Thursday, May 31, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்     j.k. sivan
                                                 
                                           
         36    கந்தர்வன் சொன்ன கதை 


பாரதம் என்றாலே ரொம்ப ரொம்ப நீளமாக போய்க்கொண்டிருக்கும் கதைகளின் தொகுப்பு என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற விறுவிறுப்பான அம்சங்கள் கொண்ட பல வகை உணர்ச்சிகளை எழுப்பும் சம்பவங்களையும்  எந்த புத்தகத்திலும்  இவ்வளவு படிக்க வழியில்லை.

அர்ஜுனனுக்கு  கந்தர்வன் சொல்லும் விஷயங்கள் இன்னும் முடியவில்லை.  அர்ஜுனனும் ஆவலாக கேட்கிறான்.


''கல்மஷ்பதன் என்று ஒரு இக்ஷ்வாகு வம்ச ராஜா. எல்லா ராஜாக்களையும் போல் அவனும் ஒரு நாள் காட்டில் வேட்டையாடி களைத்து குடிக்க தண்ணீர் பசிக்கு ஆகாரம் தேடும்போது விச்வாமித்ரரைக் கண்டு அவர் சிஷ்யனானான். ஒருநாள்  வழியில் வசிஷ்டரின் நூறு புத்ரர்களில் முதல்வனான  ஷக்த்ரி என்கிற  முனிவன்  எதிரே பாதையில் வருவதைப் பார்த்து ''வழியை விட்டு தூரம் போ'' என்கிறான். முனிகுமாரன் அவனுக்கு நீதி புகட்டுகிறான். அரசர்கள் பிராமணர்களையும் ரிஷிகளையும் சந்திக்கும்போது அவர்களுக்கு உபசாரம் செய்யவேண்டும். எனவே நீங்கள் தான் முதலில் வழி விடவேண்டும்'' என்கிறான்.

கல்மஷ்பதன்  வெகுண்டு சாட்டையால் முனிகுமாரனை அடிக்க, அவன்   ''நீ  ராக்ஷசத்தனமாக நடந்துகொள்வதால் ஒரு ராக்ஷசனாகப் பிரப்பாயாக''  என்று  சபிக்க,  கல்மஷ்பதன் சுருண்டு விழுந்து இறக்கிறான்.  அந்த பக்கமாக  விஸ்வாமித்திரர்  வந்து விஷயம் அறிகிறார். கல்மஷ்பதன் உடலில் ஒரு ராக்ஷசனை   விஸ்வாமித்ரர்  குடியேற்றுகிறார் .

அந்த  ராக்ஷசனை  ஒரு  பிராமணன் ஒரு நாள்  காட்டில் சந்திக்கிறான். பசியால்  வாடும்  அவனுக்கு  ராக்ஷசன்  மனித மாமிசத்தை அளிக்கிறான்.  பிராமணன்  பசியோடு வாடியவன் ''கல்மஷ்பதா,  என்னை   ஏமாற்றி நர மாமிசத்தை உணவாக அளித்த   நீ  இனி  மனித மாமிசத்தையே உணவாக தேடி வாடி அலைவாய்''  என்று சபிக்கிறான்.

இவ்வாறு சபிக்கப்பட்ட விச்வாமித்ரனின் சிஷ்யன் கல்மஷ்பதன்  தான் வசிஷ்டர் மகன் விச்வாமித்ரரோடு  வழி யாருக்கு யார் முதலில் விடவேண்டும் என்று வாதித்துக் கொண்டிருக்கும்போது வசிஷ்டரின் குமாரன் ஷாக்திரியைக்கொன்று விழுங்கிவிட்டான். விச்வாமித்ரரின் தூண்டுதலால்  வசிஷ்டரின் மற்ற 99 குமாரர்களையும்  கொன்று  புசித்து விட்டான்.

பிரம்ம ரிஷி வசிஷ்டர்,   விச்வாமித்ரரின்  இந்த செயலால் தனது 100 புத்ரர்கள் மாண்டதை அறிந்து துளியும் கோபமோ வருத்தமோ கொள்ளவில்லை. தனது தவ வலிமையால்  கௌசிகனையோ அவன் வம்சத்தையோ  பூண்டோடு அழிக்கவில்லை.  யமனிடத்தில் வேண்டி  இறந்த தனது 100 புத்ரர்களை உயிர்ப்பிக்க யாசிக்கவும் இல்லை. மிகுந்த வருத்ததோடும் வேதனையோடும் வசிஷ்டர்  தனது உயிரைத் தியாகம் செய்ய தீர்மானித்து,  மலைமீதிருந்து வீழ்ந்தபோதும்,  கடலில் குதித்தபோதும், தீயில் இறங்கியபோதும்  அவரது தவ வலிமை அவரை பாதுகாத்து  மீட்டதால் அவர் தனது ஆஸ்ரமத்துக்கு திரும்பவும்  மீண்டார். தவத்திலேயே காலம் கழித்தார்.

ஆஸ்ரமத்துக்கு  அவர்  திரும்பியபோது அவர் பின்னே  யாரோ வேதங்களை உச்சரிப்பது காதில் விழவே திரும்பிப் பார்த்தவர்  தனது மகன் ஷக்த்ரியின் மனைவி அத்ரிஸ்யந்தி  தன் பின்னே தொடர்ந்து வருவதைக் கண்டார்.

'' யாரம்மா இங்கே இப்போது  வேதம் ஓதியது?''

''தந்தையே, தங்கள் புத்திரன்  ஷக்திரியின் குமாரன் என் வயிற்றில் வளர்பவன் தான் வேதங்களை ஓதியவன்'' என்கிறாள். வசிஷ்டர் மகிழ்கிறார்.  வசிஷ்டர் வம்சம் இனி தொடருமே .

ஒருநாள் காட்டில்  தனது மகன்களைக் கொன்ற  கல்மஷ்பதனை  வசிஷ்டர்  காண்கிறார்.  அவர் மகன் அல்லவா அவனை சபித்தது என்று  வெகுண்டு அவரையும் கொன்று தின்பதற்கு முயல்கிறான் கல்மஷ்பதன்.   வசிஷ்டர்  அவன் மேல் பரிதாபம் கொண்டு கமண்டலத்தில் நீர் எடுத்து மந்திரம் ஜபித்து  தெளித்து அவனை பழைய ராஜாவாக மாற்றுகிறார். அவன்  செய்த  தவறுகளுக்கு அவரிடம் மன்னிப்பு பெறுகிறான். அயோத்தி திரும்புகிறான்.  அவனது இக்ஷ்வாகு குலமும்  வாரிசுகளை  பெறுகிறது.

