ஐந்தாம் வேதம் ஜே.கே. சிவன்
மஹா பாரதம்.
பாண்டவர்களும் அருகில் இருந்த ரிஷிகள் எல்லோரும் அமைதியாக ஆனால் ஆவலோடு கிருஷ்ணன் என்ன சொல்லப்போகிறேன் என்று காத்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணன் தான் எங்கே சென்றிருந்தேன் என்று விளக்குகிறான்.
''ஆமாம், யுதிஷ்டிரா உங்களுக்கு இந்த நிலை வரும்போது நான் துவாரகையில் இல்லை. இருந்தால் ஒருவேளை எனக்கு தெரிந்திருக்கலாம்.
நான் துவாரகையை அழிக்க முற்பட்ட என் எதிரி சால்வனைத் தேடிச் சென்றேன். சால்வ தேசத்தை அழித்து விடவேண்டும் என்ற முடிவோடு சென்றேன். நடந்த கதையைக் கேள். உனது ராஜசூய யாகத்தில் முறை தவறி என்னை இகழ்ந்த சிசுபாலனை நான் கொன்றதில், சால்வனுக்கு என்மீது கோபம். என்னை பழி வாங்க துடித்தான். படைகளோடு, துணை நின்றவர்களுடன் சேர்ந்து துவாரகை வந்திருக்கிறான். நான் உன்னோடு இந்த்ரப்ரஸ்தத்தில் ராஜசூய யாகத்தின் போது இருந்தேனா. என்னைத் தேடி ஏமாந்து, என்னை அவதூறாகப் பேசி,விட்டு, துவாரகையில் இருந்த அங்கே வ்ரிஷ்ணி குல வீரர்களை எல்லாம் கொன்றான். துவாரகை நந்தவனங்களை எல்லாம் அழித்தான். தீக்கிரையாக்கினான். புஷ்பக விமானம் ஒன்றில் என்னைத் தேடி அலைந்தான். நான் துவாரகை திரும்பி இதை அறிந்தேன். இனியும் பொறுத்து பலனில்லை. சால்வனை அழிப்பது தவிர வேறு வழியில்லை என தீர்மானித்தேன். அவனைத் தேடி சென்றேன். அவனை நடுக்கடலில் ஒரு தீவில் கண்டேன். பாஞ்சஜன்யத்தை சப்தப் படுத்தி என் வரவை அறிவித்து அவனுக்காக காத்திருந்தேன். இதற்கிடையில் தானவர்கள் பலர் என்னோடு மோதினார்கள். அவர்களைக் கொன்றேன். சால்வன் வந்தான். என்னோடு மோதினான். யுத்தம் நடந்தது எங்கள் இருவருக்கும். அவனைக் கொன்றேன். இப்போது புரிகிறதா நான் எங்கு சென்றேன் என்று.
துவாரகை திரும்பினேன். அப்போது தான் ஹஸ்தினாபுரத்தில் நடந்தது தெரிந்தது. இப்போது தெரிந்து கொண்டாயா நான் ஏன் துவாரகையில் இல்லை. எங்கு சென்றேன் என்று. வந்த பிறகு சேதி அறிந்து உன்னைக் காண வந்தேன்.
''கிருஷ்ணா எப்படி சால்வனைக் கொன்றாய்?' என்று கேட்டான் அர்ஜுனன்.
"ஸ்ருதஸ்ரவஸ் புத்திரன் சிசுபாலனை நான் கொன்றேன் என்று அறிந்ததுமே சால்வன் த்வாரகை வந்துவிட்டான். அவன் படைகள் சுற்றிலும் மேலேயும் சூழ்ந்தது. துவாரகையை முற்றுகை இட்டிருக்கிறான். துவாரகை எவரும் அணுகமுடியாதபடி நாலாபக்கங்களிலும் பாதுகாப்போடு அமைந்திருந்தது அல்லவா? . நிறைய பொறிகளும், இயந்திரங்களும், அஸ்த்ரங்களும் பொருத்தப்பட்டு இருந்ததால் எந்த ஒரு படையாலும் கோட்டைக்குள்ளே நுழையவழியில்லை. எனினும் சர்வ ஜாக்ரதையாக வீரர்கள் இருக்கவேண்டும் என்பதற்காக உத்தவனும் உக்ர சேனனும் , முன்னெச்சரிக்கையாக எவரும் குடி போதையில் இருக்ககூடாது என்று கட்டளையிட்டிருந்தனர். வீரர்கள் தைரியமாக தயார் நிலையில் இல்லாமல் இருந்தனர் எவரும் வரமுடியாதே என்று.
ஆகாய மார்கமாக சால்வன் படை திரட்டி எதிர்க்கவே சாம்பன், பிரத்யும்னன், மற்றும் வ்ரிஷ்ணி குல வீர்கள் அவனை எதிர்கொள்ள கோட்டையை விட்டு வெளியே வந்து போரிட்டனர். யுத்த களத்தில், சால்வனின் சேனாபதி க்ஷேமவ்ரித்தியோடு வ்ரிஷ்ணி குல வீரர்கள் மோதியிருக் கிரார்கள். என் மகன் சாம்பன் அவனை முறியடித்து ஓட வைத்திருக்கிறான். அந்த நேரத்தில் வேத் என்கிற ஒரு அசுரன் எதிர்த்தான். சாம்பன் அவனை கொன்றான். விவிந்த்யா என்ற மற்றொரு அசுரன் வந்துவிடவே,அவனை என் ருக்மிணியின் மகன் சாருதேஷ்ணன் எதிர்கொண்டான். எளிதில் அந்த அசுரனை வென்றான், கொன்றான் என் மகன்.
