Sunday, April 12, 2020

TAMIL NEW YEAR SARVARI

                      புது வருஷம் ''சார்வரி ''    . J.K. SIVAN

இந்த  தமிழ் வருஷம்  நாளை   13  ஏப்ரல் 2020 இரவு 7.20-மணிக்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை - சனி புத்தியில், சார்வரி ஆண்டு பிறக்கிறது.  


புது தமிழ் வருஷம்  பெயர் சார்வரி...  வரிசையில்  கூட  சேர்ந்து நிற்க முடியாத  நேரத்தில் எதை '' சார்வரி'' என்ன  சார் வரி?    எப்படி வசந்த ருது மன மோஹனமே..பாடுவது?.. வசந்த ருது வந்தால் புது வருஷம்.....பிரளயம் முடிந்து ப்ரம்மா புதுசாக சிருஷ்டி ஆரம்பித்த நாள் என்று ஒரு ஐதீகம்.  இங்கே  வேறு  ரூபமாக  அல்லவோ  பிரளயம் வேலையை துவங்குகிறது!

புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும்.  ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதை எப்போதும் தேடுபவர்கள். அறுபது  எழுபது  வருஷ ப்ரயோஜனமில்லாத அருதப் பழசுக்கு பதிலாக அஞ்சு வருஷ புதுசு தொடர்ந்து இருந்தாலே போதும் என்று சேதி காதில் விழுகிறது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் நாம் இருக்கிறோம்  .  25.3. 20 அன்று  உகாதி  இருக்கும் இடம் தெரியாமல்  வந்து  போனது. தெலுங்கு மொழி பேசுபவர்கள்  வீட்டோடு படி  தாண்டாமல்  கொண்டாடினார்கள்.

நமக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை. வடக்கே சிலர் குடி பட்வா என்றும் புது வருஷம் கொண்டாடுகிறார்கள். உகாதியும் குடி பட்வா கொண்டாடுபவர்களும்  தேசத்தில் பாதிக்கு மேல். ஆந்திர மஹாராஷ்ட்ரா ஜனங்கள். தெலுங்கு பேசுபவர்களுக்கு உகாதி, கன்னடக்காரர்களுக்கு யுகாதி, சிந்தி ஆசாமிகளுக்கு இந்த மாதிரி புது வருஷம் சேதி சாந்த் என்று நிறைய இனிப்புகளோடு இந்தியில் கொண்டாடப்படும். காஷ்மீர் காரர்கள் சும்மா இருப்பார்களா அவர்கள் பாஷையில் ''நாவ்ரே''. புது வருஷத்தில் பெயரே கோபமாக அடிக்க வருகிறாற்போல் இருக்கிறது இல்லையா. அது தான் அந்த  ஊர் விசேஷம்.   மணிப்பூரில் இந்த புது வருஷத்துக்கு என்ன பெயர் தெரியுமா? எங்கே சொல்லிப்பாருங்கள். அதற்குள் புது வருஷம் போய் அடுத்தநாள் வந்து விடும். எங்கே சொல்லுங்கள் அதன் பெயரை :'' சஜிபு நொங்மா பண்பா சீய்ரா ஒபா'' . நான் தான் ஓடிவிட்டேனே. என்னை நீங்கள் எப்படி அடிக்க முடியும்? ஒருவர்    அருகே   இன்னொருவர் வரமுடியாது   என்கிற தைரியம் எனக்கு.

என்ன பேர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் என்பது இருக்கட்டும்.   வழக்கமாக இந்த நாளில் என்ன செய்வார்கள் என்று   சொல்கிறேன். இந்தவருஷம்  வேறே மாதிரி.  அன்று எல்லோருமே மொத்தத்தில் வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள். குடி என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு. இதை இப்போது நினைத்து கூட பார்க்க முடியாது.

நமக்கு தெரிந்த ஒரு வழக்கம். துன்பம், கசப்பான நிகழ்ச்சிகள் போக வேப்பம்பூ வெல்ல பச்சடி. வேப்பம் பூ துயரத்தையும் வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவித்ததை நினைவூட்ட. பச்சை மிளகாய் கோபம். உப்பு : பயம் . புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை. நாம்ப கொழுக்கட்டை பண்ணுவோமே அதுபோல் பூரண போளி என்று ஒரு பக்ஷணம் மஹாராஷ்ட்ரர்கள் பண்ணுவார்கள். இது மாதிரி ஒன்றை பொப்பட்டு (bobbattu ) என்று தெலுங்கர்களும் ஹோலிகே, ஒப்பட்டு என்று கன்னடியர்களும் பண்ணுவார்கள்.