ஆஸ்ரமத்தில் குறித்த காலத்தில்  ஷக்த்ரியின் மகன் பிறந்து  வசிஷ்டரால்  பராசரன்  (உயிரூட்டுபவன்)  என்று பெயர் பெறுகிறான். பராசசர  முனி பின்னர்  யாகம் வளர்த்து  தனது தந்தையை  ஒரு ராக்ஷசன் கொன்றதால்  எல்லா  ராக்ஷசர்களையும்   யாகத்தீயில் விழுந்து மாள ஒரு யாகம், ஹோமாக்னி, வளர்க்கிறார்.  நிறைய  ராக்ஷசர்கள்  மந்திர சக்தியால்  கவரப்பட்டு  அவரது  ஹோமத்தீயில்  வந்து விழுந்து மாள்கிறார்கள்.

இதை அறிந்த வசிஷ்டரும் புலஸ்திய ரிஷியும்  ''பராசரா, போதும்  நிறுத்து,  உன்னால் மாண்டு போகும் ராக்ஷசர்கள் எந்தவிதத்திலும் உன் தந்தையின் மரணத்துக்கு  காரணம் இல்லை.  எனவே இவர்களை கொல்லும்  இந்த யாகம்  போதும் '' என்று  அறிவுரை கூற பராசரரின்  யாகம் முடிகிறது.

இன்னும்  நிறைய  உப கதைகளை  கந்தர்வன் அர்ஜுனனிடம் கூறியதும்  ''ஒ  கந்தர்வா, நீ எப்படி இவ்வளவு சரித்ரங்களை அறிந்திறிக்கிறாய் என்று ஆச்சர்யப்படுகிறேன்.  எனக்கு  ஒரு நல்ல  ரிஷியை  ஆசானாக  காட்டு''  என்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான்.

''அர்ஜுனா,   நீங்கள் செல்லும் இந்த காட்டில்  ஒரு ரிஷி இருக்கிறார்.  தௌம்யர்  என்று பெயர். அவரை  குருவாக  ஏற்றுக்கொள்ளுங்கள்.''

அர்ஜுனனும்  மற்ற பாண்டவர்களும்  கந்தர்வனிடம் விடை பெற்று  பாகீரதி நதியைக் கடந்து   தௌம்யரின்  உத்கோசக ஆஸ்ரமத்தை அடைகிறார்கள்.   அவர் அவர்களை மனமுவந்து உபசரித்து  அவரோடு ஆஸ்ரமத்தில் தங்கச் செய்கிறார்.  சிஷ்யர்களாக ஏற்கிறார். அவரின்  பிராமண சீடர்களாக  பாண்டவர்கள்  பாஞ்சால தேசம்  நோக்கி  செல்லும்போது வழியில் நிறைய பிராமணர்கள்  செல்வதை பார்த்து  யுதிஷ்டிரன் கேட்கிறான்

''எங்கே  இவ்வளவு கூட்டமாக  பிராமணர்கள்  செல்கிறீர்கள். எங்கே  என்ன  விசேஷம்?

''சற்று தூரத்தில் பாஞ்சால தேசம் இருக்கிறதே,  அங்கு மன்னன் மகளுக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. அநேக ராஜாக்கள் வருகிறார்கள். பிராமணர்களுக்கு நிறைய தான தர்மங்கள்  நடைபெறும்.பொன்னும் பொருளும்  கிடைக்குமே.   எனவே  நாங்கள் அங்கே செல்கிறோம்''.

''பாஞ்சால தேசமே ஒரே  கோலாகலமாக  இருக்கிறதே''

''இருக்காதா  பின்னே?'   எல்லா  ராஜாக்களும்  வருகிறார்கள்.  அவர்களுக்கு வீர  விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறப்போகிறதே.  அவற்றில் வென்றவனை  துருபதன் மகள் பாஞ்சாலி   கணவனாக   ஸ்வயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.   உங்களைப்பார்த்தாலே  ராஜா மாதிரி இருக்கிறீர்கள்.  ஒருவளை நீங்களும் போட்டிகளில் பங்கேற்று  வென்று உங்களில் ஒருவன்  அவளது  கணவனாகலாம். போல்  இருக்கிறதே  என்றார்கள் பிராமணர்கள்.'

''பிராமணர்களே  நீங்கள்  சொல்வதே  நாங்களும் போட்டிகளைக்  கண்டு மகிழ்ந்து வெற்றிபெறுவது போல்  சந்தோஷம் அளிக்கிறது.  நாங்களும் உங்களோடு வந்து அந்த கோலாகல வைபவம் காண்கிறோம்.''

பாண்டவர்கள்  துருபதன் அரண்மனையை அடைந்தார்கள்.

A memorable day




A MEMORABLE DAY - J.K. SIVAN

On 29th May 2018 I was busy in attending a couple of places where Maha Periyava Anusha 125 birth anniversay celebrations were held in a grand manner.

The first one was at Adambakkam, purely by the sincere effort of an individual devotee of Periyava, who for the past nearly a decade has been celebrating it in the best possible way, feeding a few, performing homa, rithwik chanting of Rudhram Chamakam, Sukthams, etc., besides performing a Dhampathi pooja, to some elderly couple, and in the evening procession of Maha Periyava picture in the neighbouring streets and distribution of prasad. Ofcourse I was happy to be invited for the Dhampathi pooja with my wife.

The second occasion was a visit to 'PERIYAVA ILLAM'' a house dedicated to Maha Periyava pictures, lectures, and sathsang, besides being a Patasala for training brahmin children in Vedhas.

Sri Prakash, a dedicated bachelor septuagenerian, who first met me at our SKSS STALL IN VELACHERI, DURING HINDU SANATHANA SPIRITUAL FAIR this year, runs the Patasala with his own efforts and donations. He says ''Our Krishna Yajur Veda Patasala is run by our trust " Thiaga Sastha Trust" since 2002 under the able guidance of our guru Shri Sethalapathi Subramania Ganapadigal. So far 6 Ganapadigals and 8 Kramapatigals have completed their course and we have 11 students at present. Donors are eligible for their donation to our trust under Sec 80 G of IT Act. Pl visit us.'' It is now upto you to encourage the activities of Sri Prakash and assist him in his noble cause. The institution is at Madampakkam. Sri Prakash can be contacted at his mob No.92831 70890

I was happy to be with the present set of Vidyarthis who are undergoing training in Vedas at the Patasala.




