ரிதன்பரா ஞான சபை தெரியுமா? - J.K. SIVAN
ரிதம்பரா என்றால் பரிசுத்த, தெய்வீகமான என்று அர்த்தம். சாத்வீகமான சிலர் ஒன்று சேர்ந்து ருதன்பராஞான சபா என்ற ஒரு பேர் கொண்டு ஒரு சபா நடக்கிறது. இதை டில்லியில் நிறுவி கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக பல பக்தர்கள் அம்பாளை, சக்தியை உபாசித்து வருகிறார்கள். ஸ்ரீ வித்யா உபாசனா ஸ்ரேஷ்ட , ஞான சொற்கொண்டல், அருள்சக்தி நாகராஜ ஐயர். 80+ டில்லிக்காரரானாலும் கும்பகோணம் தான் பிறந்த இடம். எங்கள் அஷ்டஸஹஸ்ர வகுப்பினர். தமிழ் தாத்தா ஸ்ரீ உ.வே.சா. ஸ்ரீ அன்னதான சிவன் உறவினர். அருள்சக்தி என்ற பெயரை அவரது குரு ஸ்ரீ சி.வி. சுவாமி சாஸ்திரி அளித்தது அவ்வளவு எளிதாக ஒருவர் பெற வாய்ப்பு இல்லை. நிறைய ஹோமங்கள், உபாசனா மந்த்ர ஜபம், ஸ்ரீ வித்யா, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் விடாமல் நாடெங்கும் நடத்தி வருகிறார்கள்.
பஞ்ச இந்திரியங்களின் மூலம் நாம் பெரும் அனுபவங்களை சுய கார்யம், சுய நாம ரூபா பேதம் கடந்து பரமாத்மா ஸ்மரணை யோடு அஸ்தி (இருப்பது) , பாதி (உணர்வது) , பிரியம் (தயை கலந்த பிரேமை) எனும் சக்திகளால் ஞான தாகத்தோடு தேடும் ஞானம் தான் ரிதம்பரா ஞானம் எனப்படுவது.
‘’Sarvendriyajanyeshujnaneshu ye vishayastheshu, sathchithanandaamsa-asyaanugadasyabhanam,
natvanugadayornamaroopayoho: idamritanbharajnanamithiprasidhthamsaa pooja para jnanamithigadthyathey…..’’
ஸர்வேந்த்ரிய ஜன்யேஷு ஞானேஷு யே விஷயாஸ்தேஷுஸச்சிதா3னந்த அம்ச
அஸ்ய அனுகதஸ்ய பானம், ந த்வஅனுகதயோர் நாம ரூபயோஃ
இதம் ரிதம்பரா ஞானமிதி ப்ரஸித்த3ம் ஸா பூஜா பராஞானமிதி கத்யதே....''
அருள்சக்தி நாகராஜன் பாஷையில் சொல்வதானால்:
''பூஜை, உபாஸனை என்பது மூன்றுவகை. அவை பரா, பரா(அ)பரா, அபரா எனப்படும். ஞான காண்ட விசாரமான ஸ்ரீசக்ரபூஜையில் பரா என்பதையே சிந்தனை செய்கிறோம். அதாவது ஒருவன் ஸதாகாலமும், நிரந்தரமாய் தான் சிவோஹம் பாவனையோடு செய்யும் எந்தக் செயலானாலும் அது பூஜையே. இதுவே எதிலும் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. (உத்தமா ஸா பராஞேயா) இதன் பெருமையை ஸ்ரீபகவத்பாதர்களின் ஸௌந்தர்யலஹரி ஸ்லோகம் ‘’ஜபோ ஜல்பஃசில்பம்......’’. என்றதில் அறியலாம். மேலும் கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய இந்த ஐந்து உறுப்புகளால் அறியப்படுகிற விஷயங்களில் உள்ள பெயர், வடிவம் இவைகளைநீக்கி அதன் இயல்பான அஸ்தி, பாதி, பிரியம், என்ற (இருக்கிறது-ப்ரகாசிக்கிறது-ஆனந்தமாயிருக்கிறது) என்ற தன்மைகளை நாடும் ஒரு அறிவுக்கு ரிதன்பரா ஞானம்என்று பெயர்.''
இது அப்படி கால் மேல் கால் போட்டுக்கொண்டு பொட்டுக்கடலை தின்று கொண்டு பெறமுடியும் என்று தோன்றவில்லை அல்லவா?.
