நாராயணீயம் - கஜேந்திர மோக்ஷம். 2- J.K. SIVAN
Dasakam: 26-- Shlokam: 03
दग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे
क्रीडञ्छैले यूथपोऽयं वशाभि: ।
सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या
त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभ: ॥३॥
दग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे
क्रीडञ्छैले यूथपोऽयं वशाभि: ।
सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या
त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभ: ॥३॥
dugdhaambhOdheH madhyabhaaji trikuuTe
kriiDan shaile yuuthapO(a)yaMvashaabhiH |
sarvaan jantuunatyavartiShTa shaktyaa
tvadbhaktaanaaM kutranOtkarShalaabhaH || 3
kriiDan shaile yuuthapO(a)yaMvashaabhiH |
sarvaan jantuunatyavartiShTa shaktyaa
tvadbhaktaanaaM kutranOtkarShalaabhaH || 3
திரிகூட மலையை ஒட்டிய அடர்ந்த காடுகளின் நடுவே ஆழமான அந்த மடுவில் கஜேந்திரன் மற்ற களி றுகள்,பெண் யானைகள் குட்டிகள் புடைசூழ ஆனந்தமாக ஜலக்ரீடை செய்து கொண்டிருக்கிறான். அவன் மனதில் எப்போதும் நாராயணா நீ உண்டே. நாராய ணா உன்னை சரணடைந்தோருக்கு எங்கும் பெருமை, ஆனந்தம் தானே.
Shlokam: 04
स्वेन स्थेम्ना दिव्यदेशत्वशक्त्या
सोऽयं खेदानप्रजानन् कदाचित् ।
शैलप्रान्ते घर्मतान्त: सरस्यां
यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे ॥४॥
स्वेन स्थेम्ना दिव्यदेशत्वशक्त्या
सोऽयं खेदानप्रजानन् कदाचित् ।
शैलप्रान्ते घर्मतान्त: सरस्यां
यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे ॥४॥
svena sthemnaa divyadeshatva shaktyaa sO(a)yaM
khedaanaprajaanan kadaachit |
shailapraante gharmataantaH sarasyaaM
yuuthaissaardhaMtvatpraNunnO(a)bhireme || 4
khedaanaprajaanan kadaachit |
shailapraante gharmataantaH sarasyaaM
yuuthaissaardhaMtvatpraNunnO(a)bhireme || 4
கஜேந்திரன் பலமிக்கவன். எவரிடமும் அவனுக்கு அச்சம் இல்லை. அவனை எவரும் எதிர்த்ததில்லை, எதிர்த்தாலும் வென்றதில்லை. யானைக்கூட்டத்திற்கே அவன் ராஜா. கஜ இந்திரன். நாராயணனை மனதில் திருத்திக்கொண்டு அவன் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்தவன். ஒருநாள், கடும் கோடையில், சூரியனின் வெப்பம் எங்கும் அனலாக வீச கஜேந்திரனுக்கு அந்த குளிர்ந்த நீர் நிறைந்த ஆழமான மடுவில் இறங்கி நீராட தோன்றியது. எல்லாம் உன் சித்தம் நாராயணா !
Shlokam: 05
हूहूस्तावद्देवलस्यापि शापात्
ग्राहीभूतस्तज्जले बर्तमान: ।
जग्राहैनं हस्तिनं पाददेशे
शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम् ॥५॥
हूहूस्तावद्देवलस्यापि शापात्
ग्राहीभूतस्तज्जले बर्तमान: ।
जग्राहैनं हस्तिनं पाददेशे
शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम् ॥५॥
huuhuustaavaddevalasyaapi shaapaat
graahiibhuutastajjale vartamaanaH |
jagraahainaM hastinaM paadadeshe
shaantyarthaM hi shraantidO(a)sisvakaanaam
graahiibhuutastajjale vartamaanaH |
jagraahainaM hastinaM paadadeshe
shaantyarthaM hi shraantidO(a)sisvakaanaam
கஜேந்திரனுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது. ஹுஹு என்ற கந்தர்வன் தேவல ரிஷி சாபத்தால் முதலையாக உருவெடுத்து அந்த மடுவில் வாழ்கிறான் என்ற விஷயம் தான் அது. ஆழமான ஒரு இடத்தில் இருந்த முதலைக்கு அன்று வயிற்றைக் கிள்ளும் பசி. நீரில் அவனுக்கு சற்று தூரத்தில் நின்ற கஜேந்திரன் கால்கள் தெரிந்ததும் படு குஷி. ஆஹா பெரிய ஆகாரம் கிடைத்து விட்டது என்று கஜேந்திரன் நிற்கும் இடம் வந்து அவன் காலை கெட்டியாக பிடித்து கவ்வினான். நாராயணா இது உன் விளையாட்டு. சோதனைக்கு பிறகு தானே ஆனந்தம். ஸ்புடம் போட்ட பின் தான் தங்கம் ஒளி வீசுகிறது.
- Shlokam: 06
त्वत्सेवाया वैभवात् दुर्निरोधं
युध्यन्तं तं वत्सराणां सहस्रम् ।
प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिध्यै
नक्राक्रान्तं हस्तिवर्यं व्यधास्त्वम् ॥६॥
युध्यन्तं तं वत्सराणां सहस्रम् ।
प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिध्यै
नक्राक्रान्तं हस्तिवर्यं व्यधास्त्वम् ॥६॥
tvatsevaayaa vaibhavaaddurnirOdhaM
yuddhyantaM taM vatsaraaNaaM sahasram |
praapte kaale tvatpadaikaagryasiddhyai
nakraakraantaM hasti varyaMvyadhaastvam || 6
yuddhyantaM taM vatsaraaNaaM sahasram |
praapte kaale tvatpadaikaagryasiddhyai
nakraakraantaM hasti varyaMvyadhaastvam || 6
என்ன இது என்றுமில்லாமல் இன்று காலை ஏதோ வேகமாக பலமாக பிடித்து இழுக்கிறதே என்று கஜேந்திரன் பலத்தோடு அதை இழுத்தான். தும்பிக்கையால் அந்த முதலையை அடித்தான். முதலில் இன்னும் அதிக பலத்தை சேர்த்து அவனை நடு ஆழத்திற்கு இழுத்தது. யானையை விட முதலைக்கு நீரில் பலம் அதிகம். யானைக்கும் முதலைக்கு ஒருநாள் ரெண்டுநாள் அல்ல ஒரு ஆயிரம் வருஷங்கள் இந்த துவந்த யுத்தம் நடந்தது. தக்க நேரம் வந்துவிட்டது முதலைக்கு யானைக்கும் இந்த பூலோக வாழ்க்கை முடிவதற்கு என்று நாராயணனுக்கு தெரியாதா? கஜேந்திரன் எனும் அந்த யானை, நாராயணா, உன் பக்தன், அவன் புரிந்து கொண்டான். இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை. நாராயணன் விட்டது தான் வழி என்று. உன்னை மனதில் எப்போதும் கொண்டவன் அவன். எனவே கஜேந்திரன் உன்னை தியானித்தான் . நிலைமை அவன் சக்திக்கு மீறி விட்டது. இனி நீ ஒருவனே அவனை காக்க முடியும்.
I AM ATTACHING THE MELODIOUS VOICE OF 10 YR OLD KRISHNA OF USA RECITING THE GAJENDRA STUTHI FROM BAGAVATHA PURANAM
No comments:
Post a Comment