I was equally happy to speak on Maha Periyava's Grace and the unforgettable miraculous experiences of some of the devotees. Incidentally I met with a 93+ super senior Sanskrit teacher who lives alone, cooking his food, washing his clothes and walking nearly 1 km or two from his place to the Patasala to teach sanskrit freely to all . Something we should learn from such persons to serve fellowmen. I presented the laminated pictures of Adhi Sankara and Parfamacharya and freely distributed a few copies of my latest book on Adhi Sankara ''Sankara Prasadham'' containing a few slokas of the Acharya with meanings in tamil.

TULSIDAS




துளசிதாசர்: J.K. SIVAN

' ஐயோ மத யானை வருகிறதே....!
சில கதைகள் படிக்கும்போது அதில் வரும் பாத்திரங்கள் நடந்து கொள்ளும் விதம் நமது மனதில் பதிந்து விடுகிறது. அதே கதையை வேறு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இன்னொருவருடைய அனுபவமாக படிக்கும் போதோ, கேட்கும்போதோ, அடடே எது சரியானது என்று கேள்விக்குறி மண்டையில் நுழைகிறது. ரெண்டு பேர் எங்கெங்கோ ஒரே மாதிரி அனுபவத்தை கொஞ்சமும் மாறாமல் பெற முடியாதே.

பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர். ஒருநாள் இரவு வேளை...

மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார். மனம் முழுவதும் அவளது நினைப்பு! வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது. ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது. கட்டையாக இருக்க வேண்டும்! அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! மழையின் சப்தத்தில், அவர் கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்து தொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார்.
ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார்.

திடுக்கிட்டு எழுந்த மனைவி, கணவன் அங்கே நிற்பது கண்டு, ""நீங்களா! இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்? வீடு வேறு பூட்டியிருந்ததே!'' என்றாள்.

நடந்ததைச் சொன்ன கணவர், அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.

மறுநாள் விடிந்தது. அவள் மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள், அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள். ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.

''பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் என்று! இந்த உடல் தரும் சுகம் தற்காலிகமானது தான் இதன்மீது பற்றுக் கொண்டிருப்பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்!'' என்றாள். அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.

சே என்ன காரியம் செய்தேன். ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா! அவள் சொன்னது சரிதான்.
மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.

"நீயே என் குரு' என்றார். உடனேயே எழுதுகோலை எடுத்தார். ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். "ஸ்ரீராமசரிதமானஸ்' என்று பெயர் சூட்டினார். அவர் தான் துளசி தாசர் என்று இப்போது அறிகிறேன். ஆனால் இதே கதை ஈ அடிச்சான் காப்பியாக படித்திருக்கிறேன். பில்வ மங்கள் என்ற ஹரிதாஸ் ... அங்கே மனைவிக்கு பதிலாக ஒரு நாட்டிய மாது. பொதுமகள் ..

ம்ம் ... துளசிதாசர் என்றே எடுத்துக்கொண்டு மேலே தொடர்வோம். துளசிதாசர் எழுதிய அந்த நூல் தான் "துளசி ராமாயணம்' என உலகம் இப்போது பாராயணம் செயகிறது.

இப்போது நமக்கு ஏற்கனவே அறிமுகமான இன்னொரு மஹானை பற்றி சொல்லியாகவேண்டும். அவர் பெயர் நீங்கள் அறிந்த சூர்தாஸ். பிறவியிலே கண்பார்வை அற்றவர். கண்ணற்ற குழந்தையை குடும்பம் ஒதுக்கி வைத்தது.

ஒருநாள் யாரோ தெருவில் கிருஷ்ண பஜனை பாடிச் சென்றது சிறுவன் சூர்தாஸ் மனதுக்கு பிடித்தது.

எவரையோ உரக்க ''நீங்கள் பாடியது பிடிக்கிறதே. யாரை பற்றி இந்த பாட்டு ?''
''அடே பையா, இது கிருஷ்ண பகவானை பற்றிய பஜனை?''
''யார் கிருஷ்ணன், அவனை பற்றி சொல்லுங்களேன்?''
கிருஷ்ண சரித்திரம் சுருக்கமாக சொல்லக் கேட்டு மனம் பரவசமாகிறது. கிருஷ்ணன் எப்படி இருப்பான் என்று கேட்டு அறிகிறார்?
''அவன் பால கிருஷ்ணன், குழந்தை, புல்லாங்குழல், பசுக்கள், பிருந்தாவனம், கோப கோபியர்கள், வெண்ணை திருடன், நீல வர்ணன், பீதாம்பர வஸ்திரம், யமுனை நதி விளையாட்டு, மயில்தோகை அணிந்தவன், என்றும் புன்னகை தவழும் முகம், அவன் இசையால் புவியே மயங்கும்''' என்று அவனை வர்ணிக்கிறார் பாகவதர். போய்விட்டார்.

அன்றுமுதல் சூர்தாசர்மனதில் கண்ணன் உறைந்தான். பாடல்களாகினான். எண்ணற்ற பக்தர்கள் கேட்டு மயங்கினார்கள்

ஆற்றங்கரையில் கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பக்தர்கள் அவர் பசியாற உணவு அளிக்க ஆயிரக்கணக்கான பாடல்களாக சூர் சாகரமாக கிருஷ்ணன் மாறினான்.

இனி ஒரு சுவாரசியமான கதை சொல்லி முடிக்கிறேன்.

சூர் சாகரம் என்று அடிக்கடி கண்ணில்லாத சூரதாஸர் கிருஷ்ணன் சரித்திரம் சொல்வதை கிருஷ்ணனே சிறு குழந்தையாக அவர் எதிரே அமர்ந்து கேட்கும் படத்தோடு எழுதுகிறேன். நீங்களும் ஆர்வத்தோடு படிக்கிறீர்கள். அந்த சூரதாஸர் துளசி தாசர் காலத்தை சேர்ந்தவர் தான். நண்பர்கள்.எப்படி பழக்கமாயிற்று என்பது தான் இன்றைய விஷயம்.
ஒருநாள் துளசி தாசர் எங்கோ செல்லும்போது வழியில் ஆற்றங்கரையில் சூர் தாசர் வழக்கமாக ஒரு மூலையில் அமர்ந்து கிருஷ்ணன் பாடல்களை இயற்றி மனதில் சந்தோஷமாக ரசித்து பாடிக்கொண்டிருப்பார் . அங்கே வரும்போது சூரதாஸர் பாடல் அவரை ஈர்க்கிறது. அருகே செல்கிறார். அமைதியாக கேட்டு தன்னை மறக்கிறார். பிரிந்தாவனத்துக்கே அவரை அழைத்துச் செல்கிறார் சூரதாஸர். பாட்டு முடியும் வரை சிலையாக நின்று கண்களை மூடி ரசித்த துளசிதாசர் சூர்தாசரை வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

''ஓ நீங்கள் துளசிதாசரா. உங்களை பற்றி சொல்வார்கள். அற்புதமான ராம பக்தர். உங்களை தரிசிக்கும் பாக்யம் எனக்கு இல்லை. தொட்டு பார்த்து வணங்குகிறேன்''--- சூர் தாஸ்.

