Wednesday, October 12, 2022

KALPATHARU


 கல்பதரு -   #நங்கநல்லூர்_j_k_SIVAN

 
3. வாழக்காய் 

''என்ன அக்ரமம்டீ,  இந்த வாழக்காய்க்கு வந்த கேட்டை பாத்தியா?.. கச்சலா  இருக்கு. ஒண்ணு  பதினேழு பதினெட்டு ரூபாயாம்.   சொக்கப்பா தோட்டத்திலே கூப்ட்டு கூப்ட்டு கொடுப்பான்.  கட்டையா  ஒண்ணு  ஒண்ணும் அரை வீசை கனம் இருக்கும்.  ஒருநாள் வாழக்கா பொடி, ஒருநாள்  கறி , ஒருநாள் வறுவல் னு மொச்சுடும்  குழந்தேள்  எல்லாம்'' என்றாள்  சேது பாட்டி.

''பாட்டி , நீ  த்ரேதா யுகத்திலே இருக்கே. விலை வாசி  மானத்தை  இடிக்கிறது இப்போ. ஒளறாதே '

''வாழக்கா எனக்கு பிடிக்கும் டீ காமு.  எங்க தோப்பனார் அடிக்கடி வாழக்கா மஹத்வம் சொல்வார். உனக்கும் சொல்றேன் கேட்டுக்கோ.''
பாட்டி சொன்ன விவரம் இது தான்.

வாழைக்காய் மரத்தோடு தொங்காத கல்யாண வீடே கிடையாது. சுபமான வஸ்து.  ருசிக்கு அதைப்போல  வேறு ஒரு காய்  ஈடாகாது.  ராஜம் அத்தை பண்ணி போட்ட  வாழைக்கா  பொடி.   பொடி மாஸ்  எல்லாம்  அறுபது  வருஷம் எழுபது வருஷம் ஆகியும் மறக்க முடியலே.  வாழைக்காயில் பல வகை. அதிலே ஒண்ணு   நேந்திரங்காய்.   கேரளா போய்ட்டு வந்தாலே  அப்போதெல்லாம்  நேந்திரங்கா சிப்ஸ் கட்டாயம் வாங்கி வருவார்கள். திருப்பதிக்கு போனா லட்டு மாதிரி அது.

மருத்துவ ரீதியில் பார்த்தால்  மொந்தன் வாழை தினமும் ஒண்ணு  நறுக்கி சாப்பிடறவனுக்கு தொப்பையே இருக்காது. கொலஸ்ட்ரால், கான்ஸர்  எதுவும் கிட்டே வராது. தலை நரைக்காதுன்னு சொல்வார்கள்.பச்சை வாழைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள்,நார்ச்சத்து ரொம்பவே இருக்கு. ஜீரணம் ஆகும்.  உடம்பு எடை குறைக்கும்.  சக்கரை அளவை  மட்டுப்படுத்தும்.  ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்ஜா மல் பார்த்துக்கொள்ளும். இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.  வாழைக்
காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் ,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க அதிகம் வாழைக்காய் சாப்பிடணும் .எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க  வாழைக்காய் ஹெல்ப் பண்ணுகிறது. எலும்பு வளர   வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் எல்லாம் இருக்கு. மூட்டு வலி, ஆஸ்டியோஸ் போரோஸிஸ்  எல்லாம் வராது. வாழைக்காயில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம்  இருப்பதால்  மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை ஒழுங்குபடுத்தி உணர்ச்சி கரமான மன நிலை உண்டாக்கிறதாம்.   நமக்கு அவசியம் வேண்டிய மன அமைதி  கிடைத்தால் விடலாமா?  நார் சத்து நிரம்ப இருக்கிறதே . வாழைக்காய்  தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.  மலச்சிக்கல் இருக்காது. இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து நரம்புகளில் இறுக்கத் தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும்  உதவுகிறது.வைட்டமின் A  இருப்பதால்  கண் பார்வைக்கும்  நல்லது.   

மொத்தத்தில்  வாழைக்காய் என்ற பெயரே தப்பு போல தோன்றுகிறது. நாம்  வாழ காய்த்த ஒரு காய். நாம் வாழ நமக்கு கிடைத்த ஒரு காய். வாழக்காய் என்ற பெயரே பொருத்தம்.

இதெல்லாம்  நம்மைப் பொறுத்த விஷயம். நாம்  வாழ  அருள் செய்த நமது முன்னோர்கள், நிறைய வாழைத் தோட்டங்கள் பார்த்தவர்கள், வாழைக்காய் உபயோகித்து நீண்ட காலம் நோய் நொடி இன்றி எக்ஸ்ரே தெரியாமல் வாழ்ந்தவர்கள்.
அவர்களை த்ரிப்திபடுத்த அவர்களுடைய திதி, அமாவாசை, ஸ்ராத்த நாட்களில் வாழைக்காயை  பிராமணர்களுக்கு தானம் அளித்து தர்ப்பணம் பண்ணுகிறோம். வாழைக்காய் பெற்ற  பிராமணர்கள் நமது மூதாதையர் சார்பாக நம்மை மனமுவந்து வாழ்த்துகிறார்கள்,  அவர்களுக்கும் தக்ஷிணை கொடுத்தது திருப்தி படுத்துகிறோம்.
த்ருப்தியதா, த்ருப்தியதா, த்ரிப்தியதா...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...