Saturday, April 25, 2020

PESUM DEIVAM VOL 3



பேசும் தெய்வம் பாகம். 3 J K SIVAN

காமாக்ஷியின் கடாக்ஷம்.

மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனத்துக்கு லக்ஷக்கணக்கான உதாரணங்கள், நிரூபணங்கள் உண்டு. அறிந்து வியந்து வாய் பிளக்கிறோம்.

காஞ்சி மடத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் பண்டிதர்கள் கூடி மத, சம்பிரதாய, வேதசாஸ்திர சம்பந்தமான விஷயங்களை வாதிப்பார்கள், தர்க்கம் நடைபெறும். சாஸ்திரங்கள் அலசப் படும். அதற்கு ஸதஸ் என்று பெயர். பண்டைக்காலத்து ராஜாக்கள் அரண் மனையில் மஹா வித்துவான்கள் இப்படி கூடுவது வழக்கம். தக்க பரிசுகள் அரசன் கொடுப்பான். கலை வளர்ந்தது. எங்கிருந்தெல்லாமோ பல சான்றோர் கள், கற்றோர், பண்டிதர்கள் இம் மாதிரியான ஸதஸில் பங்குகொள்ள வருவார்கள். காஞ்சி மடத்த்திலும் அவ்வாறு தான். இங்கு கூடுதலாக பரமாச்சார்யா தரிசனமும் கிடைக்கும்.

ஒரு ஏழை பிராமண பண்டிதர் ஒரு ஸதஸில் பங்குகொண்டு ஏதேனும் பெரியவாளிடமிருந்து பரிசு கிடைக்காதா என்ற நம்பிக்கையில் வந்தார். பங்கேற்றார். முடிவில் எல்லோரும் வரிசையாக நின்று பெரியவாளிடமிருந்து பிரசாதம் பரிசு ஏதாவது வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஏழை பிராமணர் முறை வந்தது.

சாஷ்டாங்கமாக பெரியவா முன்னால் நமஸ்கரித்து கைகட்டி நின்றார். பெரியவா பிரசாதம் கொடுத்தார் . ஒரு வெற்றிலையில் மடித்து கொஞ்சம் பணமும் இருந்தது. மெதுவாக வெற்றிலையை திறந்து பார்த்த ப்ராமணர்முகம் ஏமாற்றத்தால் வாடியது. அவர் நிறைய எதிர்பார்த்தார். வந்ததோ அவர் நினைத்தும் பார்க்காத சொல்ப பணம். பாவம் வறுமை. ஐந்து பெண்கள். வருமானம் போதவில்லை. பாதி நாள் எல்லோரும் பட்டினி. எதிர் பார்ப்பில் என்ன தப்பு? பரிசை, பணத்தை எதிர்பார்த்து தான் ஸதஸு க்கு வந்தவர்.
மஹா பெரியவா கண்கள் அவர் ஏமாற்றத்தை காண தவறவில்லை. அவர் மனதையே படிப்பவர் ஆயிற்றே.
''என்ன ஐயர் சுவாமி சந்தோஷம் தானே ?''
''சரி பெரியவா சரி'' மஹா பெரிய வாளிடம் ''இல்லை இது போதாது '' என்று கூற முடியுமா? அது முறையா?

மடத்தை விட்டு வெளியே வரும்போது உடம்பு தளர்ந்தது. சற்று உட்கார்ந் துவிட்டு கங்கைகொண்டான் பஸ் நிலையம் நடந்தார். சின்ன காஞ்சிபுரம் போகவேண்டும்.

இதற்கிடையே, மடத்தில் பெரியவா ளிடமிருந்து மற்ற பக்தர்கள் வரிசையாக நின்று பிரசாதம் வாங்கிக் கொண்டிருந்தனர். வரிசையில் சென்னை பிரபல வக்கீல் ஒருவர் தனது முறைக்கு காத்திருந்தார். நெருங்கினார்.

தட்டு நிறைய பழங்கள் பூக்கள், முந்திரி திராக்ஷை ஏலம் , வில்வம் எல்லாமே எதிரே வைத்தார். அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார். மெதுவாக வாய் பொத்தி ''ஒரு விஞ்ஞாபனம்'' என்று சொல்ல விழைந்தார்.
''அங்கே ஓரமா நில்லு. பேசலாம் '' வக்கீல் மற்ற பக்தர்களுக்கு வரிசையில் வந்து தரிசிக்க இடம் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக கைகட்டி நின்றார்.
மஹா பெரியவா ஒரு அணுக்க தொண்டரை ஜாடையால் அழைத்தார்.

''இப்போ ஸதஸ்லே கலந்துண்ட குள்ளமா சிகப்பா ஒரு பண்டிதர் மடத்தில் இருக்காரா பாரு . இல்லேன்னா பஸ் ஸ்டாண்ட் போய் சின்ன காஞ்சிபுரம் பஸ்லே இருப்பார் அழைச்சுண்டு வா''

அணுக்க தொண்டர் பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ் சின்ன காஞ்சிபுரம் போக தயாராக நின்றது. அதில் உட்கார்ந் திருந்த ஏழை பிராமணரை கண்டு பிடித்து ''மடத்துக்கு வாங்கோ. பெரியவா கூப்பிட்றா'' என்கிறார்.