''மஹானுபாவா , இனி தொடர்ந்து உங்களோடு நட்பு கொண்டு நான் உங்களோடு இருப்பேன்'' என்கிறார் துளசிதாசர்.

''ஆஹா கிருஷ்ணன் மேல் கீர்த்தனைகள் நிறைய சேர்ந்தே பாடுவோம் '' என்கிறார் உற்சாகமாக சூர் தாஸ் .

ஒரு நாள் ராஜாவின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து தெருவில் ஓடிவருகிறது. கோவில் அருகே சூரதாஸ் துளசிதாஸ் இருவரும் நிற்கிறார்கள். '

''ஓடுங்கள் ஓடுங்கள் யானை வருகிறது. எதிரே யார் இருந்தாலும் கொன்றுவிடும்'' மக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

''யானை என்பது பெரிய மிருகமாமே, எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே என்கிறார் சூர்தாஸ் '

''சூரதாஸ் நாம் இருவரும் கவலைப்படவேண்டாம். நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் அவன் பார்த்துக்கொள்வான். ஒரு ஓரமாக நிற்போம்''

கிருஷ்ணனை தியானித்து கண்மூடி துளசிதாசர் சிலையாக அமர்ந்திருக்க யானை அருகே வந்துவிட்டது. பார்த்தது. ஒருகணம் நின்றது. மெதுவாக அவர் எதிரில் நின்றது தும்பிக்கையால் அவரை வணங்கியது அமைதியாக அவரை சுற்றி வந்து திரும்பியது. எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது தான் துளசிதாசர் மெதுவாக தியானத்திலிருந்து கண் விழித்தார்.

துளசிதாசருக்கு அப்போது தான் சூர்தாஸ் பற்றி நினைப்பு வந்தது. ''எங்கே சூர்தாஸ் ? காணோமே.'' சற்று தூரத்தில் மரத்தின் பின்னே இரு கைகளாலும் நெஞ்சை மறைத்துக்கொண்டு நடுங்கியபடி சூர்தாஸ் நிற்பது தெரிந்து அவரை அழைத்துக்கொண்டு வருகிறார். கண் தெரியாத அவருக்கு எல்லோரும் விஷயம் சொல்கிறார்கள்.

''சூர்தாசர் எனக்கு ஒரு சந்தேகம் உங்களை நேரடியாக கேட்டுவிடுகிறேன்?'' ஏன் எல்லாரையும் போல் நீங்களும் யானையை கண்டு பயப்பட்டு நடுங்கினீர்கள்?'' நான் தான் நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான் என்றேனே ''

''துளசிதாசரே நீங்கள் ஒரு உன்னத கிருஷ்ண பக்தர் என அறிவேன். உங்கள் மனதில் இருக்கும் கிருஷ்ணன் நீங்கள் கண்ணை மூடி தியானத்தில் இருக்கும்போது வந்த அந்த பொல்லாத கோபமான யானையை கிருஷ்ணன் விரட்டி விடுவான் என்று தைரியமாக இருந்தீர்கள்.

ஆனால் என் மனதில் இருக்கும் கிருஷ்ணன் ஒரு குட்டிப்பயல். இதுவரை எனது மனதில் அவனை குழந்தையாகவே நான் அறிவேன். அவனது சிரித்த விளையாட்டு முகம் ஒன்றே நான் அறிந்தது. பல பாடல்கள் அப்படியே அவனைப் பற்றி பாடியுள்ளேன். நீங்கள் சொன்னது போல் யானை மிக பெரிய மிருகம், அதற்கு மதம் என்று ஏதோ சொன்னீர்களே அது பிடித்தால் ரொம்ப ஆத்திரமடைந்து எல்லோரையும் தாக்கி கொன்றுவிடும் என்று சொன்னீர்களே..

ஒருவேளை என் மனதில் உள்ள குழந்தை கிருஷ்ணன் அந்த பெரிய யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால்?? நான் எப்படி அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியும்? எனக்கு சிரிக்கும் கிருஷ்ணன் தான் பிடிக்கும். அழுபவர்களை கண்டாலே பிடிக்காது. ஆகவே என் இரு கைகளாலும் என் நெஞ்சை மூடி மறைத்து கொண்டேன். என் நெஞ்சின் உள்ளே இருக்கும் அவனுக்கு யானை கண்ணில் படாது அல்லவா, பயம் தோன்றாது அல்லவா, அழுகை வராது அல்லவா? '' என்கிறார் சூர்தாஸ்

இதை கேட்டதும் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

அப்புறம் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததை , அவர் சூர்தாசரின் கிருஷ்ண பக்தியை உணர்ந்ததை, சிலையாக நின்று ரசித்து அவர் பாதங்களில் விழுந்ததை பற்றி நினைப்போம்.

Wednesday, May 30, 2018

kala bairavar



கால பைரவாஷ்டகம். 5  j.k. sivan 


கீழே  64 பைரவர்கள் பட்டியல் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பைரவரைப் பற்றியும் சொன்னாலே ஒரு புத்தகம் போட்டுவிடலாம். ரெடிமேட்  தலைகாணி தயாராகிவிடும்.

