எப்போதெல்லாம் தர்மம் வீழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நாம் மனிதகுலத்தை காக்க வருவேன்'' என்று கிருஷ்ணன் சொன்னது உலகமே அறிந்த ஒரு விஷயம். நாளுக்கு நாள் தர்மம் அழிந்துகொண்டே வருகிறது. எப்போதுமே கிருஷ்ணன் இங்கே இருக்கமுடியுமா? ஆகவே நாம் போய் எல்லாவற்றையும் சப்ஜாடா அழிப்பதற்கு முன்னால் அடிக்கடி சில பொறுப்பான ஆச்சார்யர்களை மனிதகுலத்தை சீராக்குவதற்கு அனுப்புவோம் என்று தீர்மானிக்கிறான். சில ஞானிகள் நமக்கு இப்படித்தான் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் மனிதனுக்கு ரெண்டு பக்கம். ஒன்று உலகவாழ்க்கை சுகம், வசதிகள்,இன்பம், மற்றொன்று ''உள்ளே'' அவனது வளர்ச்சி. தன்னை அறிந்துகொள்ள சில வழிகள். முதலாவது நிறைவேற மேலை நாடுகள் அதிகமாகவே உதவுகின்றன. நாகரிகம் என்ற பெயரில் எத்தனையோ மாறுதல்கள்,மாறுபாடுகள.மனிதன் உள்நோக்கி வளர ஆசியா கண்டத்தில் அதுவும் நமது பாரத தேசத்தில் அற்புத ஞானிகள் சிலர் தோன்றினார்கள்.வெளி வளர்ச்சிக்கு பணம் மட்டுமே தேவை.உள்வளர்ச்சிக்கு மனம் சீர்பட வேண்டும். ஆன்மிகம் உலக இயல்பான வாழ்க்கை ரெண்டுமே வெவ்வேறு திசையை நோக்குபவை.இணைக்க முடியாதவை. சின்ன குழந்தைகள் தங்களுடைய பொம்மையை ஒரு கணமும் விடாமல் தூங்கும்போது, சாப்பிடும்போது கூட கையில் வைத்துக் கொண்டே இருக்கும். அதன் உலகமே அந்த பொம்மை தான். உலக இன்பம் தேடுபவன் இந்த குழந்தை மாதிரிதான்.
துறவி, ஞானி தியானிப்பவன் எல்லோருமே,உலக இன்பம் தேடும் மேலைநாட்டவர்ககும், அவர்களை அப்படியே பின்பற்றும் நம்மவர்க்கும் 'சோம்பேறி, வேலையில்லாதவன், பைத்தியக்காரன், முட்டாள்' என்று தான் தோன்றுவார்கள்.
ஞானிகளும் துறவிகளும் அவ்வாறே வெளியுலக சுகம் வசதி தேடுபவனை''நிழலை தேடி,சாஸ்வத மில்லாததை நாடி,வாழ்வை வீணாக்குபவன்'' என்றுதான் புறக்கணிப்பார்கள். இது தான் ரெண்டுபக்க நிலை. உள் வளர்ச்சி உண்மையில் சிறந்தது. இயந்திரங்கள் வசதி சுகம் கொடுத்தாலும் அது கொடுக்கும் சந்தோஷம் மன அமைதியால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடாகாது. உலகத்தின் அத்தனை செல்வங்
களும் உன் காலடியில் குவிந்தாலும் உன் மனம் அலைமோதி அமைதி இன்றி இருந்தால் என்ன பிரயோஜனம்?மனத்தை வென்று இன்பம் பெறுபவன் தான் உண்மையில் செல்வந்தன்.வாழ்பவன்.உள் உலகம் வெளியுலகத்தை விட பன்மடங்கு பெரியது.
இப்படி 'உண்மையான' உலகத்தை நமக்கு அளித்து வாழக் கற்றுக்கொடுத்தவர் ஒருவர் தோன்றினார்.தானே வாழ்ந்து காட்டினார். மேனாட்டார் நம்மை பரதேசிகள், ஏழைகள், காட்டு மிராண்டிகள் நாகரிகம் அறியாதவர்கள் என்று ஏசினகாலம் உண்டு. புறவாழ்க்கை சுகத்தை நாடுபவர்களுக்கு நாம் அப்படித்தான் தெரிவோம். பொன் பொருள், குடி, மாமிசம், தூக்கம் ஒன்றே சுகம் என நம்புகிறவர்கள் அவர்கள்.பாவம் ஆன்மாவை அறியாதவர்கள்.
உண்மையான ஆன்மீக நாட்டம் கொண்டவன் முதலில் தன்னலம் மறந்து பொதுநலம், பிறர் நலம் கருதவேண்டும். அன்பு அதற்கு அடிப்படை தேவை. பிறர்க்குதவ என்னால் என்ன செய்யமுடியும்? என்ற எண்ணம் மனதில் ஊறிக்கொண்டே இருக்க வேண்டும்
அடுத்து எளிமை,போதும் என்ற மனம்,திருப்தி இருக்கவேண்டும்.எவ்வளவு பெரிய ராஜாவானாலும், செல்வந்தனானாலும் தன்னை ஒரு துறவியின், ரிஷியின் வழித்
தோன்றலாக (கோத்ரம்)சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறான்!! நாம் என்றுமே ஒரு பெரிய ராஜ வம்சம் என்று பெருமைப்பட விரும்பாதவர்கள்.ஒரு ஞானி, பக்தர்
தொண்டர், தியாகி, தர்ம காரியஸ்தரை முன்னோராக காட்டி பெருமைப்படு கிறவர்கள்.
அந்தக்கால பிராமணர்களில் பலர் ஆலய அர்ச்சகர்களாக வாழ்ந்தவர்கள், எளிமையான வாழ்க்கை.பக்தி ஒன்றே பிரதானமாக இருந்த காலம்.அவர்களில் ஒருவரை பற்றி இனி சொல்கிறேன்.
No comments:
Post a Comment