
கிழவரை வேறு ஏதோ கேட்க திரும்பினான்.. எங்கே அந்த துறவி..... வாழ்க்கை தத்துவம் தான் இத்தனை நேரம் உருவமெடுத்து என் முன் தோன்றியதோ??.
No comments:
Post a Comment