Friday, May 11, 2018

GAJENDRA MOKSHAM. 1



நாராயணீயம் - கஜேந்திர மோக்ஷம்.1- J.K SIVAN

சாபங்களும் நாராயணனும்
ஹுஹு என்கிற கந்தர்வன் ஒரு ரிஷி சாபத்தால் முதலையாக பிறந்து விமோசனம் எப்போது என்று கெஞ்ச ''மஹா விவிஷ்ணுவால் தான் நீ மரணமடைந்து மீண்டும் விண்ணுலகம் எய்துவாய்'' என்கிறார். திருக்கூட மலை அருகே காடுகள் அடர்ந்த ஒரு தடாகத்தில் ஹுஹு முதலையாக வாழ்கிறான்.

விஷ்ணு பக்தன் இந்திரத்யும்னன் ஒரு பாண்டிய ராஜா. ஒருநாள் அவன் த்யானத்தில் இருந்த நேரம் அகஸ்தியர் வருகிறார். அவரை வரவேற்று உபசரிக்க தவறுகிறான். ''ஓஹோ அவ்வளவு மதமா உனக்கு? இனி நீ ஒரு மதம்பிடித்த காட்டு யானையாகப்போ ''-- அகஸ்தியர் சாபம் ராஜா இந்த்ரத்யும்னன் கஜேந்திரன் என்னும் யானையாகி அவனும் திருக்கூட மலைப்பக்கம் காடுகளில் வசிக்கிறான். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் கஜேந்திரனாக மாறினாலும் அவனுக்கு விஷ்ணு ஞாபகம் பக்தி, மறக்கவில்லை.
பல ஆண்டுகள் கழிந்தன. கஜேந்திரன் தினமும் காட்டில் இருந்த தடாகத்தில் குளித்து விட்டு அதில் இருந்த தாமரை மலர்களோடு அருகே ஒரு ஆலயத்தில் அந்த மலர்களை விஷ்ணுவை நினைத்து சாற்றுவான். இதுவும் பல காலம் தொடர்ந்தது.

ஒருநாள் கஜேந்திரன் தடாகத்தில் நீராடும்போது அதில் வசித்த முதலைக்கு ரொம்ப பசி. நீரில் இறங்கி நின்ற கஜேந்திரன் கால்களை கெட்டியாக கவ்வி தடாகத்தின் ஆழமான பகுதிக்கு இழுத்தது. கஜேந்திரன் முழுபலத்துடன் திமிறி தப்பிக்க முயன்றும் இனி உயிர் தப்ப முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.

உயிருக்கு மாறி பிளிறியும் பயனில்லை. ஆயிரம் வருஷ காலம் முதலையும் யானையும் தத்தம் பலத்தையே நம்பி மோதினர். பயனில்லை. கஜேந்திரன் முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்தது. தான் வழிபடும் விஷ்ணுவை மனதில் நினைத்தது. இனி தான் வழிபடும் நாராயணன் ஒருவனே தன்னை காக்க இயலும் என உணர்ந்து ' ஹே ஆதிமூலமே, என்று அலறுகிறது.

''இந்த்ரத்யும்னன், ஹுஹு ஆகிய இருவருக்குமே விமோசன காலம் வந்து விட்டது. ஸ்ரீமந் நாராயணன் கருடாரூடராக வந்து அவரது சுதர்சன சக்ரம் முதலையை சம்ஹரித்து இந்த்ரத்யும்னன் காப்பாற்றப்பட்டு வைகுந்தம் செல்கிறான். ஹுஹு மீண்டும் கந்தர்வ லோகம் செல்கிறான்.

இது தான் கஜேந்திர மோக்ஷம் சரித்திரம். ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அற்புத கதை. தூய பக்தி எப்படி மரணாந்த காலத்திலாவது பகவானை நினைப்பதால் மோக்ஷ பதவி கிட்டும், நாரயணனை நீயே கதி என்று சரணடைந்தால் நிச்சயம் நம்மை காப்பது அவன் கடமை என்பதை உணர்த்தும் ஒரு சம்பவம். இதை பாகவத புராணம் சொல்கிறது. ஸ்ரீ மேல்பத்தூர் நம்பூதிரி நாராயணீயத்தில் தசகமாக ஒரு பத்து ஸ்லோகம் சொல்கிறார். இனி அதை பார்ப்போம்.

