Thursday, August 9, 2018

LALITHA SAHASRANAMAM


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (334 - 352)   -  J.K. SIVAN

विश्वाधिका, वेदवेद्या,
विन्ध्याचल निवासिनी ।
विधात्री, वेदजननी,
विष्णुमाया, विलासिनी ॥ 75 ॥

Viswadhika Vedavedya
Vindhyachala nivasini
Vidhatri Veda janani
Vishnu maya Vilasini

விச்வாதிகா வேதவேத்யா
விந்த்யாசல நிவாஸிநீ |
விதாத்ரீ வேதஜநநீ
விஷ்ணுமாயா விலாஸிநீ || 75

क्षेत्रस्वरूपा क्षेत्रेशी 

क्षेत्र-क्षेत्रज्ञ-पालिनी ।
क्षयवृद्धि-विनिर्मुक्ता 
क्षेत्रपाल-समर्चिता ॥ ७६॥
க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலிநீ |
க்ஷயவ்ருத்தி விநிர்முக்தா
க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா || 76

விஜயா விமலா வந்த்யா வந்தாரு ஜந வத்ஸலா |
வாக்வாதிநீ வாமகேசீ வஹ்நிமண்டல வாஸிநீ || 77

                             ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (334 -352)  அர்த்தம்

334* விஸ்வாதிகா -- ஸ்ரீ லலிதாம்பிகையே எந்த தத்வத்தால் அடையாளம் காணலாம்?  எல்லா தத்துவங்களும் அவளே. அவற்றைக் கடந்து நிற்பவளும் அவளே அல்லவா? நாம் எல்லோரும் கடைசி வரிசையில் நிற்பவர்கள். ஏதோ ஒரு தத்துவத்தில் பிணை, பிடி, பட்டவர்கள்.    சிவ தத்வத்திலிருந்து ஆரம்பித்து ப்ரித்வி தத்வம் வரை  36 தத்வங்கள் இருக்கிறது. அம்பாள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள்.i

*335*   வேதவேத்யா -   பாரதியார் பாடுவார்  ''ஓதும் வேதத்தின் உட்பொருள் ஆவாள்'' என்று  அதே தான். அம்பாளை அப்படி தான்  உணரமுடியும்.  ''அர்ஜுனா எல்லா வேதங்களும் என்னை பாடுகின்றன. அந்த வேதமே நான் என்பதால் நானறிய வேதமில்லை ''  என்கிறான் கிருஷ்ணன் (
Gīta XV.15).ஞானமிருந்தால் தான் வேதம் புரிபடும்.   அம்பாள் ஸ்ரீ லலிதையின்  ஸ்ரீ சக்ரத்திற்கு நான்கு வாசல், ஒவ்வொன்றும்  ஒவ்வொரு  வேதம். 

*336* விந்த்யாசல நிவாஸிநீ  -  விந்திய மலையில் வாசம் செய்பவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமம் மூலம்.  அவளை ''ஹிமகிரி தனயே''  என்றும்  ஹிமவான் புத்ரி என்றும் நாம்  அம்பாளை ஒரு பக்கம் போற்றுவோம். அவள் தான் சுத்த ப்ரம்மம் ஆயிற்றே.  நாம் எப்படிவேண்டுமானாலும் அவளை போற்றலாம் பாடலாம். விண்டவர் நாம் கண்டிலர் அல்லவா?  துர்கா சப்தசதியில் அம்பாள் சொல்வது போல் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா ?'' (XI.41)   ''நான்  நந்தகோபன் வீட்டில் பிறந்து வளர்வேன். விந்தியமலையில் வாழ்வேன், அப்போது தான்  சும்ப நிசும்பர்கள் எனும்  இரண்டு ராக்ஷஸர்களை  சம்ஹரிப்பேன்'' 
அம்பாள் விஷ்ணு சகோதரி.

*337* விதாத்ரீ  -   இந்த உலகைத்  தாங்குபவள்.  தாத்ரி என்றால் தாய்மை.  இந்த உலகத்தின் தாய் என்பதால் தான் நாம் அம்பாளை லோக மாதா என்கிறோம் என்று புரியுமே இப்போது.  தாத்ரி என்றால்  நெல்லிக்கனி யையும் குறிக்கும்.  அம்பாளுக்கு பிடித்தது.  மஹாலக்ஷ்மிக்கு பிடித்தது நெல்லிக்கனி, நெல்லிமரம்.   கனாக தாரா ஸ்தோத்ரம் நினைவுக்கு வருகிறதா. ஒரு காய்ந்த நெல்லிக்கனிக்கு  ஆதிசங்கரர்  மஹாலக்ஷ்மில்லியை ஸ்தோத்ரம் செய்ய  அந்த ஏழை பிராமண பெண் வீட்டில் தங்கமலை, பொன்மாரி பெய்யவைத்தாலே. எல்லாமே தங்க நெல்லிக்கனிகள் .

*338* வேதஜநநீ
*   வேதங்கள்  பிறக்க காரணி  ஸ்ரீ லலிதாம்பிகையே.  பிரணவ சப்தமாக ஒலித்த பிரம்மத்தை வேதங்களாக ரிஷிகள் அறிய அருளியவள் அம்பாள்.  ப்ரம்மஸ்வரூபிணி அம்பாளின் மூச்சே  வேதங்களாயின.

*339*  விஷ்ணுமாயா  -  விஷ்ணுவின்  மாயையாக இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பா.   நாராயண சூக்தம்  ''விஷ்ணு நம் உள்ளும், வெளியிலும்  காண்பவர் '' என்கிறது.  சத்வ ரஜோ தமோ குணமாக  மாயை நிலவுகிறது. இந்த மூன்று குணங்கலிருந்தும் விடுபட என்னை சரணடை'' என்கிறார் கிருஷ்ணன் கீதையில் ( VII.14)
*340* 
 விலாஸிநீ  -  சிவனோடு இணைவதில் ஆர்வமாக விருப்பமாக உள்ளவள் அம்பிகை. அலகிலா விளையாட்டுடையார் அல்லவா சதானந்தன்.

