வைணவ ஆச்சார்யர்கள். - J.K. SIVAN
சுவாமி தேசிகன்
வைராக்ய பஞ்சகம்
எந்த ஸம்ஸ்க்ரித ஸ்லோகத்தை பார்த்தாலும் (சிலர் 'படித்தாலும்' ) ''ஆஹா,ஆதி சங்கரருக்கு ஈடு ஏது என்று சொல்பவர்கள் சிலரை சந்தித்திருக்கிறேன். நிகமாந்த தேசிகர், என்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்றும் தேசிகன் சுவாமி என்றும் வைஷ்ணவர்கள் பூஜிக்கும் சுவாமி தேசிகன், எழுதியது வைராக்கிய பஞ்சகம் .
அவர் நண்பன் '' இங்கே வா, மைசூர் மகாராஜா கிட்டே சொல்லி உனக்கு வேலை வாங்கித் தரேன் சம்பளம் நிறைய கிடைக்கும், வரியா?'' என்று தேசிகருக்கு ஒரு ஓலை அனுப்பினான். அவனுக்கு பதில் தான் இந்த ஸ்லோகம். நமக்கும் ஒரு பொக்கிஷமாக அமைந்தது.
'நண்பா, தேசிகா, நீ அன்றாடம், பொழுது விடிந்து, தெருவெல்லாம் சுற்றி உஞ்சவ்ருத்தி எடுத்து பிழைக்கும் கஷ்டம் என் கண்களில் நீரை வரவழைக்கிறதே, நான் இங்கே சௌக்யமாக இருக்கிறேன். என்னை ஆஸ்தான வித்வானாக ஆதரிக்கும் விஜயநகர மன்னனிடம் உன்னைப் பற்றி கூறுகிறேன், உடனே உனக்கும் இங்கே என் போல் வசதி பெற வழி செய்கிறேன். உடனே வருகிறாயா? என வித்யாரண்யன் சுவாமி தேசிகனுக்கு அழைப்பு விடுகிறான்.
நாமாக இருந்தால் இந்த மாதிரி சிநேகிதனைப் பெற்றதற்கு வானளாவ மகிழ்வோம். ''நீயல்லவோ உயிர் நண்பன்'' என்று அடுத்த ரயிலில் போய் நிற்போம்.
ஆனால் ஒன்று, தேசிகர் நம் போல் இருந்திருந்தால் இன்றும் உலகம் அவரை நினைவில் வைத்திருக்குமா?. அவனுக்கு உடனே பதில் செய்தி 5 சுலோகங்களாக அனுப்பினார். அவை தான் வைராக்ய பஞ்சகம். அவற்றையும் அவற்றின் உள்ளர்த்தமும் கொடுக்கப் பட்டுள்ளது.
क्षोणी कोन सथंस पालन कला धुर्वर गर्वनलक्षुभ्यतः,
क्षुध्र नरेन्ध्र चदु रचन धन्यान न मन्यामहे,
देवं सेविथुमेव निस्च्छिनुमहे योअसौ दयालु पुरा,
धन मुष्टि मुचे कुचेल मुनये धत्थेस्मा वित्थेसथ. 1
kshoNI koNa shatAmshapAlanakalA durvAra garvAnala
kshubhyat kshudra narendra chAtu rachanA dhanyAn na manyAmahe |
devam sevitumeva nischinumahe yosau dayAlu: purA
dhAnAmuShTimuche kuchelamunaye dattesma vitteshatAm || 1
மேலே கண்ட ஸ்லோகத்தின் அர்த்தம் புரிய வேண்டுமானால் ஒரே வரியில் புரிந்து கொள்ள அடையாளம். ''நிதி சால சுகமா'' என்று தியாகராஜ சுவாமிகள் தெலுங்கில் பாடியது தான். தஞ்சாவூர் ராஜா 'என் மேல் பாடு உனக்கு நிறைய பொன் தருகிறேன்' என்று யானை குதிரை பல்லக்கு எல்லாம் அனுப்பினான். ''உன் நிதி எனக்கு வேண்டாமே. ராமனைப் பாடும் அவன் சந்நிதி சுகமொன்றே போதுமே'' என்றாரல்லவா தியாக பிரம்மம். அதே போலவே தியாகராஜருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சுவாமி தேசிகன் நினைத்திருக்கிறார்.
முதல் ஸ்லோக அர்த்தம்
-- எந்த ராஜாவும் உலக முழுதும் நிரந்தரமாக ஆண்டதில்லை. ஏதோ ஒரு சிறிய பகுதி நிலத்துக்கு அதிபதியாக இருந்தும் இறுமாப்பு. தன்னைப் புகழவேண்டும் என்று பணத்தை வீசி எறிந்து ஏழைக் கவிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், இந்த மாதிரி மன்னர்களை பலர் சந்திரர்களாக, சூரியர்களாக, இந்திரனாக ஏட்டில் பாடி வைத்து நாமும் அவற்றை படிக்கிறோம்.
