Friday, May 25, 2018

KUDHAMBAI CHITHTHAR





  குதம்பாய், சொல்கிறேன் கேள். 

                           J.K. SIVAN 



இன்று கொஞ்சம் குதம்பை சித்தரின் ரெண்டு அடி  எளிய வார்த்தைகளை பாடுவோமா. 


 ஒரு அருமையான சித்தர் அவர். அர்த்தமே தேவை இல்லை தான். எனினும் ஒரு வரி கூட இணைத்திருக்கிறேன். ​


தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
     நாடி வருவதுண்டோ? குதம்பாய்
     நாடி வருவதுண்டோ?102

​(அகட விகட சாமர்த்தியம் செய்து சேர்த்தாயே  அந்த செல்வம் கடைசியில் உன்னோடு  வந்ததா? எங்கே)​


போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
     சாம்போது தான்வருமோ? குதம்பாய்
     சாம்போது தான்வருமோ?103


​   (நீயே சாம்பல், நீ  அலைந்து தேடியத்து ஒரு துளியாவது உன்னோடு........?)​


காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
     தூசேனும் பின்வருமோ? குதம்பாய்
     தூசேனும் பின்வருமோ?104


​(உலகமே ஜெயித்த  அலெக்சாண்டர் கூட  கையை விரித்து  ஒன்றுமில்லை என்று தானே சொல்லி போனான்? ஒரு தூசு கூட  ஒட்டிக்கொண்டு வராது )​


உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
     பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
     பெற்றார்துணை யாவரோ?105

​(இவ்வளவு பெரிய கும்பல் உன் சொந்தம் உன்னோடு இருந்ததே, அதெல்லாம் எங்கே?)​


மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
     பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
     பொய்ப்பணி ஏதுக்கடி?106


​(எது சாஸ்வதம், எதை உண்மையாக நம்பவேண்டும் என தெரியாமல்  வாழ்வில் நாடியது எல்லாம் பொய் , வீண். அது எதற்கு?)​


விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
     மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
     மண்ணாசை ஏதுக்கடி?107
(
​இறைவனை தேடாமல் இரையை தேடி, சொத்து சேர்த்து என்ன பயன்?)​


சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
     யானையும் நில்லாதடி! குதம்
பாய்
     யானையும் நில்லாதடி!108

​(நாலு வித  சேனைகள் நிறைய கொண்ட ராஜாவும் கூட  பட்டத்து யானை இல்லாமல்  நாலு பேர் தூக்க தனியாக தான் போகவேண்டும்)​


செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
     தங்காது அழியுமடி! குதம்பாய்
     தங்காது அழியுமடி!


​(விரிந்த சாம்ராஜ்யத்துக்கே  ராஜா தான்,  அது நிலையானதா, சாஸ்வதமானதா, பிரியாததா?)​

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
     செல்வன் நிச்சயமே குதம்பாய்
     செல்வன நிச்சயமே.111

​(இப்போது கேள்.   நல்லது தீயது அறிந்து, நல்லோர் பின் சென்றவன் செய்த நல்வினை தான் அவன் கூட செல்லும் )


செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
     எய்த வருவனவே குதம்பாய்
     எய்த வருவனவே.112


​(ஒருவன் செய்த தவம், அவன் செய்த பாபங்கள், அவன்செய்த தர்மம்  இவற்றின் பலன் மட்டுமே அவனோடு செல்பவை) ​


முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
     பத்தியும் பின்வருமே குதம்பாய்
     பத்தியும் பின்வருமே.113


(​அடியே பெண்ணே குதம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...