நீலகண்ட பைரவர்
விசாலாக்ஷ பைரவர்
மார்த்தாண்ட பைரவர்
முண்டனப்பிரபு பைரவர்
ஸ்வஸ்சந்த பைரவர்
அதிசந்துஷ்ட பைரவர்
கேர பைரவர்
ஸம்ஹார பைரவர்
விஸ்வரூப பைரவர்
நானாரூப பைரவர்
பரம பைரவர்
தண்டகர்ண பைரவர்
ஸ்தாபாத்ர பைரவர்
சீரீட பைரவர்
உன்மத்த பைரவர்
மேகநாத பைரவர்
மனோவேக பைரவர்
க்ஷத்ர பாலக பைரவர்
விருபாக்ஷ பைரவர்
கராள பைரவர்
நிர்பய பைரவர்
ஆகர்ஷண பைரவர்
ப்ரேக்ஷத பைரவர்
லோகபால பைரவர்
கதாதர பைரவர்
வஞ்ரஹஸ்த பைரவர்
மகாகால பைரவர்
பிரகண்ட பைரவர்
ப்ரளய பைரவர்
அந்தக பைரவர்
பூமிகர்ப்ப பைரவர்
பீஷ்ண பைரவர்
ஸம்ஹார பைரவர்
குலபால பைரவர்
ருண்டமாலா பைரவர்
ரத்தாங்க பைரவர்
பிங்களேஷ்ண பைரவர்
அப்ரரூப பைரவர்
தாரபாலன பைரவர்
ப்ரஜா பாலன பைரவர்
குல பைரவர்
மந்திர நாயக பைரவர்
ருத்ர பைரவர்
பிதாமஹ பைரவர்
விஷ்ணு பைரவர்
வடுகநாத பைரவர்
கபால பைரவர்
பூதவேதாள பைரவர்
த்ரிநேத்ர பைரவர்
திரிபுராந்தக பைரவர்
வரத பைரவர்
பர்வத வாகன பைரவர்
சசிவாகன பைரவர்
கபால பூஷண பைரவர்
ஸர்வவேத பைரவர்
ஈசான பைரவர்
ஸர்வபூத பைரவர்
ஸர்வபூத பைரவர்
கோரநாத பைரவர்
பயங்க பைரவர்
புத்திமுக்தி பயப்த பைரவர்
காலாக்னி பைரவர்
மகாரௌத்ர பைரவர்
தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலையில்  தரிசனம் தருகிறார்.    செல்வத்திற்கு அதிபதியான பைரவர் என்பதால் சொர்ண ஆகர்ஷண பைரவர். டது கையில் கபாலம்  காணோம். ஆனால்  அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தருபவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்வது வழக்கம்.  இவரை வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். இரண்டு நாய் வாகனங்கள்.

தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம்  கதிராமங்கலம்  அருகில் காவேரி   வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என அதற்கு பெயர்.   காவேரிக்கு   மேற்கு கரையில் வினாயகர்.காசிவிஸ்வநாதர் கோவில்கள் உண்டு.  இந்த ரெண்டு  கோவில்கள் நடுவே  மிக பழமையான இரட்டை கால பைரவர் கோவில் ஒன்று  இருக்கிறது. . தர்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூஜைகள்.  திருமணதடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது ஐதீகம். 


காசியில் காவல் தெய்வம், ரட்சிக்கும் தெய்வம்   காலபைரவர்.   முதலில் கால பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும்.  காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும்.

"அமர்தகர்"  (அகங்காரத்தை அழிப்பவர்) ,   "பாப க்ஷணர்"(பாபங்களை போக்குபவர்)  என்று  கூட  பைரவருக்கு  பெயர் உண்டு. .

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு  அணிவிக்கும்  புஷ்பங்கள். வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூ  போடுவதில்லை.  மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சார்த்தலாம். 
.

POONDI SWAMI



சித்தர்கள்: J.K. SIVAN

பூண்டி சாமியார் 7

பரணீதரன் பூண்டி சாமியாரை விடுவதாக இல்லை. மேலே குட்டி குட்டியாக கேள்விகள் கேட்டு விஷயம் சேகரித்தார்.

''சுவாமி, நீங்கள் ஏன் மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து கடலாடி கிராமம் வந்தீர்கள்?''

''நான் தான் சொன்னேனே, காலாற அப்படியே சிங்காரவாடி போகணும்னு தான் நடந்து வந்தேன்.''

''ஓ சுவாமி சிங்காரவாடி எங்கே இருக்கிறது?''

''கடலாடி கிட்டே தான். நான் எங்கே போனாலும் எதையும் குறிப்பா தேடித் போறதில்லே.எங்கே போனாலும் ஏமாற்றத்தோடு வருத்ததோடு அது கிடைக்கலேன்னு திரும்பறதும் இல்லை. அன்னிக்கு ஏனோ தெரியலே ஏ போகலாம் னு தோணிச்சு, நமக்கு ஊரென்ன பேரென்ன? போலீஸ் ஸ்டேஷன் வந்தது. எனக்கும் களைப்பா இருந்ததா, அப்படியே காலை நீட்டி படுத்தேன். ஒரு சாயபு வந்தார் ''சாமி எதுக்கு இங்கே வந்தீங்க?'' என்றார்.

''எந்த சாயபு?''

''உனக்கு காதர் பாட்சா தெரியாதா? நல்ல மனுஷன். நல்லா பேசுவார். ரொம்ப கெட்டிக்காரர். புத்திசாலி. நான் பேசாம இருந்தேன். அவர் கேட்டதுக்கு பதிலே சொல்லலே''

''சாமி இதை கேளுங்கோ. இங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்குது. யாரும் அதை கவனிக்கல. அபிஷேகம் பூஜை ஒண்ணுமே கிடையாது. நீங்க யாராவது ஒருத்தரை அந்த பிள்ளையார் கோவிலை சரியா பராமரிக்க சொல்ல கூடாதா?'' அப்டின்னாரே பார்க்கணும் அந்த முஸ்லீம்''
''பேச்சு கொடுத்து பார்க்கிறாரா. பார்க்கட்டும். நான் பதிலே சொல்லலே. அவர் கிட்டே பேச்சு கொடுத்து மாளாது. பேசாம தூங்கிட்டேன்.

