யார் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. நமது முதுகில் நாமே சபாஷ் என்று தட்டிக்கொள்வோம். இந்த ஒரு தேச மக்களிடம் தான் கடவுளை வேண்டும்போது கூட ''எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு, அடுத்தவன் சாகவேண்டும், துன்பப்படவேண்டும்' என்ற நினைப்பு இல்லாமல், எல்லோரும் சுகித்து நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஒரே பரந்த நோக்கம் பிரார்த்தனையாக வெளிப்பட்டது.
ஒரு சின்ன பிரார்த்தனை. நம் எல்லோருக்கும் தெரிந்தது தான் ஆனால் பலர் ஏனோ நினைத்துக் கூட பார்ப்பதில்லை அதன் மஹத்வத்தை. அதைபற்றி தான் சொல்கிறேன்.
மாங்கல்ய பிரார்த்தனை (மங்களம் தரும் பிரார்த்தனை) என்று பெயர் கொண்ட ஸ்லோகம். வேதங்களில் உள்ளது.
இதோ வெயில் ஏற ஆரம்பித்துவிட்டது. கோடை கொளுத்த துவங்கிவிட்டது. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். ஜீவராசிகள் திணறும். மின்சார வெட்டுகள் வேறு தலை நீட்டும். பருவ மழைகள் பொய்க்க க்கூடடாதே என்று பயப்படுவோம். மழை வராதா என்று கண்கள் ஆகாயத்தை அடிக்கடி நோக்கும்.
சமய சஞ்சீவியாக மேலே சொன்ன பிரார்த்தனை கை கொடுக்கிறது. அதன் அர்த்தம்:
பகவானே, பருவ மழை பெயருக்கேற்றவாறு தக்க சமயத்தில் பொய்க்காமல் அமோகமாக பொழியட்டும்.t பூமி குளிரட்டும், நனையட்டும், பயிர் பச்சையாக எங்கும் விளையட்டும். சுபிக்ஷம் தேசமெங்கும் நிரம்பட்டும். வறுமை அற்று வளமையோடு மக்கள் நிர்பயமாக வாழட்டும். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
விவசாயிகளே,உங்களை நம்பி உலகம் வாழ்கிறது. எப்போதும்போல் உங்கள் கடமைகளை தொடருங்கள்.
இந்த நாட்டில் நல்ல காரியங்கள் இனி நடக்கட்டும். எல்லோரும் நல்லாட்சி நடக்க, தொடர கை கோர்ப்போம். நல்லவர்கள் ஆளட்டும், நீதி தழைக்கட்டும், மக்கள் நலம் கருதி தாய்போல் உழைப்பவன் நம்மை பாதுகாக்கட்டும். நியாயம் நேர்மை ஓங்கட்டும். பசுக்கள் வேதங்கள் பயின்றோர் பெருகட்டும். சிறக்கட்டும், ஒவ்வொரு நாளும் இன்பகரமான நாளாக நிலைக்கட்டும். உலகில் அனைவரும் ஆனந்தமாக ஒற்றுமையாக வா ழ்வோம். ,
பொருட் செல்வத்தோடு மக்கட்செல்வம் பெருகட்டும். பாரம்பரியமாக தர்மத்தை கடைப்பிடிக்கட்டும். ஏழையும் இல்லை பணக்காரனும் இல்லை, எல்லோரும் ஒன்றாக நூற்றுக்கணக்கான வசந்தங்களை அனுபவிப்போம்.
எங்குமே ஆனந்தம். நோய் நொடியற்ற வாழ்வு மலரட்டும். பயம் விலகி எல்லோரும் தைரியமாக செயல்படுவோம். துன்பம் துயரம் என்ன என்றே அறியாமல் தெரியாமல் வாழ்வோம். எல்லோரும் நிறைவோடு, அமைதியோடு வாழ்வோம்.
ஒரு குறையுமின்றி எல்லோரும் எங்கும் ஆனந்தமயமான வாழ்வு வாழ்வோம். பொங்கும் மங்களம் எங்கும்

தங்குக. அமைதி ஆனந்தம் நிம்மதி பெருகட்டும், நடப்பவை யாவும் நல்லதாகவே இருக்கட்டும்.
ஹிந்துக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி மனநிறைவோடு பிரார்த்தித்தவர்கள். ஒவ்வொருவரும் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை இது. இன்றும் எத்தனையோ பேர் தினமும் சொல்லி வருகிறார்கள். ஆலயங்களில் வீட்டு விசேஷங்களில் ஒலிக்கிறது. முடிந்தபோது இந்த ஒரு சில வரிகளை புரிந்துகொண்டு தினம் மன நிறைவோடு வேண்டுங்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல், அவன் மேகத்தின் கதவுகளை திறந்து மழை பொழியவைப்பான்.....
Kale varshathu parjanya,
Prithivi sasya shalini,
Deso yam kshobha rahitha,
SAjjana santhu nirbhaya.
Swasthi prajabhya paripalayantham,
Nyayena margena maheem maheesa,
Gobrahmanebhyo shubhamasthu nithyam,
Loka samastha Sukhino bhavantu.
Aputhra puthrina santhu,
Puthrina santhu pouthrina,
Adhana sadhana,
Santhu jeevanthu sarada satham.
Sarvathra sukhina santhu,
Sarve santhu niramaya,
Sarve bhadrani pasyanthu,
Ma kaschid dukha bhag bhaveth.
Sarvesham swasthir bhavthu,
Om Sarvesham santhir Bhavathu,
Om Sarvesham poornam Bhavathu,
Om Sarvesham Mangalam Bhavathu.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

No comments:
Post a Comment