சூர் சாகரம் ஜே.கே. சிவன்
கால் பிடித்தேன் கை தூக்கு
படிப்புக்கும் ஒருவருடைய பக்திக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. படிப்பு எவர் மூலமோ எதையோ கற்றுக்கொள்வது. பக்தி தானாகவே ஊற்று போல் இதயத்தில் சுரந்து மனதை நிரப்புவது. இளநீர் கோக்ககோலா ஒன்றாகுமா? சூர்தாஸ் கண்ணற்றவர், கல்வியற்றவர் என்று உலகம் சொல்லும். அவர் அகக்கண் எப்போதும் திறந்தே இருந்தது. பிரபஞ்சத்தை அதில் கண்டு வியந்தது. அந்த பிரபஞ்சம் சர்வம் க்ரிஷ்ணமயமாக இருந்ததைத்தான் அனுபவித்தார். பக்தி பல வேதங்கள் உபநிஷதங்களை அவர் மனதில் விதைத்தது. அந்த கலவையில் உருவான அவரது சில பாடல்களை தான் நாம் ஆனந்தமாக ரசித்து ருசித்து வருகிறோம். பிடிக்கிறதா?
Abki maadhava mohi ubaar
Listen toAbki maadhava mohi ubaar
Magan hau bhava ambunidhi mein kripa sindhu murar
Neer ati gambhir maaya lobh lahe tarang
Liye jaat agadh jal mein gahe grah anang
Kaam krodh samet trishna pavan ati jhakjhor
Nahi chitvan det tiya suta naam nauka ore
meen indriya atihi kaatat mot agh sir bhar
Pag na it ut dharan paavat urajhi moh sewar
Thakyo jaani behal bihwal sunhu karuna mool
Shyam bhuj gahi kadhi daaryo sur braj ke kool
கிருஷ்ணா, மாதவா நீ ஒன்று செய். என்னை இட்டுச் செல். வண்டியில் வைத்து ஓட்டிச்செல். நீ தான் ரதம் ஓட்டுவதில் தேர்ந்தவனாயிற்றே. படகில் கடத்திச் செல். நீ கருணைக் கடல். இந்த பவசாகரத்திலிருந்து என்னை மீட்டுச்செல். இந்த உலக வாழ்வு எனும் ஜலப்ரளயம் என்னை மூழ்கடிக்கிறது.

சமுத்திரத்தில் அலைகள் நுரைத்து மேலெழும்புமே அதுபோல் இந்த சம்சார கடலில் பேராசை அலைகள் அங்கும் இங்குமாக நிலை கொள்ளாமல் தூக்கி எறிகின்றன. இது போதாதென்று காமவெறி என்ற நீர் வாழ் முதலைகள் பசியோடு எல்லோரையும் விழுங்க காத்திருக்கின்றன.
அடேயப்பா, இந்த வெறி, கோபம்,பேராசை எல்லாம் சூறைக்காற்றுகள் என்றும் சொல்லலாம். உன் நாமத்தை நினைக்கவே விடாமல் வேறு பக்கம் ஒருவனை உலக வாழ்க்கையில் இழுப்பவர்கள் தான் மனைவியும் பிள்ளை குட்டிகளும். உன்னை மட்டும் நான் மனதில் பூரணமாக நினைத்து மகிழ்வேனானால் இந்த உலக மாயை என்னை என்ன செய்யும்?
குளங்களில் கால் வைத்தவர்களுக்கு, ஆற்றில் குளிப்பவர்களுக்கு நன்றாக தெரியும், குட்டி குட்டி மீன்கள் வெடுக் வெடுக் என்று காலை உடம்பை எல்லாம் நமநம வென்று கடித்து அழுக்கை தின்னும். ஒருபக்கம் சுகமாக இருக்கும், ஒரு பக்கம் அருவருப்பாக இருக்கும். இந்த ஐம்புலன்களின் தொந்தரவு அப்படித்தான். சதா ஏதாவது பிடுங்கிக் கொண்டே இருக்கும். என் பல ஜென்ம சேமிப்பான பாவ மூட்டை வேறு சுமக்கிறேன். எப்படி நான் வேகமாக நகரமுடியும். பாசி எப்படி நீர்நிலையில் படிகளில் நீரில் ஒட்டிக்கொண்டிருக்கிறதோ அப்படி ஆழ்ந்து போய் நான் உலக வாழ்வின் வாதனைகள் சோதனைகளில் பிரிபட முடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டேனே.
அப்பா கிருஷ்ணா, என் நிலையை உணர்ந்து என் களைப்பை அறிந்து, பரிதாபமாகவாவது என் மேல் கொஞ்சம் கருணை வை. என் குறையை கொஞ்சம் காது கொடுத்து கேளேன்.
No comments:
Post a Comment