மறுநாள் கார்த்தாலே, எழுந்து நடந்தேன். வயல் பக்கம் மம்புட்டி அறுவாள், கடப்பாரை எல்லாம் எடுத்துக்கிட்டு அஞ்சு ஆறு குடியானவங்க போய்க்கிட்டு இருந்தாங்க. கம்பு விதைச்சிருந்தது எங்கே பார்த்தாலும். கவர்மெண்ட் பஸ் தெருவிலே வந்தா மரத்தடிலே நிக்கும். புளிய மரத்தடியே பத்து பன்னிரண்டு பேர் மூட்டை முடிச்சோட நிக்கிறாங்க. அப்போ நிறைய பேர் திருப்பதி போற சமயம். அவங்களும் திருப்பதி தான் போறாங்க போல. அங்கே காதர் பாட்சா வந்துட்டாரு. ஒரு மாம்பழம் வச்சிருக்காரு கையிலே. பாக்கெட்லேருந்து பேனா கத்தி எடுத்தார். கூரா இருந்தது கத்தி மள மள ன்னு தோலை சீவி இந்தாங்க சாமி சாப்பிடுங்க ன்னு என்கிட்டே நீட்டினார். அவர் கிட்டே பேசி ஜெயிக்க முடியாது. பேசாம பழத்தை வாங்கினேன். சாப்பிட்டேன்"

பூண்டி சாமியார் கடகட வென்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே போகிறாரே. அவர் சொன்னதை எல்லாம் நான் நேரில் இருந்து பார்த்தது போல் அவருக்கு பிரமையா. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே அவர் பேச்சில் கலந்து சில இடங்களில் புரிபடாது. அவர் நேரம் காலம் கடந்தவர். அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

அவர் எண்ணப்போக்கை தடை செய்யாமல் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

''எனக்கு ஊருமில்லை பேருமில்லை என்கிறீர்களே சாமி. அப்படி யாராவது பிறக்க முடியுமா சுவாமி ''

கோணலாக பார்த்த சாமியார் ''ஏன் முடியாதா?'' என்று பரணீதரனையே கேள்வி கேட்டார் சாமியார்

பூண்டியில் திண்ணையில் சாமியாருக்கு வழக்கமான பூஜை முடிந்தது. திண்ணையில் படுத்தார். அவர் தலைமாட்டில் நின்று கொண்டிருந்தார் பரணீதரன். சாமியாரை கவனித்துக்கொள்ள ஊரார் ஒரு குழு நியமித்திருந்தார்கள். குழுத்தலைவர் பரணீதரனை உபசரித்தார். சாமியாரை கேள்விகள் கேளுங்கள் எங்களுக்காக என்கிறார்.

''சுவாமி, பர்வத மலை பற்றி சொல்லுங்
களேன்.''

"தெருக்கள் நிறைய இருந்தது. அங்கங்கே ஏதோ ஒன்றிரண்டு சாப்பாடு ஹோட்டல். கடைகள். நான் படியேறி மேலே போனேன். கதவை தட்டினேன். உள்ளே ஒரு டஜன் ஆசாமிங்க இருந்தாங்க. சரி இப்போ நேரம் சரியில்லேன்னு திரும்பி கீழே வந்துட்டேன்.''

சாமியார் சொன்னது ஏதாவது புரிகிறதா? இல்லை ஏதோ முக்கியமான விஷயம் அதில் இருக்கிறது

தொடரும்....

Tuesday, May 29, 2018

GRASS




ஒரு புல்  பேசுகிறது -- J.K. SIVAN

எதிலும் நல்லதையே நினைப்பது,  நன்றாகவே நடந்தது என கருதுவது தான்  ஆங்கிலத்தில்  பாசிட்டிவ் திங்கிங்  என்று சொல்கிறோம் அல்லவா.  இது எல்லோருக்கும் மிக அவசியம். துயரத்தை, துன்பத்தை, ஏமாற்றத்தை தவிர்க்கும் எளிய  காசில்லாத சாதனம். இருக்கும் காலத்தை,  அதுவும்  குறுகிய  உலக வாழ்வை இன்ப மயமாக்கும்.  இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும் என்றாலும் மனிதர்களுக்கு மட்டும் ஏன் உபதேசம் செயகிறோம் தெரியுமா? . மற்ற ஜீவராசிகள் அழுவதில்லை, வெளியே சொல்லி ஏங்குவதில்லை, பொறாமைப் படுவதில்லை.  மௌனமாக இறைவன் விட்ட வழி என்று சந்தோஷமாக காலத்தை கழிக்கின்றன. எதிர்ப்பதில்லை, பேசுவதில்லை, ஏசுவதில்லை.

உதாரணமாக  ஒரு புல் என்ன நினைக்கிறது என்று யோசிப்போம். ரொம்ப அல்பமாக நாம் உதாரணம் காட்டுவது புல்லைத் தானே. அதையே எடுத்துக்காட்டாக கொள்வோம்.

''நான் பாக்ய சாலி, என்னைப்போல் எத்தனை பேர்  இங்கே, அப்பப்பா,   பச்சை பசேல் என்று. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது என்று எங்களை தானே சொல்கிறார்கள்.  பெரிய பணக்காரர்கள் வீட்டில் எங்களை வளர்க்கிறார்கள் காசு கொடுத்து வாங்கி... இன்னும் என்ன! கிருஷ்ணா,  உனக்கு நன்றி எங்களை படைத்ததற்கு.

புல் இப்படி பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும்போது நறுக்கென்று ஏதோ பல் அதன் மேல் பட்டது.  ஓஹோ  ஒரு பசு வந்து அதை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதோ. ஓஹோ  இப்படி ஒரு நிலையா என்ன செய்வது என்று நினைக்கும் முன்பே  பசு அதை அரைத்து நின்றுவிட்டது.  அது நினைவை இழந்து அடையாளம் இன்றி மாவாகி கூழாகி பசுவில் வயிற்றில் பாலாகியது. புல் மீண்டும் நினைவு பெற்று தன்னைஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு சிரித்தது.  பச்சையாக இருந்த நான் ஒரு பாத்திரத்தில் வெள்ளை திரவமா?  பால் என்று பெயரா எனக்கு??எனக்கு முன்பை விட மரியாதை மதிப்பு கூடி இருக்கிறதே.  பரவாயில்லையே .!

அதை காய்ச்சினார்கள் சூடு பொறுத்துக் கொண்டது. வெள்ளையாக கெட்டியாக ஏதோ திரவம் அதோடு கலந்து அமைதியாக சிறிது நேரம் கழிந்தது.  புல் பாலாகி இப்போது அதன் பெயர்  தயிர்.  என்னை சுடவைக்கவில்லை இப்போது. சந்தோஷம் தான். எனக்கு ஏன் ஒரு மணம் இப்போது. உறைந்து போயிருக்கிறேன்.   மத்தினால்  தயிரை கடைந்தார்கள். அந்த ஆட்டம் அதற்கு பிடித்தது.  சிறிது திரவமாக  மோராக மாறியது, கெட்டியாக வாசனை மிக்க வெண்ணையாக பாதி மாறியது .  எனக்கு ரெண்டு உருவமா இப்போது? .  என்னை விரும்புகிறார்கள் அதிகம் இப்போது என்று பெருமைப் பட்டது.  எந்த மனிதன் நான் புல்லாக இருந்தபோது இகழ்ந்தானோ அவன் என்னை மோராக குடித்து  புகழ்கிறான். வெண்ணையாக பார்த்து மதிக்கிறான்.  ஓஹோ இன்னும் என்ன வேடிக்கை நடக்கிறது இங்கே எனக்கு  என பார்க்கிறேன்.

