Monday, May 21, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர் --  J.K. SIVAN 

                                     
  கீதாஞ்சலி

He came and sat by my side but I woke not. What a cursed sleep it was, O miserable me!
He came when the night was still; he had his harp in his hands, and my dreams became resonant with its melodies.
Alas, why are my nights all thus lost? Ah, why do I ever miss his sight whose breath touches my sleep?

நான் தன்னந்தனியனாக  படுத்திருந்தேன். யாரோ அருகில் வந்து அமர்வது போல் தோன்றியது. மங்கிய நக்ஷத்திர  ஓளியில் அவனை பார்த்தேன்.  மெதுவாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். என்னை, என் அரைத்தூக்கத்தில் இருந்து, எழுப்பவில்லை.  சே என்ன தூக்கமிது. மரணத்தை  நினைவூட்டும் அன்றாட  வெள்ளோட்டம்.   இருளில் கிருஷ்ணன் கருப்பாக என் அருகில் வந்திருப்பதை  உணரவில்லை. அவன் கையில்  வழக்கம்போல் யாழோ குழலோ. எதுவாக இருந்தால் என்ன. அதிலிருந்து வரும்  சுநாதம் என்னை மயக்கமுறச் செய்கிறதே. மயக்கத்தை தருவது எதுவானால் என்ன?  ஓஹோ என் கனவுக்காட்சிகளுக்கு  அது  பின்னிசையோ.? ஆஹா  அந்த ராகங்கள் மனதிலேயே இருக்கிறது பாட வரவில்லையே.  அவனை அனுபவியாமல் எத்தனை இரவுகள்  சென்று விட்டன. மீண்டும் திரும்ப பெறமுடியாத  இரவுகள். ஏன் அவற்றை கோட்டை விட்டேன்?  உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல என்று பாட தோன்றுகிறது.  அவன் மூச்சு என் ஸ்வாசத்தோடு கலக்கவேண்டும் என்று மீண்டும் ஆர்வம். அப்படியே அவன் மீதே உறங்கவேண்டும்.
 ++

Light, oh where is the light? Kindle it with the burning fire of desire!
There is the lamp but never a flicker of a flame---is such thy fate, my heart? Ah, death were better by far for thee!

Misery knocks at thy door, and her message is that thy lord is wakeful, and he calls thee to the love-tryst through the darkness of night.

The sky is overcast with clouds and the rain is ceaseless. I know not what this is that stirs in me---I know not its meaning.

A moment's flash of lightning drags down a deeper gloom on my sight, and my heart gropes for the path to where the music of the night calls me.

Light, oh where is the light! Kindle it with the burning fire of desire! It thunders and the wind rushes screaming through the void. The night is black as a black stone. Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy life.

எங்கே அந்த தீபம்.  என்  எண்ணங்களின், ஆசைகள்  என்ற  சுடரால் எரியட்டும். எரியாத  விளக்கு இருந்தென்ன லாபம்? என்இருதயமே, இது தானா உன் கதி? நீயும் ஒரு எரியாத உதவாக்கரை விளக்கா?  ஓஹோ அப்படியானால் மரணம் உன்னைவிட  சிறந்தது என்பேன். 

துன்பங்கள் ஒன்று விட்டு ஒன்றாக  என் மன வாசல் கதவை டபடப என்று இடிக்கிறது. ஓஹோ அவள்  தான்  அழைக்கிறாள். உன் கண்ணன் அதோ அங்கிருக்கிறான்  வா. இரவு இனி நீண்டே  இருக்கட்டும். அவனுடன் செலவழிக்கும் நேரம் எல்லை இல்லாமல் போகட்டும். 

வானம் எப்போதும்போல் இருண்டு கறுத்து தான் காணப்படுகிறது.  கையை தலைக்கு மேல் நீட்டினால் மேகத்தை தொடலாம் போல் இருக்கிறதே. அடாத மழை விடாது போல் இருக்கிறதே. என்னை ஏதோ வேகமாக அவனிடம்  செலுத்துகிறதே அது என்ன? அதன் பெயர், அர்த்தம் என்ன? ஆனால் அது   ஆனந்தமாக இருக்கிறதே.

நான் இருட்டில் தடுமாறி செல்லக்கூடாது என்பதற்காக ஒரு  டார்ச் அடித்திருக்கிறான் கிருஷ்ணன். பளிச் என்று கண்ணைப் பறிக்கும் மின்னல்,  அந்த இருட்டில் அவன் எங்கிருக்கிறான் என்று காட்டி மறைந்தது.  இனி அவன் குழலா  யாழா, எதுவோ, அதன் இனிமையில் காது அந்த  ஒலி  வரும் திசையை நோக்கி கால்களை வேகமாக செலுத்துகிறது. 

எங்கே அந்த எரியாத  விளக்கு?  என் ஆசைகளால், அன்பினால் அதை ஒளிபெற செய்கிறேன்.   காது செவிடுபட ஒரு  பெரிய  இடி சப்தம். தொடர்ந்து  தீபாவளி பட்டாசுகள் சப்தம் போல் பல.  எங்கிருந்து இந்த கும்மிருட்டில் அவை பலமான காற்றோடு கலந்து  வருகின்றன. 

தொட்டால் ஒட்டிக்கொள்ளும் என்பார்களே அவ்வளவு அட்டை கருப்பான இருட்டு. போதும்  கிருஷ்ணா,    இந்த இரவின் இருள். இப்படி  நேரம் நீண்டு போக வேண்டாம். வாழ்வில்  உன் அருளால்  அன்பு தீபம் எரிந்து வழி காட்டட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...