Tuesday, May 15, 2018

HUMOUR



கொளுத்தும் வெயிலில் கொஞ்சம் சிரிப்போமா? J.K. SIVAN நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பது சில பொன்மொழிகள் நம்மிடம் இன்றும் இருப்பதிலிருந்து புரியும். வோட்டுப்போட்டால் மட்டும் ஜெயிக்க முடியாது. சில கழுதைகள் ஒன்று சேர்ந்து நாங்கள் ஜாஸ்தி என்று காட்டி காட்டுக்கு அரசனாக முடியும். அப்பறம் தான் குடுமி பிடி சண்டை. நான் தான். இல்லை நான் தான். அது கிடக்கட்டும். நாம் பழமொழிகளை மட்டும் இங்கே பார்த்து ரசிப்போம் ஆட்டுக்கு முன்னாலே போகாதே. குதிரைக்கு பின்னாலே போகாதே. ஒரு முட்டாளின் எந்தப்பக்கத்திலும் நெருங்காதே. ( Don't approach a goat from front, horse from back, & a fool from any side.) முட்டாள்கள் பெரிய தவில் மாதிரி. பலமாக சத்தம் வரும். உள்ளே காலியாக இருக்கிறது என்று அறைந்து போவார்கள். ( A fool is like the big drum that beats fast but doesn't realize its hollowness.) இந்த அக்கப்போர் கலவர பீதி செய்திகள் எப்போதும் நிலைப்பதில்லை, காலில்லாதவை; ஒரு காதில் நுழைந்து வேறு ரூபங்களில் இன்னும் பல வாய்கள் வழியாக வெளியேறும். ( A rumor goes in one ear and comes out in many mouths.) ஜாக்கிரதை. பேசாமல் இருப்பவன் குளிக்காத நாய் -- அருகிலேயே போகாதே (Beware of a man that does not talk and a dog that does not bark). நிறைய தடவை நான் ஏமாந்து பல கி.மீ அலைந்திருக்கிறேன். வழி தெரியாவிட்டால் ஒருவன் சொல்வதை மட்டும் நம்பாதே. ஒன்றுக்கு ரெண்டாக பலரிடம் கேட்டுவிட்டு பெட்ரோல் மிச்சம் பண்ணு. நேரம் வீணாக்காதே (Better to ask twice than to lose your way once.) ஆற்றைக் கடக்கும் வரை முதலையார் சார் பற்றி தரக்குறைவாக பேசாதீர்கள் ( Don't insult the alligator until you've crossed the river) குரங்குக்கு என்னதான் புது பட்டு புடவை நகைகள் அணிவித்தாலும் அவள் திருமதி குரங்கம்மாள் தானே ( Dress the monkey in silk and ...... it is still a monkey) ''சார் எனக்கு நாம் கேட்ட அந்த ஆன்மீக பிரசங்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை''என்று குப்பண்ணா சொன்னால் சாருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று தானே அர்த்தம் (he who knows nothing, doubts nothing.) சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்க கற்றால்மட்டும் போதாது. எப்படி விழுவோம், விழுந்தால் என்னவாகும் என்றும் கொஞ்சம் தெரியவேண்டும். (It's not enough to know how to ride - you must also know how to fall.) ஒரு கூட்டத்தில் பலர் பேசும்போது நீ வாய் மூடி மௌனமாக இருந்தால் நீ மிகவும் விஷயம் தெரிந்த அடக்கமாக இருக்கும் ஞானி என்று நினைப்பார்கள். (in a conference Keep quiet and people will think you a philosopher.) இது முக்கியம். மனைவிஇடம் காய் ஓங்காதே, அடிக்காதே, ஒரு பூவினால் கூட. விளைவு மிகப்பெரிய ஆபத்துக்கு ஆளாவாய்.( Never strike your wife,..... even with a flower.) பாகற்காயை கடித்ததும் தான் சர்க்கரையின் அருமை புரியும் (Only when you have eaten a bitter gourd do you appreciate what sugar is.) வெற்றியும் ஓய்வும் ஒரே படுக்கையில் படுப்பதில்லை. (Success and rest don't sleep together.) நாகப்பாம்பை, ''நல்ல பாம்பு சார் நீங்க''என்பதால் கடிக்காமல் இருக்குமா?( The cobra will bite you whether you call it cobra or Sir. Cobra.) நாம் முதலில் ஒரு இடம் போகும்போது ''இன்னும் எவ்வளவு தூரம்?'' என்று கேட்பதும் திரும்பும்போது ''அட சீக்கிரமே வந்துவிட்டோமே '' என்கிறோம். (The more u ask how much longer it will take, the longer journey will seem.) நண்பர்களே, கழுதையின் வீட்டுக்கு சென்றால் ஞாபகமாக காதைப் பற்றி மட்டும் பேசாதீர்கள் ( when you go to a donkey's house, don't talk about ears.)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...