Saturday, August 4, 2018


பட்டினத்தார்  --    J.K. SIVAN 
              சந்நியாசி புறப்பட்டார் 







காதறுந்த ஊசியும் கடைவழி வாராது காண்''. நறுக்கு ஓலையில் எழுதியிருந்த இந்த வாக்கியம் திருவெண்காடரை முற்றிலும் புரட்டிப்போட்டுவிட்டது. வெகுநேரம் கண்களில் நீர் மல்க அந்த வாக்கியத்தை ஆயிரக்கணக்காக சொல்லிக்கொண்டே இருந்தார். கொஞ்சமாக உள்ளே இறங்கிய அந்த வாக்கியத்தின் அர்த்தம் மனதை நிரப்பி அவரை வேறாளாக்கி விட்டதே.  அன்னம் ஆகாரம் உட்கொள்ளவில்லை.  மெதுவாக எழுந்தார். தனது அறையில் நுழைந்தார்.  எண்ணற்ற செல்வம், திரவியம், பொன் பொருள் எல்லாவற்றையும் சுற்றி பார்த்தார்  சிரிப்பு விரக்தியாக வந்தது. ஒரு வஸ்திரத்தை எடுத்தவர் அதை கிழித்தார். ஒரு கோவணமாக   அதை அரையில் உடுத்தினவர்  வெளியே ஒரு கப்பரை  ஓட்டை தேடி எடுத்துக் கொண்டார். இனி திருவெண்காடர் சன்னியாசி. வீடு வாசல் சுற்றம், உற்றார் உறவு எதுவுமில்லை.  ஓருவேளை பிக்ஷை.  தமிழில் பிச்சை.   அதுவே உணவு.  வானமே கூரை. பூமியே பாய்.    

அவரை வாசலில் கோவணாண்டியாக பார்த்த தாய்க்கு எப்படி இருக்கும்.  ஆனால் சிலநாளாக அவனிடம் தெரிந்த மாற்றம் அவளை இதை எதிர்பார்க்க வைத்தது.  

அவளை வணங்கினார். 

''  உன் தாத்தா யாரிடம் சன்யாசம் வாங்கினாரோ  அவரிடமே   போ. உனக்கும் சன்யாசம் தரட்டும்.'' என்றாள் 
'' சரி அம்மா''
''இங்கே வா''   அவர் போகுமுன் அவர் இடுப்பில் அரை ஞாண் கயிறில்  ஒரு சிறிய விபூதி பையை கட்டி விட்டாள் .

''இது எப்போது அறுந்து விழுகிறதோ அப்போது என்னை நினைத்துக்கொண்டு என்னிடம் வா. அது என் முடிவு என உனக்கு உணர்த்தும் ''
இனி அவரை பட்டினத்தார்  என்று அழைப்போம்.  வாழ்க்கையில் முதலில் குருகுலம் அப்போது சென்றார். 
குரு  பட்டினத்தாரை  எதிர்பார்த்துக்கொண்டிருந்தது போல் வரவேற்றார்.  தீக்ஷை அளித்தார்.திருவோடு அவர் கரத்தால்  பெற்றார். 

துறவியான பட்டினத்தார்  முதல் பிக்ஷையை தாயின் கரத்தில் பெற விழைந்தார். வீடு நோக்கி சென்றார். வாசலில் நின்றார். அவர் மனம் பேசியது.  பாடலாக வெளிவருகிறது பாருங்கள். எவ்வளவு விரக்தி அதில் கரைந்திருக்கிறது. 

''வீடிருக்க தாயிருக்க வேண்டு மனையாள் இருக்க
பீடு இருக்க ஊண் இருக்க பிள்ளைகளும் தானிருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த பொருளிருக்க
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே

''அடேய்  உன்னை இப்போது பார்த்தாயா.  வீடு, வாசல், அம்மா, மனைவி, புகழ், நல்ல உடம்பு, பிள்ளைகுட்டி, பசு, கன்றுக்குட்டி, மூன்று தலைமுறைக்கு செல்வம், எல்லாம் இருக்கிறது.    உயிரோடு தான் இருக்கிறாய் உடல் இருக்கிறது. அந்த உடல் எங்கே இந்த உடல் இப்போது எப்படி  பார்த்தாயா?

அம்மா வெளியே வந்து சந்நியாசி மகனை பார்க்கிறாள் 
''என்னடா  நீ  இன்னும்  பழைய திருவெண்காடனா, பணக்காரனா?

''எதற்கு அம்மா இப்படி என்னை பார்த்து கேட்கிறாய் ?' நான் எல்லாம் துறந்துவிட்டேனே''

''வீடு உனக்கு அந்நியம்  ஆகிவிட்டதே.  ஆனால்  ஓடு உனக்கு சொந்தம் ஆகிவிட்டதே அப்பா!""

''ஓஹோ.  இந்த திருவோடு ஒரு சொந்தமான பொருள் ஆகிவிட்டதே. நான் பிச்சைக்காரன் இல்லை. சந்நியாசி. எனக்கு எதற்கு என்று   கையில் இருந்த திருவோட்டை தூர எறிய  முற்பட்டபோது தாய் தடுத்தாள் .

''வேண்டாம் எறியாதே . அது தானாக உன்னிடம் வந்தது. நீ தேடி அடையவில்லை. என்றாவது தொலைந்தால் தேடாதே.  இந்தா  பிக்ஷை''  ஒரு கவளம் சோறு. பெற்றார் பட்டினத்தார். காவிரிப்பூம் பட்டினத்தை விட்டு வெளியேறுமுன் அவர் சகோதரி வீடு சென்றார். வாசலில் நின்றார். அங்கே என்ன நடந்தது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...