சால்வன் நிலையைப் புரிந்து கொண்டான். அவனது புஷ்பக விமானத்தில் பெரும் படையோடு துவாரகையில் நுழைய முற்பட்டான். அவனை என் மகன் பிரத்யும்னன் தனது படையோடு எதிர்த்தான்.
'பிறகு? ......
''எனது வீரர்களுக்கும் சால்வனின் படைக்கும் கடும்போர் ஒன்று நிகழ்ந்தது. சால்வனே ப்ரத்யும்ன
சால்வன் நிலையைப் புரிந்து கொண்டான். அவனது புஷ்பக விமானத்தில் பெரும் படையோடு துவாரகையில் நுழைய முற்பட்டான். அவனை என் மகன் பிரத்யும்னன் தனது படையோடு எதிர்த்தான்.
'பிறகு? ......
''எனது வீரர்களுக்கும் சால்வனின் படைக்கும் கடும்போர் ஒன்று நிகழ்ந்தது. சால்வனே ப்ரத்யும்ன
னோடு நேராக எதிர்த்தான். கடைசியில் பிரத்யும்னனின் ஒரு சக்தி வாய்ந்த சரம் ஒன்று சால்வனை வீழ்த்தி அவன் மயங்கி விழுந்தான். சால்வனின் வீழ்ச்சி அவன் வீரர்களையும் படையையும் விரட்டியது. அதற்குள் சால்வன் சுதாரித்துக்கொண்டு மீண்டு எழுந்தான். பலமாக தாக்கினான். பிரத்யும்னனைக் காயப் படுத்தி அவனும் மயங்கி விழுந்தான். வ்ரிஷ்ணி குல வீரர்கள் பிரத்யும்னன் காயமடைந்ததும் நிலை குலைந்தார்கள். தாருகனின் மகன் தான் தேரோட்டி னவன் . அவன் பிரத்யும்னனை ஜாக்ரதையாக திரும்ப கோட்டைக்குள் அழைத்துக்கொண்டு போகும்போது ப்ரத்யும்னன் மீண்டும் யுத்தகளத்துக்கு போ என்றான். தேரோட்டி ''இளவரசே சால்வன் பெரும்படையோடு வந்திருக்கிறான். அவனை எதிர்க்க தங்களால் இயலாது. தங்களைக் காப்பாற்றி ஒப்படைப்பது எனது பொறுப்பு என்று சொன்னான். பிரத்யும்னன் போரில் புறமுதுகு காட்டி ஓடியதாக பேர் எடுக்க விரும்பவில்லை. மீண்டும் சால்வனை எதிர்க்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறான்.
''காயம்பட்ட அரசனை காப்பது தேரோட்டியின் கடமை என்பதால் தான் நான் தேரை திருப்பினேன்' என்றான் தேரோட்டி.
பிரத்யும்னன் மீண்டும் யுத்தத்திற்கு ஆயத்தமானான். கடும்போர் மீண்டும் தொடர்ந்தது. சால்வனை அம்புகளால் துளைத்தான் பிரத்யும்னன். இரண்டாம் முறையாக தரையில் விழுந்தான் சால்வன். அவனைக் கொல்ல முயற்சிக்கும்போது நாரதர் முதலான தேவர்கள் தோன்றி ''பிரத்யும்னா சால்வனின் முடிவு .உன் தந்தையால் தான். அவனை உன்னால் வெல்ல முடியாது. திரும்பு '' என்றனர். சால்வனும் படுகாயமுற்று படையோடு திரும்பினான்.
''காயம்பட்ட அரசனை காப்பது தேரோட்டியின் கடமை என்பதால் தான் நான் தேரை திருப்பினேன்' என்றான் தேரோட்டி.
பிரத்யும்னன் மீண்டும் யுத்தத்திற்கு ஆயத்தமானான். கடும்போர் மீண்டும் தொடர்ந்தது. சால்வனை அம்புகளால் துளைத்தான் பிரத்யும்னன். இரண்டாம் முறையாக தரையில் விழுந்தான் சால்வன். அவனைக் கொல்ல முயற்சிக்கும்போது நாரதர் முதலான தேவர்கள் தோன்றி ''பிரத்யும்னா சால்வனின் முடிவு .உன் தந்தையால் தான். அவனை உன்னால் வெல்ல முடியாது. திரும்பு '' என்றனர். சால்வனும் படுகாயமுற்று படையோடு திரும்பினான்.
சால்வனின் படைகள் திரும்பிய நேரம் நான் உனது ராஜசூய யாகம் முடிந்து இந்த்ரப்ரஸ்தத்
திலிருந்து நான் துவாரகை அடைந்தேன். துவாரகை பொலிவிழந்து கிடந்தது. வேத சப்தம் கேட்கவில்லை. ஹோமத்தீ எங்கும் புகையவில்லை. நந்தவனங்கள் அழிக்கப்பட்டிருந்தன. வ்ரிஷ்ணி அனர்த்தாக்களின் எப்போதும் கேட்கும் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கவில்லை. கிருதவர்மன் என்னிடம் விவரம் சொன்னான். சால்வனின் படையெடுப்பு, பிரத்யும்னன் காயம் பற்றி அறிந்தேன். சால்வனைக் கொல்வது என்று முடிவெடுத்தேன். 'உக்ரசேனன், அனக துந்துபி ஆகியோரிடம் துவாரகையின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு சால்வனைத் தேடி சென்றேன்.''
கிருஷ்ணன் சொல்லி முடித்தது அங்கே அமைதி வெகுநேரம் நிலவியது. நடந்த சம்பவங்கள் எல்லோரையும் திடுக்கிட செய்திருந்தது.
No comments:
Post a Comment