ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (275 - 288) -J.K. SIVAN
भानुमण्डल मध्यस्था,
भैरवी, भगमालिनी ।
पद्मासना, भगवती,
पद्मनाभ सहोदरी ॥ 65 ॥
Bhanumandala madhyasdha
bhairavi bhagamalini
Padmasana bhagavati
padmanabha sahedari – 65
பாநுமண்டல மத்யஸ்தா
பைரவீ பகமாலிநீ |
பத்மாஸநா பகவதீ
பத்மநாப ஸஹோதரீ || 65
उन्मेष निमिषोत्पन्न
विपन्न भुवनावलिः ।
सहस्रशीर्षवदना,
सहस्राक्षी, सहस्रपात् ॥ 66 ॥
Unmesha nimishotpanna
vipanna bhuvanavalih
Sahasrashirshavadana
sahasrakshi sahasrapat – 66
உந்மேஷ நிமிஷோத்பந்ந
விபந்ந புவநாவளீ |
ஸஹஸ்ரசீர்ஷ வதநா
ஸஹஸ்ராகஷீ ஸஹஸ்ரபாத் || 66
आब्रह्म कीटजननी,
वर्णाश्रम विधायिनी ।
निजाज्ञारूपनिगमा,
पुण्यापुण्य फलप्रदा ॥ 67 ॥
Aabramhakitajanani
varvashrama vidhaein
Nijagyna rupanigama
punyapunya phalaprada – 67
ஆப்ரஹ்ம கீட ஜநநீ
வர்ணாச்ரம விதாயிநீ |
நிஜாஜ்ஞாரூப நிகமா
புண்யாபுண்ய பலப்ரதா || 67
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (275-288) அர்த்தம்
* 275 * பாநுமண்டல மத்யஸ்தா -- ஸ்ரீ லலிதாம்பிகையின் இருப்பிடத்தை சூரியமண்டலத்தின் மத்தியில் என்கிறார் ஹயக்ரீவர். சாந்தோக்ய உபநிஷத் (I.vi.6) என்ன சொல்கிறது? '' சூரியனின் மண்டலத்தில் வீற்றிருக்கும் தககக வென்று தங்கமாக ஜொலிக்கும் தெய்வத்தை யோகிகள் காண்பார்கள்'' என்கிறது. அனாகத சக்ரத்தை ் சூரிய மண்டலம் என்று எடுத்துக் கொண்டால் அதில் ஜொலிக்கும் தெய்வம் தான் குண்டலினியாகிய அம்பாள்.
* 276 * பைரவி. சிவனை பைரவன் என்று போற்றும்போது அம்பாள் பைரவியாகிறாள். உன்னத ப்ரம்ம சக்தி ஸ்வரூபம். இந்த ஈரேழு லோகங்களை பரிபாலிக்கும் காவல் தெய்வங்கள் பைரவ பைரவி சக்தி. பன்னிரண்டு வயது பெண்ணை பைரவி என்போம்.
* 277 * பகமாலிநீ -- ''பக '' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. நல்லதிர்ஷ்டம், சந்தோசம், சௌகர்யம், வளம், சுகம், கெளரவம், கம்பீரம், தனிப்பெருமை, உயர்வு, அழகு, போன்று சில அர்த்தங்கள் அதில் அடக்கம். பகமாலினி ஒரு திதி நித்ய தேவி. பதினைந்து திதி நித்ய தேவிமார்கள் உண்டு. சந்திரனின் ஒவ்வொரு நாளும் திதி என்கிறோம். அதில் ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவி. ஸ்ரீ சக்ரா நவாவரண பூஜையில் இவர்களை உபாசிக்கிறோம். லிங்கபுராணம் (I.99.6, 7) ''பக என்பவள் இந்த பிரபஞ்ச தாய். சிவலிங்கத்தின் ஆவுடையார் அவள் '' என்கிறது. ஆவுடையார் மேல் ஆரோகணித்திருப்பது லிங்கம். சிவசக்தி தத்வம்.
* 278 * பத்மாஸநா -- தாமரைமேல் வீற்றிருப்பவள் அம்பாள் எனும் நாமம் இது. ஆசனங்களில் பத்மாசனம் என்பது தாமரை மலரைப் போல் அமர்வதை குறிக்கும் அல்லவா?. ஒரு கால் மற்றொரு தொடை அடிபாகம் வரை மடங்கி இருக்கும். யோகிகள் அமர்வது இப்படித்தான். நம்மால் அப்படி பழக்கமில்லாமல் உட்காரமுடியாது.
*279* பகவதீ -- அம்பாள் பரிபூரணமான புனிதத்தன்மை கொண்டவள். சிவனின் சகல சக்தியும் தனதானவள். பகவான் என்றால் ஆறு சக்திகளை, குணங்களை உடையவர் என்று பொருள். அவை, உயர்ந்த தலைமை பொறுப்பு, நேர்மை, புகழ், ஞானம், அறிவு பாகுபாடு. அம்பாள் இவை அனைத்தையும் தன்னிடத்தே கொண்டவள். ஏனைய தேவதைகள் உப தெய்வங்களால் வணங்கப்படுபவள். ஆகவே பகவதி.
*280* பத்மநாப ஸஹோதரீ - அம்பாளுக்கு விஷ்ணுவின் தங்கை என்று ஒரு நாமம். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் விஷ்ணு முன்னிலையில் நடக்கும் சித்திரங்களை சிற்பங்களை பார்க்காதவர்கள் உண்டா? ப்ரம்மா- லட்சுமி, விஷ்ணு- உமா, சிவன்- ஸரஸ்வதி ஆகியோர் இரட்டையர்கள். இந்த ஜோடிகள் தான் ஸ்ரீஷதி ஸ்திதி லய காரியங்களை பொறுப்பேற்பவர்கள். ஒன்றின்றி மற்றொன்றில்லை.
