Tuesday, May 15, 2018

DENTIST



                  ''   ஆறு மணிக்கு  அப்பாயிண்ட்மெண்ட்''    J.K. SIVAN

 எப்போதுமே  ரொம்ப  சீரியஸ் ஆக, வேதாந்த, புராண,   சிந்தனை  சமாசாரம்,  ஆன்மிகம்  நிறைய எழுதுவது பல பேருக்கு பிடிக்காமல் போர்  அடிக்கிறதோ  என்னவோ?  அதற்காகவே  நடு நடுவே   வித்தியாசமாக  சில ஹாஸ்ய சம்பவங்களும்  கொடுக்கிறேன். 


இன்று ஒரு  தமாஷ் கதை சொன்னால் என்ன?

 பல் டாக்டர்  பாண்டிய ராஜனுக்கு சந்தேகம் அடிக்கடி வரும்.  எந்த பல்லை  நோண்டுவதாக இருந்தாலும், சுரண்டுவதோ, பிடுங்குவதோ இருந்தாலும் முதலில் எதிரே உள்ள நோயாளியை கோட்டை வாசல் போல் வாயை திறக்கச் சொல்வார்.

உடனே  உள்ளே போய்  தனது  மெடிக்கல் புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவார். இதுவே  அநேக பல் நோயாளிகளை அவரிடமிருந்து விரட்டிய காரணம் என்பது ஏனோ அவருக்கு தெரியவில்லை.  இந்த ரகசியம்  தெரியாததால் தான்   
ஏன் யாருக்குமே  இந்த  பக்கத்தில்  பல்  வியாதி இல்லை ? இந்த ஊரிலேயே   சிறந்த பல் டாக்டர் இருக்கிறேன்.  என்னிடம் வருவதில்லையே?  என அடிக்கடி தலையை சொரிந்து கொள்வார்.

நோயாளிகளின் நிலைமையை,   புத்தகத்தை பார்த்து படித்து சமைக்கும் மனைவிகள் கொண்டுவரும் உணவைக் கண்டு அஞ்சும் கணவன்மார்கள் போல,  என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

ரங்கண்ணா  எளிதில் காசு செலவழிக்க மாட்டான். பல தடவை யோசித்துவிட்டு தான் அரைமனதோடு  ஒரு ரூபா அவனை விட்டு வெளியேறும்.  

ரங்கண்ணா  போகும் வழியில்  பாண்டியராஜன்  பல்  மருத்துவ சாலையை  கடந்து போகும்போது சைக்கிளை நிறுத்தி நின்றான். யோசித்தான். உள்ளே போய்  டாக்டரை பார்த்தான்.

'வாங்க என்ன  ப்ராப்ளம்?'  தினத்தந்தியை கீழே வைத்தார்  பாண்டியராஜன்.

' பல்  வலி தாங்கமுடியல்லை.  புடுங்கணும் .  எவ்வளவு ஆகும்  டாக்டர்?

 ''புல்  புடுங்கறது மாதிரி பல் புடுங்க முடியாதுப்பா.   நிறைய விஷயம் இருக்கு.

'' எவ்வளவு ஆகும் டாக்டர்.?'

 'எப்படியும்  குறைஞ்சது 3  ஸிட்டிங்.  மொத்தமா  1000  ரூபா ஆகுமேபா.  தெரிஞ்சவன்  என்கிறதாலே  800க்கு  முடிக்கலாம் '

'அவ்வளவா ஆகும் ?'

 ''அது தான் பா  நார்மல்  சார்ஜ் எங்கிட்ட.   மத்தவங்க கிட்டே  இதைவிட ஒன்றரை மடங்கு கூட.  இது   குறைஞ்ச பக்ஷம். உனக்காக'

''கொஞ்சம்  குறைச்ச சார்ஜ் லே...''வலிக்கு  மயக்க ஊசியில்லாம் கொடுக்காம  பிடுங்கினா?''

'அப்படியெல்லாம்  பண்ண முடியாதே. வேணா  இன்னும்  ஒரு  200 ரூபா  குறைச்சிக்கலாம் '. வலிக்கும்.  பொறுத்துக்கணும்.

''டாக்டர்  புரியறது.  உங்களை மாதிரி பெரிய டாக்டர் பண்ணாம  கொஞ்சம்  உதவியாளர்கள் மாதிரி, நர்ஸ், மாதிரி யார் கிட்டேயாவது மயக்க ஊசி  காசு  இல்லாம  பல்லை புடுங்கிண்டா  எவ்வளவு  குறையும் ?''

 ''இதோ பார் தம்பி, அப்படியெல்லாம், முறைப்படி இல்லாமல் எதுவுமே  செய்ய கூடாது.   முடியாது. ஒண்ணு  கிடக்க ஒண்ணு  ஆயிடும். வலி கொன்னுடும்.    இப்படி பண்றவங்க  ஒரு பல் புடுங்க  200 ரூபாக்கு  கூட இருக்காங்க.'

 ''உங்க  கிட்ட  படிக்கிற  பசங்க  பிடுங்கினா  அனுபவம், ட்ரைனிங் என்பதாலே  காசு  குறையும் இல்லையா? மத்த ஸ்டூடண்ட்ஸ் பார்த்துண்டு இருப்பாங்க  அவங்களுக்கும் அனுபவம் கிடைக்கும் இல்லையா. அப்படின்னா  இன்னும் குறைஞ்சு தானே  சார்ஜ்  ஆகும்?''

''தம்பி  என்னவோ   நீ சொல்றதெல்லாம் பார்த்தா புதுசா இருக்கு.   இந்த மாதிரி  சான்ஸ் கிடைக்கறதுக்காக  அவங்களே  100 ரூபா  கொடுப்பாங்களோ இன்னாவோ?   இதுவரையிலும் கேட்டதில்லை.  இனிமே தான் கேட்டு பார்க்கணும்  ''   என்றார் டாக்டர் பாண்டிய ராஜன்.

நல்லது டாக்டர்.  நாளைக்கு  நான் வந்து  நூறு ரூபா  வாங்கிக்கிறேன்.

எப்போப்பா  உனக்கு  அப்பாய்ண்ட்மெண்ட் வேணும்.  டயரியை பிரித்தார்  பாண்டியராஜன்.

நாளைக்கு சாயந்திரம்  6 மணிக்கு  வேணும்  டாக்டர்.

 என்னப்பா  பேரு ?

 ''ராஜேஸ்வரி  60 வயது.    எங்க மாமியார்.

சுலபத்தில் மாமியார் ப்ராப்ளம் முடிவுக்கு வந்ததில் குஷி ரங்கண்ணாவுக்கு.  ''எங்குமே ஆனந்தம்'' என்ற கண்டசாலா பாட்டை பாடிக்கொண்டே சைக்கிளில் ஏறினான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...