Tuesday, September 18, 2018

GITANJALI




கீதாஞ்சலி J.K. SIVAN
ரபீந்திரநாத் தாகூர் '

ஹை,என் ராஜா வந்தாச்சு !

The night darkened. Our day's works had been done. We thought that the last guest had arrived for the night and the doors in the village were all shut. Only some said the king was to come. We laughed and said `No, it cannot be!'

It seemed there were knocks at the door and we said it was nothing but the wind. We put out the lamps and lay down to sleep. Only some said, `It is the messenger!' We laughed and said `No, it must be the wind!'

There came a sound in the dead of the night. We sleepily thought it was the distant thunder. The earth shook, the walls rocked, and it troubled us in our sleep. Only some said it was the sound of wheels. We said in a drowsy murmur, `No, it must be the rumbling of clouds!'

The night was still dark when the drum sounded. The voice came `Wake up! delay not!' We pressed our hands on our hearts and shuddered with fear. Some said, `Lo, there is the king's flag!' We stood up on our feet and cried `There is no time for delay!'

The king has come---but where are lights, where are wreaths? Where is the throne to seat him? Oh, shame! Oh utter shame! Where is the hall, the decorations? Someone has said, `Vain is this cry! Greet him with empty hands, lead him into thy rooms all bare!'

Open the doors, let the conch-shells be sounded! in the depth of the night has come the king of our dark, dreary house. The thunder roars in the sky. The darkness shudders with lightning. Bring out thy tattered piece of mat and spread it in the courtyard. With the storm has come of a sudden our king of the fearful night.

இதோ பார்த்தாயா? எவ்வளவு சீக்கிரமாக இந்த இருள் கவ்விக்கொண்டு வருகிறது. நான் என் அன்றாட வேலைகளை முடித்து விட்டேன். இந்த ஊருக்குள் கடைசியாக ராத்திரி வந்த விருந்தாளியும் வந்து சேர்ந்ததால் இந்த ஊரில் எல்லா கதவுகளையும் இழுத்து மூடி விட்டார்கள் போலிருக்கிறது. யாரோ சொன்னார்களே ராஜா இன்னும் வரவில்லை என்று! ''அதெல்லாம் புருடா. அவராவது வருவதாவது'' என்று சிலர் சிரித்தார்கள்.

நிசப்த இரவில் யார் கதவை தட்டுகிறார்கள்? இந்த பேய் காற்றுதான் இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணுகிறது. விளக்குக்கு உத்தரவு கொடுத்துவிட்டு பேசாமல் தூங்குவோம்

''ஒருக்கால் யாரவது வந்திருப்பார்களோ. கதைவை தட்டுகிறார்களோ?'' என்கிறார் ஒருவர்.

''அதெல்லாம் இல்லை.இந்த காற்று தான் இப்படி அடிக்கடி தொந்தரவு செய்யும். பழைய மரக்கதவு. விரிசல் நிறைய. அப்படிதான் காற்றில் சத்தம் போடும். நீ தூங்கு ''

பட படவென்று கதவை இடிப்பது போல் நள்ளிரவில் சத்தம். இடி எங்கோ இடிக்கிறதோ?
நில நடுக்கமோ? சுவர்கள் கூட அசைகிறதே, ஆடுகிறதே? யாருக்குமே பயத்தில் தூக்கமே வரவில்லை;

''டேய், உனக்கு தேர்க்கால் சக்ரம் சத்தம் கேட்கவில்லையா? ''
''பேத்தல். மேகங்கள் முட்டிக்கொண்டால் அப்படி சத்தம் வரும் தெரியாதா உனக்கு ?

நேரம் மௌனமாக ஓடியது. திடீரென்று டமார சத்தம். தொடர்ந்து '' .எழுந்திருங்கள் எல்லோரும். சீக்கிரம். வெளியே எல்லோரும் ஓடினோம் வெளிச்சம் தெரிந்தது. காற்றில் ராஜாவின் கொடி வண்ண ஒளிவீசி ஆடுவது பார்த்தோம். எல்லோரும் அருகே சென்று நின்றோம். ''ஆஹா ராஜா வந்தாச்சு. நேரம் வீணாக்காதீர்கள் ஓடிவாருங்கள்.''

என்ன நடக்கிறது இங்கே! எங்கே ராஜா வந்தாச்சு? வெளிச்சத்தை காணோம். எங்கேடா மாலைகள்? எங்கே அவன் அமர சிம்மாசனம்? மண்டபம் எங்கே ? அலங்காரம் தோரணம் எதையுமே காணோம்?

ஒரு குரல் அமைதியாக தெளிவாக சொல்லியது. ''அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. அவனை உங்கள் கைகூப்பி அழையுங்கள். அது போதுமே. உங்கள் இடத்துக்கு அவனை அழைத்து செல்லுங்கள்.மறுக்காமல் வருவான் ''

ஜன்னல்,வாசல் கதவெல்லாம் திறந்து வையுங்கள். சங்கை எடுத்து ஊதுங்கள். நடு ராத்திரியாக இருந்தாலும் ராஜா நமது வசதிக்குறைவான வீட்டுக்குள் நுழைவான். மேலே படபடவென்று மேகங்கள்மோதி இடி மின்னல் இடித்தது. பளிச்சென்று மின்னல் கண்ணை பறித்தது. பட படவென்று இடி இடித்ததில் இருளே நடுங்குகிறது. ஓடு எங்கே உன் கிழிந்த ஓலைப் பாய்? விரித்து போடு சீக்கிரம். அவன் உட்காராமல் எத்தனை நேரம் நிற்பான். புயல், தான் வரும்போது, இந்த இருள் ராஜாவையும், ஆமாம் என் கருப்பு கிருஷ்ணனையும் கூட்டி வந்துவிட்டதே.!




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...