"எல்லோரும் ஒன்றாக கூடி மகிழ்ந்து வாழ என்ன பாஷை பேசினால் என்ன? எந்த பக்ஷணம் இனிப்பாய் ஏதேதோ பேரில் சாப்பிட்டால் என்ன? நாம் எல்லோரும் இந்தியர்கள். பாதார தேச புண்ய பிரஜைகள்.
20்20 ஏப்ரல் 14 அன்று வரும் தமிழ் புது வருஷத்திற்கு பெயர் சார்வரி. . அறுபது தமிழ் வருஷங்களில் வரிசையில் இது 34வது.  சார்வரி   என்றால் '' வீறி  எழல் ''  என்று  அர்த்தமாம்.   நாடே  வீறி  எழுந்துள்ளதே.  ஒரு  விதத்தில் பொருத்தமோ?  இந்த  பெயருக்கு  இணைந்த பொருத்தமான என்  16 என்று  ந்யூமராலஜி சொல்கிறது.

The number 16 denotes one who seeks wisdom in the attempt to learn enough to both teach and help others.  This number analyzes the self to grasp this wisdom; it has a knack for research and it is important to them that they appreciate both the spiritual and analytical parts of themselves.The number 16 is gifted at understanding the spiritual, it should watch for indulgence in fantasy.

அட.   எதையோ  அறிய ஆராய்ந்துகொண்டு இருக்கிறோமே இரவு பகலாக  அலைகிறோம்.இருட்டில் கருப்பு பூனையாக இருக்கிறதே.


'சார்வரி   திருக்கணித  பஞ்சாங்கப்படி  மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர் தனது நூலில் வெண்பாவாக சொல்லியிருக்கிறார்.

 "சாருவரி ஆண்டதனிற் சாதி  பதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு

எப்படி இடைக்காட்டு சித்தருக்கு நமது நிலைமை  அப்போதே  தெரிந்திருக்கிறது.

மாரி இல்லை -  பூமி விலையில்லாமல் போகும்.    ரொம்ப சரி. இது ஒன்றும்  புதிதில்லை
எல்லோருக்கும் நோய்.  திரிவார்கள்.... என்னது இது?
அடுத்தவரி பற்றி எழுத என்ன  அவசியம்.

இடைக்காடர் சித்தரே.  ஜீவன் முக்தர்கள். எக்காலத்திலும்  இருப்பவர்கள். நல்ல வார்த்தை சொல்லுங்கள், நாடு முழுதும்  அமைதியாக இன்பமாக எல்லோரும் வாழ அருள் புரியுங்கள். சித்தர்களால் முடியாதது என்ன.  

சக்தி விகடன் பஞ்சாங்க பலன்  என்ன சொல்கிறது?

இந்த வருடத்தின் ராஜாவாக புதன் வருகிறார். ஆகவே, சூறைக்காற்றுடன் மழை பொழியும். மத்திய மாநில அரசுகளுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். மந்திரியாக சந்திரன் வருவதால், நன்செய் பயிர்கள் அபிவிருத்தி அடையும். பூமிக்கு அடியில், நடுக்கடலில் அரசுக்குப் புதையல் கிடைக்கும். நிறைய  கிடைக்கட்டும். இப்போது நிதி ரொம்ப ரொம்ப  அதிகம் தேவை.

சந்திரனே இந்தப் புத்தாண்டின் அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும், சேனாதிபதியாகவும் வருகிறார். ஆகவே, மக்களிடம் கற்பனைத் திறன் அதிகரிக்கும். சுற்றுலா, சினிமா போன்ற விஷயங்களில் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் மன இறுக்கம் மற்றும் மனநோயால் அதிகமானோர் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. யோகா, தியானம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். அதேபோல், பிரச்னைகளை மனத்துக்குள் போட்டுவைக்காமல், நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் நல்ல தீர்வுகளைப் பெற முடியும்.

பால் உற்பத்தி பெருகும். ஆடை, ஆபரணங்களின் விலை உயரும். வெண்மை மற்றும் பழுப்பு நிற மேகங்கள் அதிகம் உற்பத்தியாகி, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும். ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்படும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் புற்று நோய்களுக்கு புது மருந்துகள் கண்டறியப்படும்.

