தாகூர். கீதாஞ்சலி: J.K. SIVAN
I am here to sing thee songs. In this hall of thine I have a corner seat.
In thy world I have no work to do; my useless life can only break out in tunes without a purpose.
When the hour strikes for thy silent worship at the dark temple of midnight, command me, my master, to stand before thee to sing.
When in the morning air the golden harp is tuned, honour me, commanding my presence.
நான் மனம் குளிர்ந்து இருக்கிறேன் கிருஷ்ணா. இப்போது மூன்று பாட்டு பட உத்தேசம். இதோ உன்னுடைய பெரிய விசாலமான `மண்டபத்தில் ஒரு மூலையில் அமர்ந்து இருக்கிறேனே தெரிகிறதா? உன் சாம்ராஜ்யத்தில், உலகத்தில் எனக்கு ஒரு வேலையும் கிடையாது. என் உபயோகமற்ற வாழ்வில் என்னால் முடிந்தது வெறும் பாட்டாக நான் அறிந்த ராகமாக பாடுவது ஒன்றுதான். உன்னை வழிபடும் நேரத்தில், நள்ளிரவில் எங்கும் இருளில் உன் ஆலய மணி டாண் டாண் என்று ஒலிக்குமே , அப்போது என்னை உன் எதிரில் எழுந்து நின்று வழிபட பாட வைக்கிறாயா? அதே போல் விடிகாலை பொன்னிற வெயில் சூரிய கதிர்களாக உதிரும்போது கதிரவனின் தங்க யாழ் கம்பிகள் ஒளிருமே , அப்போது ''வா என் எதிரில்'' என்று என்னை கூப்பிடுகிறாயா? ஓடி வருகிறேன்.''
I have had my invitation to this world's festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument, and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?
இந்த உலகம் ஒரு விசித்திர விழா மண்டபம். நிறைய நிகழ்ச்சிகள். எனக்கும் ஒரு அழைப்பு வந்து தானே நான் பிறந்திருக்கிறேன், வாழ்கிறேன், அனுபவிக்கிறேன். நான் பாக்கியசாலி தானே. என் கண்கள் நிறைய காட்சிகளை ரசிக்கிறது. காது நிறையவே என்னென்னவோ செயதிகள், பாட்டுகள் பேச்சுகள் எல்லாம் கேட்கிறது. எல்லோரையும் போல் எனக்கும் இந்த வாழ்க்கை விருந்து நாடகத்தில் ஒரு வேஷம் இருக்கிறதே. நான் என் வாத்யத்தை எடுத்துக்கொண்டு வந்து பாடட்டுமா . என்னால் முடிந்ததை எல்லாம் குறைவின்றி செய்கிறேனே. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறாயா கிருஷ்ணா? என் அரங்கேற்ற நேரம் வந்துவிட்டதா, நான் வரட்டுமா உன் முகம் தரிசிக்கமுடியுமா, வார்த்தை;இன்றி ஒரு மௌன அஞ்சலி செலுத்தட்டுமா?
No comments:
Post a Comment