'' டிக்கெட் வாங்கிட்டேன். முப்பது பைசா. எப்படி வரது? மறுபடியும் டிக்கெட் வாங்கணும் அதுக்கு காசு போறாது''

அருகே இருந்த ஒருவர் மடத்திலிருந்து வந்தவர் போல இருக்கிறது.
''என்னய்யா நீர்? அவனவன் பெரியவா தரிசனம் கிடைக்குமான்னு ஏங்கறான். கடல் கடந்து வந்து காத்துண்டு இருக்கான்'' பெரியவாளே கூப்பிடறா , ஆளனுப்பிச்சிருக்கா, கேவலம் பஸ் காசு முப்பது பைசா வீணாயிடுமே என்று எவ்வளவு பெரிய பாக்யத்தை இழக்கி றீங்க? இதற்குள் கண்டக்டர் சுப்பிரமணி ஐயா உங்க டிக்கெட் திருப்பி கொடுங்க வேறே யாருக்காவது தரேன். இந்தாங்க முப்பது பைசா.. வந்தவரோட மடத்துக்கு போங்க''

முப்பது காசுடன் பிராமணர் மடத்துக்கு திரும்பினார். ''பெரியவா எதுக்கு வரச்சொல்றா?'' இன்னும் ஏதாவது காசு கிடைக்குமா?\
மஹா பெரியவா முன்னே மீண்டும் கைகட்டி நின்றபோது பெரியவா அவரை பார்ச்சு புன்னகைத்தார்.

'முப்பது காசு போயிடுமேன்னு வர வேண்டாம்னு யோசனையா?''

தூக்கி வாரி போட்டது பிராமணருக்கு. எப்படி தான் சின்னகாஞ்சிபுரம் பஸ்லே இருந்தது, தெரிஞ்சுது. எப்படி முப்பது காசுக் காக மடத்துக்கு போக வேண் டாம்னு தோணினது எல்லாம் பெரிய வாளுக்கு நேரே பார்த்தா மாதிரி தெரிஞ்சுது?

''போய் அவர் பக்கத்திலே நில்லுங்கோ' என்று ஓரமாக நின்ற வக்கீலை சுட்டிக் காட்டினார்.

வக்கீலிடம் '' இந்த பிராமணர் அட்ரஸ் வாங்கிக்குங்கோ''

மகா பெரியவா சற்று கூட்டம் கலைந்த பின்னர், ஐந்து ஆறு நிமிடங்கள் கழித்து வக்கீலையும் அந்த ப்ராமணரையும் அருகில் அழைத்தார். அருகே குழுமி யிருந்த அனைத்து பக்தர்களும் ஆவலோடு ஏதோ நடக்கப்போகிறது என்று ஆர்வமாக பெரியவாளை பார்த்துக்கொண்டிருக்க,
''மாஸாமாஸம் யாராவது ஒரு ஏழை படித்த பிராமணருக்கு கொஞ்சம் பணம் தானம் பண்ணனும்னு தானே உன் மனசிலே ஒரு எண்ணம். நல்ல ஆசை தான். சந்ஷம். . இதோ இவர் நிறைய படிச்சவர். பரம ஏழை. நீ மாசாமாசம் அவருக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு அவர் அட்ரஸ் வாங்க்கிக்கோ என்று சொன்னேன்'
வக்கீல் ஏதோ ஷாக் அடித்தவர் போல் திகைத்தார். எப்படி நாம் மாசாமாசம் ஒரு படித்த ஏழைப் பிராமணருக்கு உதவ நினைத்தது, பெரியவாளை யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோ ன்னு கேட்க நினைச்சது எப்படி பெரிய வாளுக்கு நாம் சொல்லுமுன்பே தெரிந்தது. இன்னொரு குண்டும் பெரியவாளால் தூக்கி போடப்பட்டது.

' மாஸா மாஸம் இருநூற்று அம்பது ரூபாய் அனுப்பலாம். பரம ஏழை என்கிறதை விட ரொம்ப வேத சாஸ்திர விஷய ஞானம் உள்ளவர். பெரிய குடும்பம். வேதம் படிச்சவர் வாழ்க்கை நடத்த சிரமப்பட விடக்கூடாது. இனிமே பணக்கவலை அவரது பாண்டித்யத்துக்கு குறுக்கே நிக்க கூடாது.''

''வக்கீலால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. எப்படி தான் உதவி செய்ய நினைத்த தொகையையும் கன கச்சிதமாக பெரியவா சொல்கிறார். அவரால் பேசமுடியவில்லை. திக்கிற்று. கண்களில் ஆறாக பக்தி பிரவாகம். மெதுவாக பேசினார்:
''பெரியவா காமாக்ஷி ஸ்வரூபம். என் உசிரு இருக்கிறவரை இந்த கைங்கர்யம் விடாம செய்வேன். எனக்கு அப்புறமும் அவர் குடும்பம் சிரமப்படாம என்ன நேரத்தில் என்ன தேவையோ அதை செய்ய ஏற்பாடு பண்றேன். பெரியவா ஆக்ஞை யாக இதை ஏத்துக்கறேன்.'' வக்கீல் ஒரே மூச்சில் சொல்லிவிட்டார்.
பிராமணரைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் இந்த உலகிலேயே இல்லை. கண்களை மூடி எதிரே தெரியும் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனை பிரார்த் தனை பண்ணிக்கொண்டிருந்தார். என் வறுமையை உணர்ந்து போக்கிய தெய்வமே என்று கனகதாரா ஸ்தோத் ரத்தை வாய் முணுமுணுத்தது

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...