எனது நண்பர் ஒரு அழகிய கிருஷ்ணன் விக்ரஹத்தை நித்ய பூஜை, அற்புத அலங்காரங்கள் செயது மலர்க்குவியல்களிடையே அவனை தரிசிக்க வைக்கிறார். எனக்கு சமீபத்தில் வந்த ஒரு படத்தில் அவரது கிருஷ்ணன் (ஜெகன் மோஹனன் என்று அவனுக்கு பெயர்) கஜேந்தரனை ரக்ஷிப்பதை, கஜேந்திர மோக்ஷத்தை அலங்காரமாக சித்திரித்து படமாக்கி அனுப்பினார். அதை இணைத்திருக்கிறேன்.

இன்னொரு அற்புதம். ஒரு பத்து வயது சிறுவன், அவன் பெயரும் கிருஷ்ணா தான். அமெரிக்காவில் இருந்தாலும் நன்றாக , பெற்றோர், தாத்தா பாட்டி ஆகியோர் மூலம் சிறந்த பக்திமானாக வளர்பவன். கஜேந்திர ஸ்துதி ஸ்லோகங்களை பாகவத புராணத்தில் இருந்து மழலைக்குரலில் அற்புதமாக பாடி ஒரு குட்டி உபன்யாசமாக செய்திருக்கிறான். இந்த கஜேந்திர ஸ்துதியை எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதையும் உங்களோடு பரிமாறிக்கொள்கிறேன். இந்த லிங்கை சொடுக்கினால் கிருஷ்ணாவின் அமிழ்தினும் இனிய மழலைக் குரலில் கஜேந்திர ஸ்துதி கேட்கலாம். https://youtu.be/LcwptnCGXmw

ஒரு சின்ன விஷயம். முக்கியமானதும் கூட. குழந்தைகள் இங்கோ, எங்கோ, எப்படி வளர்க்கப்பட வேண்டும் இதில் பெற்றோர், மற்றோர் பங்கு, கடமை என்ன என்பதை இது போன்ற கட்டுரைகளில் விளக்க முயல்கிறேன்.பெற்றோர்கள் பெரியோர்களால் தான் அடுத்த தலைமுறை சிறந்த உதாரணமாக வாழ முடியும். குழந்தைகள் பணம் சம்பாதிக்கும் மெஷின்கள் மட்டும் அல்ல என்றும் புரிந்து கொள்ள உதவும்.

इन्द्रद्युम्न: पाण्ड्यखण्डाधिराज-
स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् ।
त्वत् सेवायां मग्नधीरालुलोके
नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम् ॥१॥

indradyumnaH paaNDyakhaNDaadhiraajaH
tvadbhaktaatmaa chandanaadraukadaachit |
tvatsevaayaaM magnadhiiraalul
Oke naivaagastyaM praaptamaatithyakaamam || 1

மேலே கதையில் சொன்ன இந்திரத்யும்னன் எனும் பாண்டிய ராஜா, ஸ்ரீமந் நாராயணா, உன்னையே நினைத்து கண்களை மூடி த்யானிக்கும்போது எதிரே அகஸ்திய ரிஷி வருவதை கண்டுகொள்ள வில்லை. அவரது கோபத்துக்கு ஆளாகிறான் என்கிறது இந்த ஸ்லோகம்.

कुम्भोद्भूति: संभृतक्रोधभार:
स्तब्धात्मा त्वं हस्तिभूयं भजेति ।
शप्त्वाऽथैनं प्रत्यगात् सोऽपि लेभे
हस्तीन्द्रत्वं त्वत्स्मृतिव्यक्तिधन्यम् ॥२॥

kumbhOdbhuutiH sambhR^itakrOdhabhaaraH
stabdhaatmaa tvaM hasti bhuuyaM bhajeti |
shaptvaa(a)thainaM pratyagaatsO(a)pi lebhe
hastiindratvaM tvatsmR^iti vyakti dhanyam || 2

''பிடி சாபம், இனி நீ ஒரு யானை'' என்று அவனை கஜேந்திரனாக்கி விட்டார் அகஸ்தியர். ஆனால் நாராயணா, இந்த்ரத்யும்னன் உன் நினைவாகவே யானையாக இருந்தான்.




தொடரும்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...