Friday, August 10, 2018



இப்படியுமா நடந்தது? --  J.K. SIVAN 






மஹான்களை  கூட சிலர் விட்டுவைக்காத போது நம்மை பிறர் குறை கூறும்போது எதற்கு அதை மனதில் கொண்டு உணர்ச்சி வசப்பட வேண்டும்.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் எவ்வுயிர்க்கும் தீங்கு   எண்ணாத பெருந்தகை. காருண்யத்தின் மனித உரு. வாடிய பயிரைக்கண்டாலே வதங்கும் உள்ளம் கொண்டவர். அவர் இயற்றிய  அருட்பா ஒரு ஏமாற்று வித்தை, அதை ''மருட்பா'' .   மருள் என்றால்  மாயை.  கண்கட்டு வித்தை காட்டுபவரின் பாக்கள் என்று நீதிமன்றம் தீரப்பு அளிக்கவேண்டும் என்று வழக்கு போட்டவர்  சாதாரணர்   அல்லர். இலங்கை தமிழறிஞர்  ஆறுமுக நாவலர்.   வழக்கு நீதிமன்றம் வந்தது. மஞ்சக்குப்பம் மேஜிஸ்திரேட் முன்னர்  வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

''சிதம்பரம் அருகே கருங்குழியை சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை, ஏதோ ஒரு வைராக்கியத்தாலே சாமியாராகி, சென்னப்பட்டிணம்  போய் அங்கே சில பாடல்கள் எழுதினார். தாம் சிவாநுபூதி பெற்றவர் என்று உலகம் நம்ப தன்னை புகழ  அந்த பாடல்களுக்கு  அருட்பா என்று பெயர் சூட்டினார். .
தன்னை திரு அருட்ப்ரகாசம்  பெற்ற வள்ளலார் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார். தமது மாணவர் ஒருவரை விட்டு எழுதி அவற்றை  பிரசுரித்து புத்தகமாக்கி விற்று பணம் சம்பாதித்தார். அறிவிலிகள் அதை நம்பி தேவாரம் திருவாசகத்துக்கு ஈடாக்கி ஆலயங்களில் சிவதரிசனத்தின் போது ஓதுகிறார்கள்.''
என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றி ஆறுமுக நாவலர்  ' போலி அருட்பா மறுப்பு''  என்று ஒரு நூல் எழுதினார்.  அதில்   ராமலிங்கம் பிள்ளை என்பவர்  அப்பர் சுந்தரர் மணிவாசகர்  போன்ற சமயாச்சாரியார்களுக்கு  ஈடாக  சமம் என்றால் அவர்களும் இவரைப்போலவே அல்லவோ போலி அருள் பெற்றவர்களாக  பொய்யாகி, பக்தர்கள் வேதனைப்படுவார்கள் என்று வள்ளலாரை எதிர்த்தார். .

நாவலரும் வள்ளலாரும் சிதம்பரத்தில் ஒரு சமயம் நேரடியாக சந்தித்தார்கள்.  சிதம்பரம் தீட்சிதர்களுக்கு நாவலரை பிடிக்காது. எனவே வள்ளலாரை உபயோகித்து நாவலரை அவமதிக்க ஒரு கூட்டம் கூட்டினார்கள்.  சிதம்பரத்தில்  1869  சுக்ல வருஷம் ஆனி மாதம்   உத்தரம் நக்ஷத்திரம் அன்று கூட்டம் நடைபெற அதில் நாவலரும் வள்ளலாரும்  அழைக்கப்பட்டு  பங்கேற்றார்கள்.  வள்ளலார் உட்பட பலர் நாவலரை அவமதித்து பேசியதாக அடிக்கக் கூட முற்பட்டதாக செயதி ஒன்று பேரம்பல பிரசங்கம் என்று வெளியாகியது.

இதை தொடர்ந்து மஞ்சக்குப்பம் என்கிற ஊரில் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு  வள்ளலார் மேல் தொடர்ந்தார்க ஆறுமுகநாவலர் ஆதரவாளர்கள்.    நாவலரை அவதூறாக வள்ளலார் அந்த கூட்டத்தில் ஒன்றும் பேசவில்லை என்று வள்ளலார் தரப்பினர் கூறினார்கள்.

அன்று மஞ்சக்குப்பம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கூட்டம் அம்முகிறது.  மாஜிஸ்திரேட் வந்து இருக்கையில் அமர்கிறார். கேஸ் எடுக்கப்படுகிறது.  டவாலி  ''ஆறுமுக நாவலர் '' என்று மூன்று முறை அழைக்கிறான். அவர் நுழைகிறார்  நீதிபதியை  வணங்குகிறார்.  அவர் வக்கீல் பக்கத்தில் அமர்கிறார். அடுத்து  டவாலி ''சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை '' என்று மூன்று முறை உரக்க கூவினதும் எங்கும் ஒரே அமைதி. காற்று கூட நின்று விட்டது.  வெள்ளை ஆடை ஒன்றை தலையை சுற்றி உடலை மூடி இரு கரங்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு அந்த தெய்வீக மனிதர் உள்ளே நுழைகிறார்.  அப்போது என்ன நடந்தது 


யார் வழக்கு தொடுத்தாரோ அந்த ஆறுமுக நாவலர் எழுந்துஇரு கரம் கூப்பி  யார் மீது வழக்கு பதிவானதோ அந்த பிரதிவாதியை வணங்குகிறார்.  அவரைச்சேர்ந்தவர்களும் அவ்வாறே வணங்குகிறார்கள்.  ஒரு இயந்திரம் மாதிரி அந்த மேஜிஸ்திரேட் தானாகவே ஆசனத்திலிருந்து எழுந்து இரு கரம் கூப்பி  வழக்கு தொடுக்கப்பட்டவரை வணங்குகிறார்.  வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.  

உண்மையோ பொய்யோ, அன்று தீர்ப்பளித்த மேஜிஸ்திரே  ஸர்  T . முத்துசாமி ஐயர். பின்னர் சென்னை நீதிமன்றத்தின் பிரிட்டிஷ் கால முதல் தமிழர்  நீதிபதி. அவர் சிலை  சென்னை நீதிமன்றம் வாசலில் இருக்கிறது.  காக்கைகள்  பறவைகள் அசிங்கம் பண்ணுவதை ஆள் வைத்து  அடிக்கடி சுத்தம்செய்யலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...