வேதாந்த தேசிகர், தியாகையர் போன்றோர் இந்த வகைப் புலவர்களோ கவிஞர்களோ அல்லவே. பரம பாகவதர்கள். பகவானைத் தவிர எதையுமே துச்சமாக மதிப்பவர்கள். நரனைப் பாடுவதை விட நாராயணனைப் பாட முனைந்தவர்கள். அவனுக்கு தெரியுமே எது நமக்கு வேண்டும் என்று மறவாமல் உணர்ந்தவர்கள்.
''அப்பா வித்யாரண்யா (இது தான் சுவாமி தேசிகன் நண்பன் பெயர்) குசேலன் ஒரு ஏழை பிராமணன். கிருஷ்ணனின் பால்ய நண்பன். கிருஷ்ணனைப் பார்க்க த்வாரகை போகிறார். குசேலன் தன்னிடமிருந்த அவல் பொட்டலத்தை கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்குள் கிருஷ்ணன் ஆர்வமோடு அதை அவரிடமிருந்து பறித்து உண்டு அவன் வாயைத் திறந்து எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க எண்ணம் வருவதற்கு முன்னாலேயே குசேலனை குபேரனாக்கினார் .
शिलं किमनलं भवेथनलं ओउधरं भधिथुं
पय : प्रस्रुथि पूरकं किमु न धारकं सरसं
याथन मलमल्लकं पति पदच्छरं कच्चरं
भजन्त्ह्य विभुधमुध ह्यहह कुक्षिथल् कुक्षिथ : 2
silam kimanalam bhavet analam audaram bAdhitum
paya:prasruti pUrakam kimu na dhArakam sArasam |
ayatnamalamallakam pathi paTachcharam kachcharam
bhajanti vibudhA mudhA hyahaha kukshita: kukshita: || 2
'ஐயோ இது என்ன கொடுமை. கேவலம். நன்றாக படித்து கற்றுணர்ந்த மேதைகள் கூட, அல்ப வாழ்க்கை சுகத்திற்காக செல்வம் நிறைந்தவனிடம் போய் கை கட்டி நின்று அவனை புகழ்ந்து இல்லாததை இருப்பதாக சொல்லி, சோற்றுக்கும், நீருக்கும், உடுக்க உடைக்கும் கையேந்தும் நிலை ஏன்? தன்னுடைய பாண்டித்தியம் சரஸ்வதி கடாக்ஷம் எல்லாவற்றையும் கேவலம் வயிற்றுப்பசிக்காக அடகு ஏன் வைக்கவேண்டும்? தமது உண்மையான உயர்ந்த ஸ்வரூபத்தை ஏன் மறக்க, மறைக்க வேண்டும்?. ஒருவேளை ஒளவைக்கிழவி பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று இந்த நிலையைத்தான் சொன்னாளோ?
உயிர் வாழ என்ன தேவை, ஒரு உள்ளங்கை ஜலம். வயலில் சிதறி இருக்கும் அரிசி மணிகள் சில போதுமே பசியைப் போக்க. ஒரு கிழிசல் துண்டு துணி கோவணமாக உடுத்த கிடைத்தாலே போதுமே மானத்தை மறைக்க. இந்த எளிமையான தேவை தனக்கும் மற்றவர்க்கு உதவவும் கூட போதுமே.'' என்கிறார் சுவாமி தேசிகன்.
ज्ञ्वलथु जलधि करोड क्रीडतः कृपीद भव प्रभा,
प्रथिबद पदुज्वल मलकुलो जदरनल,
थ्रुनमपि वयं सायं संपुल्ल मल्ली मःतल्लिक,
परिमलमुच वच याचामहे न महीस्वरान. 3
Jvalatu jaladhikroDa krIDat krupIDa bhavaprabhA
pratibhaTa paTujvAlAmAlAkulo jaTharAnalaH |
truNamapi vayaM sAyaM sampulla mallimatallikA
parimaLamuchA vAchA yAchAmahe na mahIshvarAn || 3
''நடு சமுத்ரத்தில் அக்னி ஒரு பெண் ஜீவனாக உருவாகி, மழையாக, அருவிநீராக, சமுத்ரத்தில் சேரும் அதிக பக்ஷ ஜலத்தை ஆவியாக்கி மேலே அனுப்புகிறான். ஒரு கட்டுப்பாட்டுக்குள் தேவையான அளவு நீரை மட்டுமே சமுத்ரத்தில் விட்டு வைப்பதால், அது கரை தாண்டி வெளியேற வழியேது?
