கிருஷ்ணன் பிறந்தநாள் சிறு விழா
26.8.2018 ஞாயிறு மாலை 4மணிக்கு :
ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட், நங்கநல்லூர், கிருஷ்ண ஜெயந்தியை சுருக்கமாக கொண்டாட குழந்தைகளையும் தாய்மார்களையும் அழைத்தது. சிறுவர்களுக்கு மஹாபாரதத்தில் 50 கேள்விகளை வினாத்தாளாக கொடுத்து அதில் 4 விடைகள். மூன்று நிச்சயம் தவறு.

சரியான விடை எழுதியவர்களுக்கு பரிசு கொடுத்ததோடு அல்லாமல் தவறுகள் என்ன என்பதை விளக்கி ஸ்ரீ ஜே.கே. சிவன் குட்டி மஹா பாரத பிரசங்கம் செய்தார். பெண்கள் குழந்தைகள் வந்திருந்த மற்ற பெரியவர்கள் அனைவருமே ஆளுக்கொன்று கிருஷ்ணன் மேல் ஒரு கீதம் இசைத்து அனைவருக்கும் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட சுண்டல் விநியோகமும், ஸ்ரீ கீரனுர் ராமமூர்த்தி வழங்கிய கீதாச்சார படம், ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் வெளியிட்ட நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ரோட்டரியன் ஸ்ரீ K சுந்தரராஜனும் ஸ்ரீ சூர்யநாராயணனும் கலந்துகொண்டார்கள். ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன் வரவேற்புரை நிகழ்த்த பேராசிரியர் ஸ்ரீ R . கணபதி சுப்பிரமணியன் வினாடி வினாவை நடத்தினார்.
இளைஞர் அணி சார்பாக ஜே.கே. தியாகராஜன் நன்றியுரை நிகழ்த்த கிருஷ்ணன் பிறந்தநாள் விழா கொஞ்சம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ந்த இடம்: ஸ்ரீ சூர்யநாராயணன் இல்லம்: NO 20, முதலாவது மெய்ன் ரோடு, ராம்நகர், குருவாயூரப்பன் ஆலயம் எதிரில்.
No comments:
Post a Comment