Thursday, May 3, 2018

NEETHI SATHAKAM




நீதி சதகம். J.K. SIVAN
சுபாஷிதம்.

लोभश्चेदगुणेन किं पिशुनता यद्यस्ति किं पातकैः
सत्यं चेत्तपसा च किं शुचिमनो यद्यस्ति तीर्थेन किम्।
सौजन्यं यदि किं जनैः सुमहिमा यद्यस्ति किं मण्डनैः
सद्विद्या यदि किं धनैरपयशो यद्यस्ति किं मृत्युना ॥

Lobhashchedagunena kim pishunataa yadyasti kim paatakaih
Satyam chettapasaa cha kim shuchimano ydyasti teerthena kim
Saujanyam yadi kim janaih sumahimaa yadyasti kim mandanaih
Sadvidyaa yadi kim dhanairapayasho yadyasti kim mrityunaa 1.54

அடாடா பர்த்ருஹரி எவ்வளவு சுருக்கமாக ஒரு உண்மையை சொல்கிறார் ! எவனிடத்திலாவது பொறாமை, பேராசை குணம் இருந்தால், அது ஒன்றே போதும். வேறே கெட்டகுணங்கள் தேவையே இல்லை! எல்லா கெட்டகுணங்களுக்கும் அது தானே தாய்? முகத்தின் எதிரே ஒருவரை இந்திரன் சந்திரன் என புகழ்ந்துவிட்டு அவர் தலை மறைந்தது, சீ இவனா அயோக்கியன், அடிமுட்டாள், என்று இகழும் குணம் இன்னும் நம்மில் பலரை விட்டு போகவில்லையே. சத்தியமாக இருப்பவன் எதற்கு தவம் செய்யவேண்டும்? அவசியமே இல்லையே. பரிசுத்த எண்ணங்கள் மனதில் நிறைந்தவன் எந்த புண்ய நதியிலும் சென்று ஸ்நானம் செய்யவேண்டாமே! மனதில் நல்ல குணம் இருப்பவனுக்கு வெளியில் நண்பனே தேவையில்லை. புகழ் நிரம்பியவனுக்கு தங்க வைர ஆபரணம் எதற்கு? நன்றாக சாஸ்த்ர கலை ஞானம் கொண்டவனுக்கு செல்வம் எதற்கு? அதே போல் எல்லோராலும் இகழப்பட்டு அவமதிக்கப்படுவனுக்கு தனியாக மரணம் வேண்டவே வேண்டாம். சபாஷ் பர்த்ருஹரி.

मौनान्मूकः प्रवचनपटुः वाचको जल्पको वा
धृष्टः पार्श्वे वसति च तथा दूरतश्चाप्रगल्भः ।
क्षान्त्या भीरुर्यदि न सहते प्रायशो नाभिजात:
सेवाधर्म परमगहनो योगिनामप्यगम्यः ॥

Maunaanmookah pravachanapatuh vaachako jalpako vaa
Dhrushtah paarshwe vasati cha tathaa dooratashchaapragalbhah
Kshaantyaa bheeruryadi na sahate praayasho naabhijaatah
Sevaadharma paramagahano yoginaamapyagamyah 1.57

ராஜாவிடம் வேலை செய்வது என்பது கத்தி மேல் நடப்பது போல். எந்த கணமும் அவனுக்கு ஆபத்து. பேசாமல் சொன்னதை செய்தால் '' முட்டாள், சிந்திக்க தெரியாதவன், ஊமை'' பட்டம். ஏதாவது பதில் சொன்னாலோ, ''கர்வி , அதிகப்ரசங்கி, வாய் ஜாஸ்தி,வைக்கிற இடத்தில் வைக்கவேண்டும் இவனை'' என்ற ராஜாவின் கோபம். ராஜாவின் அருகேயே கைகட்டி நின்றால் ''ஆதாயம் தேடுபவன், தூர வை இவனை'' உத்தரவு. தூரவே இருந்தால், ''பொறுப்பற்றவன், முட்டாள், வேலை செய்யாமல் தப்பிக்க முயல்பவன்'' என்று பெயர். எதையும் பொறுத்துக்கொள்பவனுக்கு ''கோழை, பயந்தான்கொள்ளி'' என்று பட்டம். எதிர்த்து பேசினால் ''சீட்டைக் கிழி, மண்டை கனம். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை. இங்கிதம் தெரியாதவன்'' என்று நாமகரணம். அடடா, யோகிகளால் கூட இப்படி ராஜாங்க ஊழியர்களை போல் இருக்க முடியாது!!

आरंभगुर्वी क्षयिणी क्रमेण
लघ्वी पुरा दीर्घमुपैति पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्ध भिन्ना
छायेवे मौत्री खलसज्जनानाम् ॥

Aaarambha gurvee kshayinee kramena
Laghwee puraa deerghamupaiti pashchaat
Dinasya poorvaardha paraardha bhinnaa
Chchhaayeva maitree khalasajjanaanaam 1.59

சூரியன் உச்சிக்கு போவதற்கு முன் நமது நிழல் நம்மை விட உயரமாக நீண்டு பூமியில் விழும். எனக்கு ரொம்பநாள் நான் ரொம்ப உயரம் என்று இதுமாதிரி நிழலைப் பார்த்து ஸந்தோஷம். சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மேலே போகப்போக நிழல் சுருங்கிக்கொண்டே வரும். உச்சி வெயிலில் முழு உருவமும் காலடியிலேயே இருக்கும். மாலையில் அதுபோல் பின்னால் வளர்ந்து கொண்டே வரும் அஸ்தமனம் வரை. இதை எதற்காக பர்த்ருஹரீ நினைவு கூறுகிறார் தெரியுமா? துஷ்டர் சகவாசம் ஆரம்பத்தில் பிரமாதமாக தெரியும். அவர்களை புரிந்து கொண்டால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நல்லவர் சகவாசம் ஆரம்பத்தில் மாலைவெயில் போல் முதலில் சிறிதாக ஆரம்பித்து பெரிய விருக்ஷமாக வளரும். அது நல்லது அல்லவா?.

मृगमीनसज्जनानां
तृणजलसंतोष विहित वृत्तीनां ।
लुब्धक धीवर पिशुना
निष्कारणमेव वैरिणो जगति ॥

Mrigameenasajjanaanaam trinajalasantoshavihitavritteenaam
Lubdhaka dheevara pishunaa nishkaaranameva vairino jagati 1.60



மான், மீன், சாதுக்கள் ஆகியோர் சாத்வீக உணவை தேடுபவர்கள். மானுக்கு புல் , மீனுக்கு நீர், சாதுக்களுக்கு ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம். அதுவே திருப்தி அளிக்கிறது. ஆனாலும் அவர்களை விட்டுவைப்பதில்லை இந்த உலகம். மானைத்தேடி வேடன் அலைகிறான். ;மீனைத்தேடி கையில் தூண்டிலோடு வருகிறான் மீன் பிடிப்பவன். சாதுக்களை எப்படியாவது நெருங்க தீயவர்கள் முயற்சிக்கிறார்கள். ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...