இந்த பிரபஞ்சம் சதா சர்வகாலமும் சுழல்கிறது. அசையும் அசையா பொருள் எல்லாமே இதில் அடக்கம். அத்வைத மார்கத்தில் இது எல்லாமே ஒன்று. வேறொன்றுமில்லாத நிலையில் காரணமேது, காரியமேது? இந்த ஞானமார்கத்தில் ஈடுபடும் சாதகன் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான ஞான ஒளியில் திளைக்கிறான். மனதில் விளையும் அந்த ஞானத்திலேயே நிலைத்திருக்கிறான். அதையே வெளிப்படுத்துகிறான். அதுவே ஆத்மகோச்சாரவ்ரித்தி, செய்வதும், சொல்வதும், நினைப்பும் ஆத்மா ஒன்றிலேயே சர்வம் சிவம் என்று ஆனந்தமாக இருப்பவன். அவன் சித்தம் இவ்வாறு ஆனந்தத்தில் மூழ்கி இருப்பதால் அவன் பூஜிப்பது உள்ளும் புறமும் ஒன்றேயான பரதெய்வம். இந்த நாட்டமே பராபூஜா எனப்படும்.
நான் மேலே சொன்னதை அருள்சக்தி வார்த்தையில் பார்ப்போம்:
''இந்த ஸகல உலகங்களும் சர அசர வடிவமானவையே. இதனை அத்வைத பாவனை (இருவேறாக காணாத நிலை) என்கின்ற அம்ருதத்தினால் நனைந்ததாக நினைக்கவேண்டும். பிறகு பேதமாகிற அத்யாஸ விகற்பங்களை முற்றுமற, ஒழித்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த ஸாதகன் பரமானந்த பரிதனாக ஆகிவிடுகிறான். பின்பு மிகுந்த உத்ஸாகத்தோடுகூட மனனம் (என்ற நினைத்தலையும்) நிதித்யாஸனம்(என்ற பயிற்சியையும்) இவைகளோடு கூடிய ஆத்மாவை அனுஸரித்த செயலினால் (ஆத்மகோசர வ்ருத்தி)அத்வைத ரூபமான சிவத்தை அறிய வேண்டும். இவ்வாறு உள் வெளி என்ற பேத மில்லாமல் எங்கும் எப்போதும் எதையும் சித்தாகக் காணுவதே பரா பூஜையாம்.''
இந்த சங்கம் சென்னையில் 1989ல் தோன்றியது. ஒரு சிறிய அளவில் சத்சங்கம். அருள் சக்தி நாகராஜன் குஹாநந்தமண்டலி பரம்பரையில் வந்த உபாசகர்.நிறைய தத்துவங்களை சொல்லியும் எழுதியும் வருபவர். ஸ்ரீ சக்ரநவாவரண பூஜைக்கான தத்துவக்கருத்துக்களை கொண்ட நூல் ''சிதானந்தஅலை'' ஸ்ரீவித்யா உபாசக தர்மங்கள், மஹாசக்தி ரஹஸ்யம், லலிதா ஓர் இன்ப கலப்புஎன பல. இன்னும் வெளியாக வேண்டிவையும் உள்ளன. மேலே கண்டவைகளில் சில ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன. அச்சாக வேண்டி காத்திருக்கின்றன.
பல அபூர்வ பூஜைகள், புரஸ்சரண ஜபஹோமங்கள், ஸ்ரீவித்யா, ப்ரஹ்மவித்யா சம்பந்தமான மாநாடுகள் குருவருளால் ஆச்சர்யமாக நடத்தியுள்ளார். விவரங்களுக்கு அவரது இணையதளம் (http://ritanbhara.org) சென்று பார்த்தால் மேற்படியார் ஸபா சம்பந்தமான படங்கள், வீடியோக்கள் என அதில் உள்ளன. ஸ்ரீ வித்யா பூஜைக்கு பாராயணத்துக்கு என தனியான சங்கல்பம் உள்ளது. அது அஷ்டாங்கம் எனப்படும். அதனை தினசரி calculate செய்யாமல் அதில் காணலாம்.(Sri Devi MaanaGananam – Ashtangam)
திரிபுராரஹஸ்யம் என்ற இதிகாசத்தை தினம் குரல் பதிவாக கேழ்க்க தனி vaikari app உண்டு. எல்லாமே கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்.
சென்னை மடிப்பாக்கம் ஒரு நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்து முதல் பிரதி பெற்றேன்.
No comments:
Post a Comment