இனி என்னை நெருப்பில் வாட்டமாட்டார்கள் என்று நான் சொல்லி வாய் மூடவில்லை, ஒரு பாத்திரத்தில் நான் சூடாக கரைகிறேன். இனி நான் வெண்ணை இல்லை. என் பெயர் இனி வாசமுள்ள  நெய் .  என் மதிப்பும் உயர்ந்து விட்டது.

எங்கோ எடுத்துச் சொல்கிறார்கள்.  பல மலைப்பாதைகள் நான் அய்யப்பன் சந்நிதியில் இப்போது.   மிக்க பக்தியோடு என்னை  தலையில் அல்லவா சுமந்து போகிறார்கள்.  காட்டுப்பாதை முடிந்து அய்யப்பனுக்கு இப்போது அபிஷேகமாகி விட்டேன். ஐயனை சேர்ந்து விட்டேன். நான் இதை விட என்ன பாக்யம் செயது இருக்க முடியும். இனி நான் புல் அல்ல.  ஐயப்ப பிரசாதம். துளி துளி எல்லோரும் பக்தியோடு வாங்கி விழுங்குகிறார்கள்.

மனிதர்களே !  நீங்கள்  வாடுவது வீண். புரிந்து கொள்ளுங்கள்.  வாழ்க்கை என்பது ஒரு இன்பமான புனிதமான அனுபவம்.  சுகம் துக்கம் எல்லாம் கலந்தது. அப்படித்தான் இருக்கவேண்டும். வெயிலின் அருமை நிழலில்.  வளமையின் அருமை  வறட்சியில்.
.
எல்லாமே இறைவனை சேரும் வரையில் சகஜம்.  துன்பமே  இறைவனின் அருள் தான்.  குந்தியை கேளுங்கள் கதை கதையாக சொல்வாள்.  ஸ்புடம் போட்டால் தான் தங்கத்துக்கு  ஜொலிப்பு.  என்ன சொல்கிறாய் கிருஷ்ணா  உன்னை, உன் லீலையை பற்றி சரியாகத்தான் சொன்னேன்  என்றது புல்.

adaikalapaththu



சுவாமி தேசிகன்: அடைக்கலப்பத்து 



             நான் ஒரு காகம். 

அழகு தமிழிலும்  ஆழ்ந்த பக்தி தோய்ந்த  சமஸ்க்ரிதத்திலும் இணையாக அற்புத பக்தி ஸ்தோத்திரங்களை இயற்றியவர்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்கள்  வெகு வெகு சிலரே. அவர்களில் பிரதானமாக ஜொலிப்பவர்`களில் ஒருவர்  தான் சுவாமி தேசிகன். 

பத்து  பாசுரங்களை கொண்ட ஒரு சிறிய  தொகுப்பு தான்  சரணாகதி எனும் அவருடைய  'அடைக்கல பத்து'' 

''அப்பா வரதராஜா , அடியேனுக்கு  நினது சரணாரவிந்தத்தில் அளிப்பாயா முக்தி'' என அவர் காஞ்சி வரதராஜனை வேண்டும் ஸ்தோத்திரங்கள் அவை.  சமஸ்க்ரிதத்தில்  அதே போல்  'ந்யாஸ தசகம் '' சரணாகதி யை அற்புதமாக  விவரிக்கும் ஸ்லோகங்கள். 

தனது பாட்டு வேண்டுமானால் அதற்கு இவ்வளவு காசு என்று நிர்ணயித்து அதை பெற்று,  தான் எழுதும்  தகர டப்பா கவிதைகளை  எங்கோ குளுகுளு  என்று  ஒரு ஐந்து நக்ஷத்ர குளிர் அறையில் குடித்துக்கொண்டே  எழுதும் கவிஞர்களின்  கவிதைகளையே  படித்து பழக்கப்பட்ட  நமக்கு  கண்ணெதிரில்  இருக்கும்  விலையில்லா மாணிக்கங்கள் தெரிவதில்லை.  அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து தூசி தட்டி  அளிப்பது எனது தணியாத  தாகம். சைவ வைணவ பேதமற்ற முயற்சி. இது இனியும் தொடர  ஸ்ரீ கிருஷ்ணன் அருளட்டும்.

ஆச்சார்யர்கள் தாம் உபதேசித்ததை, நல்லொழுக்கத்தை, பக்தியோடு வாழ்ந்து காட்டியவர்கள். தர்ம ஞாய சிந்தனையோடு எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். நடமாடும் தெய்வங்கள்.

 பக்தியால் மோக்ஷம் பெற வழி காட்டியவர்கள். ஞானமும் பக்தியும் இரு கண்கள் என விளங்கியவர்கள். விளக்குபவர்கள். அவனருளால் அவன் தாள் பற்ற சொல்லிக்கொடுப்பவர்கள்.

யோகமார்க்கம் முக்தி அளிக்கும் என்பதை   பதஞ்சலியின்  யோக சூத்ரங்கள் அஷ்டாங்க யோகத்தை பற்றி விவரிப்பதையும் அறியலாம். 

योग: चित्त-वृत्ति निरोध:  yogah citta-vṛtti-nirodhaḥ — பதஞ்சலி யோக சூத்ரம் 1.2

எண்ணம்  அலை அலையாய்  ஓயாமல் மனதை அலைக்கழிப்பதை முதலில் நிறுத்து. அது தான் யோகம் என்று உணர்த்தும் ஸ்லோகம். த்யானத்தில் மனது நிலைத்து விட்டால் அதன் ஓட்டம் நின்றுவிடும். வேறு எதுவுமே  மனதில் இடம் பெறாது. யோகத்தை  எட்டு அங்கங்களாக பிரித்திருக்கிறார்கள்  யோகிகள்.   இந்த அஷ்ட அங்கங்களை அடையாளம் கட்டி பெயரும் வைத்திருக்கிறார்கள். பதஞ்சலி அவற்றை   யமம், (நெருங்காமல் இருப்பது)  நியமம் :(கடைப்பிடிப்பது) ஆசனம்: (உடல் தோற்றங்கள்)  பிராணாயாமம்: ஸ்வாச கட்டுப்பாடு)  ப்ரத்யாஹாரம் : (புலன்களை அடக்குவது)  தாரணம்: (மனத்தை ஒருநிலைப்படுத்துவது
),   த்யானம் : (மனதை இறை சிந்தனையில்  ஈடுபடுத்துவது ) கடைசியாக  சமாதி:  (தன்னை இழந்த  ஆத்ம சங்கமம்). இதெல்லாம் நம்மால் முடியுமா  என்றால்  முடியாது என்று சொல்லமாட்டேன். முயன்றால் ஒருவேளை முடியலாம். பலருக்கு முடிந்திருக்கும்போது நமக்கு முடியாமல் போய்விடுமா?

