Wednesday, May 9, 2018

KAPALEESWARAR



ஒரிஜினல் கபாலீஸ்வரம் -- J.K. SIVAN

இன்று வெயிலில் வெளியே சுற்றாமல் மதுரை மணி ஐயர் கச்சேரிகள் பழைய ஒலி நாடாவில் கரகர சப்தத்துடன் இருந்ததை கம்ப்யூட்டரில் யாரோ ரெகார்ட் பண்ணி இருந்ததை கேட்டேன். கபாலி என்ற மோஹன ராக பாடல் மனதை ரொம்பவும் கவர்ந்தது. பாதியில் டேப் அறுந்து பாடல் நின்றுவிட்டது போல் இருக்கிறது. மேலே யாரும் அதை தொடரவிடவில்லை. ஆனால் என் சிந்தனை அறுந்துபோகாமல் தொடர்ந்தது.

தமிழ்நாட்டுக்கோ, சென்னைக்கோ மட்டும் பெருமை இல்லை. உலகத்தில் இருக்கும் அத்தனை சைவர்களுக்கும் கூட மயிலை கபாலீஸ்வரர் என்றாலே ஒரு தனி பெருமை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்கிரமம் நடந்திருக்கிறது. நாம் எல்லோருமே மறந்து விட்டோம். அது தானே நமக்கு வழக்கம், பழக்கம்.

கபாலீஸ்வரர் சென்னை கடற்கரை ஓரம் கோவில் கொண்டிருந்தவர், திருச்செந்தூர், வடக்கே சில க்ஷேத்ரங்களில் இருப்பதைப் போல்.
பல மஹான்கள், நாயன்மார்கள் கபாலியை கடலோரத்தில் கண்டதை பாடி இருக்கிறார்கள்.

15-16ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் கடல்மார்க்கமாக கிழக்கு கடற்கரை வந்தவர்களில் போர்துகீசியரும் உண்டு. அவர்கள் சென்னை வந்தார்கள். கபாலீஸ்வரம் கடற்கரையோரம் கோயில் கொண்டிருந்ததை, அநேக ஹிந்துக்கள் சென்று வழிபடுவதை பார்த்ததும் எண்ணம் தோன்றியது அதை இடித்தால் என்ன என்று. 1535ல் கபாலி கோவில் இடிக்கப்பட்டு ஒரு சிறு வீடு ஆகியது. தெருநாய்கள் சண்டையிடுவதை போல் ஒரு கூட்டம் மற்றொன்றை விரட்டியது. வெள்ளையர்கள் அந்த இடத்தை மீண்டும் இடத்தில் ஒரு தேவாலயம் எழுப்பி இன்றும் அது சாந்தோம் என்ற செயின்ட் தாமஸ் ஆலயமாக இருக்கிறது. எதெதற்கோ வருஷக்கணக்காக சண்டை போடும் நாம் இதற்கு என்ன செய்தொம் என்பது இருக்கட்டும், இது தெரியுமா என்று நம்மை நாமே முதலில் கேட்டுக் கொள்வோம். எவ்வளவோ இழந்த பின் இது என்ன பிரமாதம்.

1923ல் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏதோ தடயங்கள் சாந்தோமில் கோயில் தூண்கள், கல்வெட்டுகள் சிலைகள் இடிபாடுகள் கிடைத்ததில் கபாலி கோவில் சம்பந்தப்பட்டிருக்கிறது இதில் என்று தெரிந்ததாமே, மயிலோடு முருகனும் கிடைத்தானாமே, ஏன் இந்த மௌனம் அம்மா?

ஒரு கல்வெட்டில் “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று உரக்க சொல்கிறது. இன்னொன்று
“திருமயிலாப்பூரில் பூம்பாவை” என்கிறது. ஆகவே நண்பர்களே, சிவ பக்தர்களே, நீங்களும் நானும் இப்போது காணும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் முதலில் இங்கே இல்லை, சென்னை கடற்கரை சாந்தோமில் தான் இருந்தார் என்பதற்கு ஆதாரம் உண்டு. திருஞான சம்பந்தர் கடற்கரை ஓரம் தான் கபாலீஸ்வரம் என்கிறார். பார்வதி கற்பகாம்பாளாக மயில் ரூபத்தில் வந்து கபாலீஸ்வரரை வழிபட்டதால் மயிலாப்பூர் என்று ஐதீகம். சம்பந்தர் மயிலாப்பூர் வணிகன் சிவநேசன் செட்டியார் பூம்பாவையை உயிர்ப்பிக்க பத்து பாடல்கள் (பதிகம்) பாடி அவள் உயிர் பெறுகிறாள். அதில் தான் இந்த கடற்கரை கபாலியை வேண்டுகிறார்.

அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் கபாலியை கடலோரம் பார்த்தேன் என்கிறார்.

இப்போதுள்ள கபாலீஸ்வரர் ஆலயமும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்று ஒரு தகவல் கபாலி அதற்கு முன் கடற்கரை காற்று வாங்கியவர் என்று சொல்கிறதல்லவா.

நாம் வேண்டுமானால் சும்மா இருக்கலாம். அப்போது இருந்த போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு விஜயநகர ராயர் ராஜா, இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையிட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் (Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.

ஆகவே இப்போதுள்ள மயிலை கபாலி கோயில், பதினாறாம் நுற்றாண்டில் மயிலை நாட்டு நயினியப்ப முதலியார் மகன் முத்தையப்ப முதலியாரால் கட்டப் பட்டதாகும். தமிழ் நாடு ஆங்கில ஆவணம் ஒன்று இதை சொல்கிறது:

The Church of St. Thomas-by-the-sea (1842 – 2017) :
-----------------------------------------------------------------------
One of the oldest Anglican Churches in Madras that is now Chennai, St. Thomas English Church owes its origin to the missionaries of the Vepery Mission and Rev. Robert Carver who was instrumental in building the church.

Consecrated on 10th December, 1842, this little Church of St. Thomas-by-the-sea, like the Roman Cathedral, and the Tamil Church of later date, was named in honour of the Apostle Thomas who was martyred and buried in this area. During the British period, “this was the Church of the Protestant elite in Madras, the residents of the garden-houses of Adyar, with the Governor having his own pew.”

Originally known by the name of Meliapore or Mylapore, San Thome has a long and eventful history. This area received its name of St. Thoma (Sao Thome) from the Portuguese who built a fort here. The Dutch, the French, and the English struggled for its possession until Fort St Thoma was ceded in 1479 to the British Admiral Boscawen with the receipt of a character from the Nawab Mohamed Ali Khan. From then on, San Thome remained more or less continuously in English hands.
This is old church of Santhome which was demolished in 1893 and the present Cathedral was built and consecrated on 1st April 1896.

தாலமி எனும் கிரேக்க புவி இயல் ஆராய்ச்சியாளன் (A.D. 90-168) மைலாப்பூரை ‘ மில்லற்பா (Millarpha;) என்று சொல்கிறான்.,. அது பிரபல கடற்கரை துறைமுக நகரம். வியாபாரிகள் நிறைந்தது. இந்த திருமயிலையில் தான் திருவள்ளுவர் ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்தார் என்கிறான். இங்கே மயில்கள் நிறைய இருந்திருக்கின்றன. மயிலை கேசவப்பெருமாள் கோவிலில் தாயார் பெயர் மயூரவல்லி.

சிவனுக்கு ஏன் கபாலி என்று பெயர் தெரியுமா? ப்ரம்மாவின் ஐந்து சிற்பங்களில் ஒன்றை கொய்து அவன் கபாலத்தை கையிலேந்தி, ப்ரம்மா தனது தவறுணர்ந்து மயிலை வந்து ''மயிலையே கயிலை'' என உணர்ந்து பிராயச்சித்தம் செய்து மீண்டும் பிரம லோகம் சென்று படைப்புத்தொழிலை தொடர்கிறார். பிக்ஷாடனராக சிவன் கபாலம் ஏந்தி கபாலி என பெயர் பெறுகிறார்.

மற்றபடி இப்போதுள்ள மயிலை கற்பகாம்பா சமேத கபாலீஸ்வரர் கோவிலை பற்றி அதிகம் எழுதவில்லை, எல்லோருக்கும் தெரிந்ததை மீண்டும் சொல்வானேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...