சூர் சாகரம் J.K. SIVAN
ஒன்றே குலம்
எழுத எவ்வளவோ நல்ல விஷயங்கள் மலை போல் இருக்கிறது. எழுத ஆசையாகவும் இருக்கிறது. ஆனால்........ உடல் ஒத்துழைக்க வில்லை. உள்ளமும் உடலும் எப்போதும் அரசியல் கட்சிகளைப்போல விலகி தான் இருக்கிறது. ஒன்று சேர்க்க மன உறுதி வேண்டும். அதை தான் வாழ்க்கை பூரா தேடிக்கொண்டிருக்கிறோம்.
சூர் தாசரைப்போல் நாம் கனவில் கூட ஆகமுடியாதே. அவருக்கு முன்னாள் கிருஷ்ணன் குழந்தைபோல்,, போல் அல்ல,, குழந்தையாகவே, அமர்ந்து அவரை ரசிக்கும் அழகு எந்த மஹாநுபாவன் மனதிலோ உருவாகி அற்புத சித்திரமாக நமக்கு கிடைத்திருக்கிறது. அதை ஒவ்வொருமுறையும் என் எழுத்தோடு இணைத்து அனுப்புகிறேன். ஒருவரும் அதைப்பற்றி ஒரு வார்த்தை...?????? அந்த கிருஷ்ணன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லையா???
ராமனையே மனதில் கொண்டவன் எந்த ஜாதியாக, மதமாக, குடும்பமாக, பெயர் கொண்டவனாக, இருந்தால் என்ன? ராம பக்தி சாம்ராஜ்யத்தில் எல்லோரும் ஒன்றே. அனைவரும் சமமே. அரசனும் ஆண்டியும் ஒன்று தான். சிவன் எந்த குலம் , அவனுக்கு
ஜாதி எது? பெற்றோர் யார்?பிரம்மாவுக்கு??
ஜாதி எது? பெற்றோர் யார்?பிரம்மாவுக்கு??
அதனால் தானே நீ ராமனாக வந்தபோது ரகுகுலத்தில் திலகமாக அரசனாகவும் அடுத்து என் கிருஷ்ணனாக அவதரித்தபோது ஆயர்பாடியில் மண்ணில் புரண்டு விளாயாடிய ஒரு கோபனாகவும் எல்லாமே சமம் என்று வாழ்ந்து காட்டியவன். அரன் அயன் ஆகியோரே இவ்வாறு எனில் நாம் எதற்கு வித்யாசப்பட வேண்டும்? ஒரு ரகசியம் சொல்கிறேன். ''நான், எனது என்ற கர்வம், அகம்பாவம் பிடித்தவன் எவனாயிருந்தாலும், அவன் மனதில் ராமன் குடிபுக மாட்டான். இதயத்தில் இடம்பிடிக்க மாட்டான். இது தெரிந்துதானே, இந்த சூர் தாஸ் எனது ஆணவம், அகந்தை, எல்லாவற்றையும் இருக்கி கட்டி, பெரிய மூட்டையாக கண்காணாமல் வீசி எறிந்து விட்டேன்.
Whatever is a devotee's
caste, clan, family, or name,
Rama's love for him is the same.
caste, clan, family, or name,
Rama's love for him is the same.
Beggar and king
are one to him.
Say, of what caste could be
Brahma or Shiva?
are one to him.
Say, of what caste could be
Brahma or Shiva?
Rama will never abide
in the egotistic man's heart
therefore his slave, Suradasa,
has abandoned pride.
in the egotistic man's heart
therefore his slave, Suradasa,
has abandoned pride.
Rama was born in the Raghu clan
Krishna found his home in Gokula.
Krishna found his home in Gokula.
No comments:
Post a Comment