Monday, September 24, 2018

SWAMI DESIKAN 750



சுவாமி தேசிகன்  750   J.K. SIVAN 

                      சுவாமி தேசிகன் வரலாறு

மகான்களை,  மகோன்னத  புருஷர்களை,  கடவுளே  மனிதனாக  அவதரித்த  அபூர்வர்களை  பற்றி  எழுதும்போது ரொம்ப ரொம்ப   ஜாக்கிரதையாக  எழுதவேண்டும். பேசும்போது எண்ணி ஜாக்கிரதையாக மரியாதை குறையாமல் பேசவேண்டும்.  ஏதோ  நம் மோடு சேர்ந்து  வாக்கிங் வரும் வரதராஜனோ,  பேப்பரில்  வந்த செய்தியை  அலசும் பத்மநாபனோ அல்ல அவர்கள்.     தவறான செய்தி எதுவும் அவர்களைப் பற்றி வரக்கூடாது. பேசக்கூடாது.  இன்னொரு  விஷயம்.  நாம்  எடுத்துக்கொண்டு  ரசிக்கும் மஹான்கள்  பல  நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.  சரியான தகவல்கள் அவர்களை பற்றி  சேகரிப்பது கடினம்.  ஒவ்வொருவர் தமது கற்பனை, மனோபாவத்துக்கு பிடித்தவாறு  எழுதியோ, சொன்னதையோ  அப்பட்டமான உண்மை என்று எடுத்துக் கொள்ள கூடாது.  


சுவாமி தேசிகன் பற்றி நான் சேகரித்த விஷயங்கள் அ2ப்படி தான் இருந்தன.  பாதுகா ஸஹஸ்ரம்  அவர் எழுதிய  பின்னணி விஷயம்  சில  விஷமிகளால்  தவறாக சித்திரிக்கப்பட்டிருப்பதை பற்றி  கவலை கொண்டது  நான் மட்டும் அல்ல.   பல வருஷங்களுக்கு முன்பே ஒரு வைஷ்ணவ ஜாம்பவான்  ஸ்ரீ  உ. வே.  பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர் ஸ்வாமிகள் வருத்தத்தோடு  இதை  எழுதி இருக்கிறதை இன்று படித்தேன்.  இதற்கு  நான் முதலில் நன்றி சொல்லவேண்டியது அமெரிக்காவில் இருந்தாலும்  வைஷ்ணவ சம்பிரதாயத்தை  பொன்னே போல் போற்றி வளர்த்து வரும் ஒரு அருமையான மனிதர்   மரியாதைக்குரிய  ஸ்ரீ  வாசுதேவன்  ரங்காச்சாரி ஸ்வாமிகள்.  நான்போற்றும்  நல்ல நண்பர்.  பல வருஷங்களாக நான் நேரில் பார்க்காமலேயே அவரை அறிவேன்.  சுவாமி தேசிகன் பற்றி என் கட்டுரை பற்றி  படித்த அவர்  ''ஜாக்கிரதை சிவன், சில தவறான செயதிகள் உங்கள் மூலம்  பரவக்கூடாது என்று   எனக்கு  உடனே  ஸ்ரீ  உவே.  PBA  ஸ்வாமிகள்  எழுதிய   சுவாமி தேசிகனின்   ''வாழ்க்கை சரித்திரத்தை  அனுப்பினார்.    இந்த புத்தக தமிழ்  நமக்கு பரிச்சயமில்லாதது.  தவிர  அதிலிருந்து  என்னால்  மேற்கோள் எடுத்து காட்ட வழியில்லை,  தேனீ போல்  சுறுசுறுப்பாக  பல  நூல்களிருந்தெல்லாம்  சரியான நம்பக விவரங்கள் சேகரித்து  ஒரு நவரத்ன மாலையாக  அளித்திருப்பதால்  அந்த புத்தகத்தையே இத்தோடு இணைக்கிறேன்.  வைஷ்ணவர்களுக்கு மட்டுமல்ல  இது ஒவ்வொரு ஹிந்துவும்  அறியவேண்டிய  அற்புத மனிதரின்  வாழ்க்கை வரலாறு. ஒரு பழைய சின்ன  புஸ்தகம்.  

SORRY  THE BOOK  ''VEDHANTHA DESIKA VAIBAVAM''  COULD NOT BE ATTACHED AS A PDF.   INTERESTED MAY CONTACT ME WITH  WHATSAPP PHONE NO/EMAIL ID.     j.k. sivan 9840279080/jaykaysivan@gmail.com

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...