வித்யாரண்யா, சமுத்ரத்தில் மட்டும் அல்ல, நமது வயிற்றிலும் ஒரு அக்னி இருக்கிறதே, ஜாடராக்னி. பசி வந்தபோது உன்னை திகு திகு வென்று சுட்டெரிக்குமே அது. நாம் உண்பதை செரிமானம் (ஜீரணம்) பண்ண அது உதவுகிறதே. அது வளர்ந்து மேலும் மேலும் என்னை பசியால் வாட்டினாலும் நான் என் பசி தீர, உணவு தேடி, பொருள் தேடி, ஒருவனிடம் எதையும் யாசகம் கேட்டு கை கூப்பி நிற்கமாட்டேன். என் வாக்கு கேவலம் ஒரு நரனைப் புகழ்ந்து பாட அல்ல. அது சாதாரணமல்ல, மாலையில் மலரும் நறுமண மல்லிகை வாசம் கொண்டது. அந்த மல்லிகையின் நறுமண வாசம் எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உபயோகமாகும். எனவே என் நாக்கில் வாக்கில் உருவாகும் ஸ்லோகங்கள் நாராயணன் ஒருவனுக்கே சொந்தம். நாராயணனைப் பாடாத நாவென்ன நாவே!
ढुरीस्वर धवर बहिर वितर्धिका,
धुरसिकायै रचिथोयं -अञ्जलि,
यधज्ञानाभं निरपयमस्थ्य मे,
धनञ्जय स्यन्धन भूषणं धनं. 4
durIshvara dvAra bahirvitardikA
durAsikAyai rachitoyama~njali: |
yada~njanAbham nirapAyamasti me
dhana~njaya syandana bhUShaNam dhanam || 4
''வித்யாரண்யா, நீ உன் ராஜாவின் தனம் செல்வம் என்று ஏதோ ஆசை காட்டினாயே, நான் என்னிடம் இருக்கும் தனத்தை, செல்வத்தை பற்றி ஒரு வார்த்தையில் சொல்கிறேன் கேட்கிறாயா? .
'' என் செல்வம் கருநீல நிறம், அழியாதது, குறையாதது, அதை நீ பார்த்திருப்பாயே, குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனன் தேரில், அழகு பிம்பமாக அதை, தேர் ஓட்டும்போது. இந்த குறைவற்ற செல்வம் என்னிடம் இருக்கையில் வேறு எது இதற்கு ஈடாகமுடியும், அல்லது எனக்கு தேவை, நீயே சொல்?
''வித்யாரண்யா, கை கூப்பி வணங்கி 'ஸாரி' சொல்கிறேன்,
நான் எங்கோ எவன் வீட்டு திண்ணையிலோ கை கூப்பி வணங்கி அவன் ஏதாவது கொடுக்கமாட்டானா என்று ஏங்குபவன் இல்லையே அப்பா.'' என்ன ஒரு மன வைராக்கியம் சுவாமி தேசிகனுக்கு பார்த்தீர்களா.
सरीर पथनवधि प्रभु निषेवन अपधणतः,
अभिन्धन धनञ्जय प्रसमधं धनं धन्धनं
धनञ्जय विवर्धनम् धनं उधुद गोवर्धनं
सुसधानं अबधानं सुमनसां समरधानं 5
SareerapathanAvadhi prabhu nishEvaNaapAdhanAth
abhindhana Dhananjaya praSamadham dhanam dhandhanam
dhananjaya vivardhanam dhanam UdhUDa gOvardhanam
susAdhanam aBAdhanam sumansAm samArAdhanam
வறுமையால் மதியிழந்து பசிதீர்க்க, அவ்வை சொன்னாளே ''இடும்பை கூர் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' என்றவாறு, ஜாடராக்னிக்கு இரை போட்டு அதை ஜீரண வேலை செய்ய விடுவதற்காக செல்வம் தேட வேண்டுமா? ஒரு கை ஜலம் போதும் என்று சொன்னேனே, பசி தீர்க்க, களைப்பை போக்க. இதை விட்டு, எவனிடமோ பணம் இருக்கிறது என்பதற்காக தன்மானம் விட்டு வணங்கி சிரம் தாழ்த்தி கரம் குவித்து அப்படியாவது இந்த உடலைக் காக்க வேண்டுமா என்ன?
நான் சொன்னேனே என்னிடம் இருக்கும் 'அந்த' செல்வம் என்ன செய்தது மறந்து விட்டாயா? மன வியாகூலத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனை தேர் தட்டின் மேலே அமர்த்தியது, மழையிலிருந்து மக்களை , மாக்களைக் காக்க மலையையே தூக்கியது (கோவர்தனகிரி ), நல்லோர் மனம் நிறைந்து இருக்கிறது. சரியான பலன் தரும் சாதனம் வேறு எது?
No comments:
Post a Comment