வியாபாரத்தில் லாபம் நிலையில்லாமல் அமையும் சூழல் நிலவும். உணவு விடுதிகள் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. விஞ்ஞானத் துறையில் இந்தியா சாதனை படைக்கும். போர்த்தளவாட உற்பத்தி, விண்வெளி ஆய்வுகளில் முன்னிலை வகிக்கும். அதேநேரம் நம் தேசத்துக்கு எல்லைகளில் பிரச்னைகள் எழும். இந்தியாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு அண்டை நாடுகள் அச்சமடையும்.

ரஸாதிபதியாக சனி வருவதால் புளி, வெல்லம், இனிப்புப் பண்டங்களின் விலை உயரும். தொழில் விருத்தி அடையும். இரும்பு, பித்தளை உலோகங்களின் விலை சற்றே குறையும். தான்யாதிபதியாக புதன் வருவதால் பச்சைப் பயறு, வேர்க்கடலை ஆகியவற்றின் விலை உயரும். நீரஸாதிபதியாக குரு வருவதால் மண்வளம் பெருகும், ஆர்க்கானிக் காய்கனிகள் உற்பத்தி வரவேற்கப்படும்.

ஸஸ்யாதிபதியாக குரு வருவதால் புதிய மருத்துவ, சட்டக்கல்லூரிகள் திறக்கப்படும். இந்தியா உலக அளவில் கல்வியில் சாதனை படைக்கும். வேதம் படித்தவர்கள், சிலை வடிப்பவர்களுக்குப் புது சலுகை கிடைக்கும்.

சார்வரி வருட பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் 8-ம் வீட்டில் நிற்பதால், ஆன்மிகம் வளர்ச்சி அடையும். தன சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் கரும்பு அதிகம் விளையும். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். நதிகள் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

திருதிய சஷ்டமாதிபதியாக குரு வருவதால் மின் விபத்துகள் அதிகரிக்கும். வங்கிகள் பாதிப்படையும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அங்கே பெரிய பதவிகளில் அமர்வார்கள். சுக பஞ்சமாதிபதியாக சனி வருவதால் ஜவுளி, இரும்பு, கெமிக்கல் நிலக்கரி ஆகிய தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அதிக லாபம் அடைவார்கள். கலைத்துறை சூடு பிடிக்கும். அதிக அளவில் திரைப்படங்கள் வெளிவரும்.

புதன் பாக்ய, விரயாதிபதியாக வருவதால் பல நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள். புதிய கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறையும். அங்கீகாரமில்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும்.

இந்த சார்வரி வருடம், மக்களிடையே தன்னம்பிக்கையையும், வைராக்கிய உணர்வையும், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற மனப்போக்கையும் அதிகரிக்கும்.
எனினும், மூலம் நட்சத்திரத்தில் இந்தச் சார்வரி வருடம் பிறப்பதால் திங்கள்கிழமை வருவதாலும் நல்ல மழை உண்டு. விவசாயம் தழைக்கும். விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல சலுகைகள் கிடைக்கும். வங்காள விரிகுடா கடலின் கிழக்குப் பகுதியில் புதிய புயல்கள் உருவாகி மழை பொழியும். மரம், செடி, கொடிகள் தழைக்கும்.

நவநாயகர்களின் நிலை...
புதன் - ராஜா
சந்திரன் - மந்திரி, அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.
குரு - ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி.
சுக்கிரன் - ரஸாதிபதி
புதன்- தான்யாதிபதி
சனி - ரசாதிபதி
இந்த வருட கிரகணம்...

சூரிய கிரகணம்: சார்வரி வருடம், ஆனி மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.06.2020, அமாவாசை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், 4-ம் பாதம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் காலை மணி 10.22 மணிக்கு சூரியனை வடமேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து, நண்பகல் 12.02 மணிக்கு அதிகமாகி மதியம் மணி 1.42 மணிக்கு, கிழக்குத் திக்கில் விடுகிறது.

பரிகாரம்: ஆனி மாதம் உத்தராயணம், கிரிஷ்ம ருதுவில் அமாவாசை திதியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று ஸ்ரீபைரவரை விளக்கேற்றி வழிபடுவது நல்லது.இந்த வருடத்தின் ராஜாவாக புதன் வருகிறார். ஆகவே, சூறைக்காற்றுடன் மழை பொழியும். மத்திய மாநில அரசுகளுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். மந்திரியாக சந்திரன் வருவதால், நன்செய் பயிர்கள் அபிவிருத்தி அடையும்.

எல்லோருக்கும்  சார்வரி தமிழ் புத்தாண்டு மனதார வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...