*281* உந்மேஷ - உன்மேஷ என்றால் கண் இமைகளை திறப்பது. நிமேஷ் என்றால் இமைகளை மூடுவது. - கண்மூடி கண் திறப்பதற்குள் என்று சொல்கிறோம் அல்லவா?. அது நேரத்தை குறிக்கும். சிருஷ்டி ஸ்திதி லயம் அந்த வேகத்தில் நடைபெறுகிறது. அம்பாள் கண் திறந்தால் பிரபஞ்சம் உருவாகிறது. சற்றே கண் மூடினால் மறைகிறது. (விபன்னா) . சர்வ சாதாரணமாக இதை இயக்குகிறாள் அம்பாள். சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 55 இதை தான் சொல்கிறது: ''அம்பாளின் கண் மூடி கண்திறக்கும் நேரத்தில் ப்ரபஞ்ச தோற்றம் மறைவு நிகழ்கிறது என்று யோகிகள் ரிஷிகள் அறிவார்கள் ''
*282* ஸஹஸ்ரசீர்ஷ வதநா - ''எனக்கு ஆயிரம் வேலை இருக்கு' என்றால் சரியாக ஆயிரம் என்று அர்த்தம் இல்லை. நிறைய, அநேக என்று தானே புரிந்து கொள்கிறோம். அம்பாள் லலிதை எண்ணற்ற முகங்கள் உடையவள். பாரதியார் ஆயிரம் கண்ணாள் என்பார். ஒவ்வொரு ஜீவனிலும் அம்பாள் இருக்கிறாள் என்றால் எத்தனை தலைகளை எண்ணுவது? புருஷ சூக்தம் '''சஹஸ்ர சீருஷ புருஷ'' என்று எண்ணற்ற சிற்பங்களை குறிக்கிறது. மஹா நாராயண உபநிஷதம் (I.13) ''பிரம்மனுக்கு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மகன்கள், கைகள், அங்கங்கள் '' என்கிறது.
*283* ஸஹஸ்ராக்ஷி - ஆயிரம் கண்ணாள் என்ற இந்த நாமம் மேலே சொன்னதை தான் குறிப்பிடுகிறது. .he has thousands of eyes. Viṣṇu Sahasranāma 226 also conveys the same meaning.
*284* ஸஹஸ்ரபாத் -- புருஷ சூக்தம் ஆயிரம் பாதங்கள் உடைய என்று சொல்கிறதே அதே தான் இது. விஷ்ணு சஹஸ்ரநாமமும் (284) இதையே தான் சொல்கிறது. பஞ்சதசி முதல் கூடமும் இதை தான் குறிப்பிடுகிறது.
*285* ஆப்ரஹ்ம கீட ஜநநீ - இந்த நாமம் எதைசொல்கிறது என்றால் அம்பாள் ஸ்ர லலிதை ப்ரம்மா முதல் கண்ணுக்கு தெரியாத சிறிய வண்டு வரையில் சகல ஜீவன்களை ஸ்ரிஷ்டிக்கிறாள். பெரிது முதல் சிறிது வரை சகல ஜீவன்களையும் படைப்பவள்.
*286* வர்ணாச்ரம விதாயிநீ - வாழ்வின் வரைமுறையை, வாழும் வகையை நிர்ணயிப்பவள் சர்வ சக்தி கொண்ட அம்பாள். அவரவர் ஞானத்தை, வித்வத்தை, தன்மையை, தகுதியை, அனுசரித்து பொறுப்பை வகைப்படுத்துபவள். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஈடுபட்டால் சுபிக்ஷம் நிலவும் என்று அறிவுறுத்த இந்த ஏற்பாடு.
*287* நிஜாஜ்ஞாரூப நிகமா - அம்பாள் தன்னுடைய கட்டளைகளை வேத ரூபமாக வெளிப்படுத்துகிறாள். வேதம் எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்துகிறது. வேதம் சொல்வதனைத்தும் ஒருவனால் நிறைவேற்றமுடியாது. அதற்கென்று பலர் தேவை. பொறுப்பை பகிர்ந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவற்றை தான் ரிஷிகள் முனிவர்கள் யோகிகள் எடுத்து சொல்கிறார்கள்.
*288* புண்யாபுண்ய பலப்ரதா- புண்யம் என்பது நல்லவை, சரியானவை, சிறந்தவை, நேர்மையானவை, உண்மையானவை. அபுண்யம் என்பது அதற்கு எதிர்மாறானது. அதை பாபம் என்கிற தலைப்பில் வரிசைப்படுத்துகிறோம். அவரவர்க்கு அவர்கள் செய்த வினைப்பயனை அளிப்பவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். தினை விதைத்தவன் காலாகாலத்தில் தினை அறுவடை செயகிறான். வினை விதைத்தவன் பாவம் அதை தானே திரும்ப அதிகமாக தனக்கே பெறமுடியும். ப்ரம்ம சூத்ரம் (II.i.34) ''எல்லாவற்றையும் நன்றாக பரிசீலித்து எந்த பாரபக்ஷமும் இல்லாமல் பகவான்/அம்பாள் பரிபாலிப்பதை வேதங்கள் காட்டுகிறது
No comments:
Post a Comment