க்ஷேத்ரஸ்வரூபா  -   குறிப்பாக  க்ஷேத்ரம் நமது தேகம். க்ஷேத்ரஞன்  அதில் குடியிருக்கும் இறைவன்/இறைவி. இரண்டும் ஒன்று தான்.  க்ஷேத்ரம் கண்ணுக்கு தெரிவது. க்ஷேத்ரஞன் அருவம். 

க்ஷேத்ரேசீ -   எண்ணற்ற இந்த ஜீவராசிகளின் தேகங்களை க்ஷேத்ரமாக கொண்டு வாசம் செய்பவள் ஸ்ரீ லலிதாம்பா.  க்ஷேத்ரஞன் சிவன். க்ஷேத்ரேஸி  அம்பாள்.
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலிநீ -   அனைத்து தேகங்களையும்  பரிபாலிக்கின்றவள் காத்தருள்பவள்  ஸ்ரீ அம்பாள்.  காளிதாசன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறான்.''ஜகதத் பிதரௌ  வந்தே பார்வதி பரமேஸ்வரௌ ''  இந்த அவனிக்கு   புவனத்திற்கு தாய் தந்தை  பார்வதி,  பரமேஸ்வரர்கள் தான். அவர்களை வணங்குவோம்''

க்ஷயவ்ருத்தி விநிர்முக்தா -  அவள்  கூடவும் இல்லை குறையவுமில்லை. என்றும் ஒரே நிலையாக அழிவற்று உள்ளவள் என்று இந்த நாமம் உணர்த்துகிறது.   ஹயக்ரீவர் சொல்வது தப்பாகுமா?. ''அர்ஜுனா, கேள், ஆத்மாவுக்கு  தோற்றமோ மாற்றமோ, மறைவோ கிடையாது. அழிக்கமுடியாதது, நித்தியமானது. நல்ல கர்மாத்தால்  வளர்வதோ தீய கர்மத்தால் குறைவதோ அல்ல. 

க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா - க்ஷேத்ரங்களை பரிபாலிக்கின்றவர்களால் வணங்கப்படுகிறவள் அம்பாள்.  அவள் தான் க்ஷேத்திரம், க்ஷேத்திரஞன்  இரண்டையுமே பரிபாலனம் செய்பவள்.
விஜயா  --   ஜெய விஜயீ  -  எவராலும் வெல்லமுடியாதவள் -  ஒன்பது நாள் தவமிருந்து மகிஷாசுரனை வென்றதால் தானே  விஜய தசமி.  ஸ்ரீ சக்ர உபாசனையில்  திதி நித்திய தேவி, விஜயா என்ற நாமம் உண்டு.

விமலா -  புனிதமானவள், பரிசுத்தமானவள். ஞானத்தின் எல்லை.  மலம் என்றால் மாசு, அழுக்கு, நிர்-மலம் என்றால் மாசற்ற,சுத்தமான என்று அர்த்தம் அல்லவா?  நமது மனத்தில், அஞ்ஞானம் தான் மாசு, அதை போக்குபவள் அம்பாள்.

வந்த்யா -   எல்லோராலும் பூஜிக்கப்படுபவள், வணங்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.  மனதை சுத்தமாக கொண்டு அவளை வணங்கினால், தியானித்தால்  உடலில் ஒரு அதிர்வு ஏற்படும். உணரமுடியும்.  நினைத்த காரியம் கைகூடும் சக்தி பிறக்கும். 
வந்தரு ஜந வத்ஸலா -  தன்னை வேண்டுவோருக்கெல்லாம் அன்பை பாசத்தை தருபவள்.  சேய் மேல் தாய்க்கு பாசம் இருப்பது சொல்லவா வேண்டும் ?

*350*  வாக்வாதிநீ -    அம்பாளின்  வார்த்தைகளின் சக்தியை, பலத்தை, விவரிக்க இயலாது. வாக் தேவி என்று பெயர் அதால் தானே. எதிர்க்க  தடுக்க ஒரு வார்த்தை இன்னும் பிறக்கவில்லை !
வாமகேசீ  -   வாமகேஸ்வரன் பத்நி .  பரமேஸ்ஸ்வரன் சிவன்  உண்டாக்கிய 28 தந்திரங்களில் ஒன்று  வாமகேச தந்திரம்.  இதில் அம்பாளை உபாசிப்பது மட்டுமே வரும். வாமகன்  என்றால் மனிதன்.  பரமேஸ்வரன் வாமகேஸ்வரன்.  வாமகேசன்.  அம்பாள் வாமகேசி.  பைரவர் பைரவி மாதிரி.  ஸமஸ்க்ரிதம்  ஒரு கடல். வாம  என்பதற்கு இன்னும் சில அர்த்தங்கள் உண்டு:  அழகிய, அற்புத,  சிவன், துர்கா, லக்ஷ்மி ,சரஸ்வதி, அழகி, மனைவி, இடது பாகம்  போதுமா?   ''பரமேஸ்வரா, நீங்கள் எனக்கு  64 கலைகள்  பற்றி உபதேசித்தீர்கள், 28 தந்திரங்கள் பற்றி சொல்லவில்லையே என்றபோது சிவன் உரைத்த 28 தந்திரங்களை பற்றி நாமும்  பார்வதி தேவியோடு சேர்ந்து அறிகிறோம்.



இன்று சக்தி பீடத்தில் ஒரு ஆலயம் பற்றி சில வரிகள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...