Tuesday, May 8, 2018

RITUALS





போனவனுக்கு போகப்போகிறவன் செய்வது... -- J.K. SIVAN .

தடுப்பு சக்தி விஷயம்

இந்த தலைப்பில் சில அபூர்வ விஷயங்கள் கண்ணில் படுகிறது. அவற்றை அறிந்துகொண்டால் எவ்வளவு அறிவு பூர்வமாக நமது முன்னோர் அவற்றை பின் போற்றினார்கள் என்பது புலப்படும்.

தீட்டுகளை அனுசரிப்பதற்கு இன்னொரு காரணமும் வைத்துள்ளார்கள். இதற்கு விஞ்ஞான அடிப்படையும் உண்டு. இறந்து போனவர்கள் உடலிலிருந்து சில நுண்ணிய கிருமிகள் வெளிப்படுகிறது. அது அந்த உடல் கிடைக்கும் வீடு முழுதும் வியாபித்து இருக்கும். அந்த கிருமிகள் சில காலம் தான் பரவும். இதனால் இறந்தவர் மட்டுமல்ல அவருக்கு காரியம் செய்பவர்கள் அந்த உடல் அருகிலேயே இருப்பதால் பத்து பன்னிரண்டு நாட்கள் அவர்கள் மேலும் பரவும். இறந்தவனை எரித்த இடுகாட்டில் இந்த கிருமிகள் மேலும் மேலும் பல உடல்கள் அங்கு வருவதால் சற்று கூடுதலாகவே பரவி இருக்கும். ஏற்கனவே உடலில் சில வியாதிகள் இருப்பவர்கள் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருப்பார்களே. அவர்களை இந்த கிருமிகள் எளிதில் தாக்கும். எதற்கு வம்பு? யார் மீதும் படாமல் அங்கு சென்று திரும்பிய உடனே தமது வீட்டுக்குள் நுழையாமல் குளித்து உடலை சுத்தம் செயது கொண்டு வீட்டுக்குள் நுழைவதன் மூலம் இறந்தவன் வீட்டு விஷ கிருமிகள், அசுத்தம் ஏதாவது இருந்தால் அது தனது வீட்டில் பரவ வழியில்லாமல் செய்வது இந்த குளிப்பதன் மூலம், உடுத்திய உடைகளை எவர் மீதும் படாமல் உடனே நனைத்து விடுவது மூலம்.

இறந்தவன் வீட்டு கிருமிகள் அதிக பட்சம் பத்து பன்னிரண்டு நாட்கள் மட்டுமே இருப்பவை என்பதால் தான் இந்த ஒருவரை ஒருவர் தொடாமல் இருப்பது, குளிப்பது, அடிக்கடி அங்கே அந்தபன்னிரண்டு நாட்களிலும் போகாமல் இருப்பது. பதிமூன்றாவது நாள் இறந்தவர் வீடே சுத்தப்படுத்தப்படும், துளசி, மாவிலைகள் ஜலம் மருந்து சக்தி வாய்ந்தவை அந்த ஜலத்தை வீடு முழுதும், வந்தவர்கள் மேலும் தெளிப்பது, ஒரு வித தடுப்புசக்தி பெறவே.

நமது சாஸ்திரங்கள் இறந்தவர் வீட்டுக்கு சென்றால் குளிப்பது, தீட்டு காப்பது பற்றி சொல்வது இதற்கு தான். நோய் பரவாமல் இருக்க ஒரு வழி. அந்த காலத்தில் நீண்ட வயது வாழ்ந்தவர்கள் இத்தகைய ஆசாரங்களை அனுஷ்டித்ததால் தான்.

ஹோமப்புகை மருத்துவ சக்தி வாய்ந்தது. நோய் தடுப்பு சக்தி கொண்ட கிருமி நாசினி. காற்றில் கலந்த விஷ கிருமிகளை கொல்லும். அதனால் தான் இறந்த வீட்டில் பதின்மூன்றாம் நாள் க்ரேஹ்யம் (சுத்த சாந்திஹோமம்) நடக்கிறது. ஹோமத்துக்கு உபயோகப்படும் பொருள்கள் இந்த தடுப்பு சக்தி வாய்ந்தவை. மேகத்திலிருந்து மழையை பிரித்து பெய்யவைக்கும் சக்தியும் கொண்டவை.

இன்னொன்றும் இங்கே சொல்லவேண்டும். இறந்தவன் வீட்டில் அவனது ஆத்மா அந்த ஈம காரியங்கள் முடியும் பன்னிரண்டு நாளும் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்றேனே மற்றவர்கள் சந்தோஷமாக உலவிக்கொண்டிருப்பதை கண்டு வருத்தம், வேதனை கொள்ளும். துயரம் நிறைந்த இடமாக இருந்தால் தன்னை விருப்பியவர்கள் இத்தனை பேரா என்று ஆறுதல் கொள்ளும். சற்று நிம்மதி. சில ஆத்மாக்கள் என்னை விட்டு நீங்கள் சந்தோஷமாகவா இருக்கிறீர்கள் என்று சாபமும் இடலாம்.. எதற்கு வம்பு? துயரம் காப்பதும் ஒரு பெருந்தன்மை அல்லவா.

இறந்தவன் ஆத்மாவோடு வேறு சில அன்னிய தீய ஆத்மாக்களும் சேர்ந்து கொள்ளும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கும் அவையும் அந்த வீட்டில் நுழையும். பசியினாலும், தாகத்தினாலும் வாடும் இறந்தவர்களது ஆத்மா கூட மற்றவர்கள் அந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடையலாம். அதன் விளைவாக அவர்களுக்கு சாபமும் இடலாம். எனவே தான் துயரம், எதுவும் சந்தோஷமாக இல்லாம, உணவு உண்ணாமல் திரும்புவது. தீட்டு காலம்.

மொத்தமே தீட்டுக்காலம் அசௌசம் பன்னிரண்டுநாட்கள்தான் என்று கருதக்கூடாது.
பெரியோர்கள், நம் முன்னோர்கள் இது பற்றி சிந்தித்திருக்கிறார்கள். சில வரை முறைகள் உண்டாக்கி இருக்கிறார்கள். அவரவர் சௌகர்யத்தை, ஆன்மீக நிலையை, மனதில் கொண்டு இதை தீர்மானித்திருக்கிறார்கள். எல்லாமே மன கட்டுப்பாடு தான். அதை முன்னோர்கள் நிரம்ப கை கொண்டு நாமும் அதை பின்பற்ற ஏற்பாடுகள் செய்த்திருக்கிறார்கள். கொஞ்சமாவது நாமும் அவர்கள் மேல் மதிப்பு வைத்து நமது நன்மைக்காகவாவது அதை பின் பற்றவேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...