Tuesday, August 28, 2018

SUR SAGARAM



சூர் சாகரம்                             J.K. SIVAN 

எழுந்திரடா  குழந்தே 


சூர்தாசுக்கு  கண் தெரியாது என்று நாம் நினைத்தால்  நாம் தான் குருடர்கள். மனக்கண் அற்புதமாக  பல யுகங்கள் தாண்டி பார்க்கிறது.   குட்டி கிருஷ்ணனை தொட்டியிலிருந்து  யசோதை எழுப்பும் காட்சியை எவ்வளவு அற்புதமாக  வர்ணிக்கிறார் பார்க்கலாமா?  இந்தியோ  வ்ரஜ பாஷையோ  நமக்கு தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எவரோ மொழிபெயர்த்ததை தான் ரசிக்க முடிகிறது: அதை தமிழில் அனுபவிப்போம்.


 wake up , Krishna,                                                                                                   

awake the lotus-petals                                                                                            open the water-lilies droop
 the bumblebees have left
the creepers cocks crow,
and birds chirp on the trees.
The cows are in the byre lowing;
they run after their calves;
the moon fades before the sun.
Men and women arise
and joyfully sing their songs;
Krishna, of hands lotus-like awake,
for the day is about to dawn.  
  
பொழுது புலர்ந்து விட்டது . எழுந்திரு கிருஷ்ணா, சீக்கிரம்.  விழித்துக் கொள்.  இதைப்பார். எவ்வளவு அழகாக  தாமரை மலர்கள் மொட்டு அவிழ்கிறது.  அதோ  அல்லி மலர்களும் எவ்வளவு  தேன் வண்டுகளை வயிறு நிரப்பி வழி அனுப்புகிறது. கொடிகள் காற்றி அசையும்போது சிறு சிறு பறவைகள் ஊஞ்சலாடிவிட்டு பறக்கின்ற அழகைப் பார்.  கொக்கரக்கோ சப்தங்கள் கேட்கிறதா?  சொல்லிவைத்தாற்போல்  எல்லா சேவல்களும் ஒரே மாதிரி ஸ்வரத்தோடு சப்தமிடுகின்றன.  சப்த ஜாலங்கள் என்றால் மரங்களில்  கூவும்  பறவைகளின் வினோத ஒலிகள் தான். அம்மா  அம்மா என்று  அடிவயிற்றிலிருந்து எழும்பும் பசுக்களின் குரல் கன்றுகளை சந்தோஷப்படுத்துகிறது. அவிழ்த்து விட்டவுடன் கன்றுக்குட்டிகள் எவ்வளவு  ஆசையாக தாவி தாவி அம்மாக்களை தேடுகிறது. சூரியன் கிழக்கே எழும்பியதால்  சந்திரனின் சாம்ராஜ்யம்  முடிவுக்கு வருகிறது.  கோபி கோபியர்கள் அன்றாட கடமைகளை துவங்க தொடங்கிவிட்டார்கள். அட எவ்வளவு இனிமையாக பாடிக்கொண்டே அவர்கள் சந்தோஷமாக தங்களது வேலைகளை செய்கிறார்கள்.  எழுந்திரடா  குட்டி கிருஷ்ணா, உன் தாமரை மலர் போன்ற திருகைகளை நீட்டு  தூக்கி விடுகிறேன். எழுந்திரு.''




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...