சரணாகதி அடைய வழி என்ன?  சில உபாயங்களை உபநிஷத்துகள் மஹான்கள் உபதேசங்கள் சொல்கிறதே !

நாராயண உபநிஷத்   ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தை  விடாமல் உச்சரி என்கிறது. '' AUM iti Atamanam yunjita (Narayana Upanishad 147.8)

கத்ய த்ரயம் எனும் தனது உபதேசத்தில் ஸ்ரீ ராமானுஜ ஆசார்யர்  த்வய மந்திரம் சரியான வழி என்கிறார். 
Sriman Narayana charanau Saranam prapadye  Srimathe Narayanaya Namah

''என்னப்பனே , ஸ்ரீமந்  நாராயணா, உன் திருவடிகளே சரணம் என கெட்டியாக  பிடித்துக்கொண்டு  என்னை அர்ப்பணித்தேன்.  நான்  இனி நானில்லை. தயையே  உருவான தாய்  ஸ்ரீ லட்சுமி தேவி சமேத ஸ்ரீமந்  நாராயணன் திருவடிகளை  சரணடைவதே எனது ஒரே லக்ஷியம்''  என்கிறார். வெங்கடேச பிரபத்தி இதை அற்புதமாக சொல்கிறது.

சரணாகதி லக்ஷணமாக ஐந்து அங்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.  அனுகூல்ய சங்கல்பம், பிரதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம்,கோப்த்ரிவ வாரணம், கார்ப்பண்யம் எனும் இவற்றை மற்றொரு சந்தர்ப்பத்தில் விவரமாக சொல்கிறேன். இவற்றோடு இணைந்தது தான்  ''அங்கி'' எனப்படும்  ஆத்மநிக்ஷேபம், சரணாகதி.    வாயினால் வெறுமனே  சரணாகதி அடைந்தேன் என்றால்  போதாது. மேற்கண்ட குணங்களும் சேர்ந்திருக்கவேண்டும். அப்போது தான் நிறைவேறும்.  விபீஷண சரணாகதி படித்தவர்கள் அறிந்தவர்கள் இதை உணரலாம்.

இதை ஏன்  சொல்கிறேன் என்றால் இந்த பின்னணியில் சுவாமி தேசிகனின் அடைக்கல பத்து படித்து அறிந்துகொள்ளும்போது ஆனந்தமாக அதை ரசித்து புரிந்து கொள்ள உதவும்.

விசிஷ்டாத்வைத தத்துவத்தில் முக்கியமான ஒரு அம்சம் சரணாகதி அடைவது. அதை பின்பற்றுவோர்க்கு அத்தியாவசியமாக செய்துக்கொள்வது  பர நியாசம்,  பர  சமர்ப்பணம், பிரபத்தி எனும் சரணாகதி. இவையோடு  நமது கர்ம பலனெனும் கனிகளை ஸ்ரீமந்  நாராயணன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம். 

காஞ்சிபுரத்தில் வராஜராஜன்  ஹஸ்த கிரியில், (அத்தி கிரி எனும் குன்றின் மீது ) வீற்றிருந்து மோக்ஷ மளிப்பவராக அருள்பாலிக்கிறார் என்பார்கள். 
ஸ்ரீ சுவாமி தேசிகனின் அற்புதமான ''அடைக்கல பத்து'' இனி தொடர்வோம்:  


''பத்தி முதலாம் மவதில், பதி எனக்கு கூடாமல்,
எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்,
முத்திதரு நகர் ஏழில் முக்கியமாம் கச்சி தனில்,
அத்திகிரி அருளாளற்கு, அடைக்கலம் நான் புகுந்தேனே ||1||

Patthi mudhalaam mavathil, pathi yenakku koodamal,
Yethisayum uzhandru odi ilaithu vizhum kakam pol,
Mukthi tharum nagar ezhil mukkiyamaam kachi thanil,
Athigiri arul aalarkku, adaikkalam naan pugundhene     ||1||

நான் என்ன செய்வேன். என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே.  பக்தி அவ்வளவு எளிது அல்ல. எங்கு  சென்று அமைதியாக அமர்ந்தாலும், இடம் தான் அமைதியாக இருக்கிறதே தவிர மனம் அமைதியுறவில்லையே. எண்ணற்ற எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே. நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ வெவ்வேறு  என்ன, எட்டு திசைகளிலுமே மாற்றி மாற்றி  பறந்து களைப்புற்று,நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம்.  முத்தி தரும்  சப்த க்ஷேத்திரங்களில் தலை சிறந்ததாக  அத்திகிரி எனும் காஞ்சிபுர வாசனான  ஸ்ரீ வரதராஜா , உன் திருவடிகளே சரணம் என்று முதல் பாசுரத்திலேயே  அற்புதமாக பாடுகிறார் சுவாமி தேசிகன்.

கொஞ்சம் ஊன்றி உள்ளர்த்தம் தேடுபவர்களுக்கு ஒரு குறிப்பு கிடைக்கும்.  இந்திரன் மகன் காகாசுரன் சீதையை துன்புறுத்தியதால்  ஸ்ரீ ராமன்  அவனை நோக்கி எறிந்த ஒரு சிறு புல் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறி அவன் உயிர் குடிக்க,  துரத்துகிறது. எங்கெங்கோ சுற்றி அலைந்த காகாசுரன் கடைசியில் ஸ்ரீ ராமன் பாதத்தையே  கதி என அடைந்து மன்னிப்பு கேட்கிறான்  என்பதை தான் சுவாமி தேசிகன் தன்னை  சரணடைந்த  காகம் என்று சொல்கிறார் என்று விளங்கும். 

சுவாமி தேசிகனை மேலும் வணங்கி கேட்போம்: 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...