Wednesday, April 22, 2020

KRISHNA STORY




''சாமி  நீயே  துணை''    J K SIVAN
இருவது வருஷம்  ஆயிட்டுது  ருக்குவை  மாதவன்   கைக்குழந்தை முரளியோடு  விட்டு  சென்று!!.
ஆந்திராவில் நாகார்ஜுன சாகர்   அருகே  ஒரு கிராமத்தில்  ருக்கு   குழந்தை முரளியோடு  குடியேறி  வளர்த்து  அவனை பக்கத்து  நகரத்தில்  படிக்கிறான்.  பள்ளியில்  முரளி  “பார்த்தசாரதி”    இதன் பின்னால்  ஒரு குட்டிகதை  வேறே இருக்கிறதே அதை தான்  இங்கே சுருக்கமாக சொல்கிறேன்:
ஏகாம்பரம் குதிரை  ரேஸ்  பைத்தியம்.  அதென்னவோ  அவன்  எந்த  குதிரையின்  மீது  பணம்  கட்டினாலும்  அது   அடிபடாமல்  ஜாக்ரதையாக கடைசியில் மெதுவாக நடந்து வந்தது.  அவன் பெண் ருக்மணி  எனும்  ருக்கு.   வீட்டுக்கு அடுத்த  தெருவில் இருந்த  பார்த்த சாரதி கோவிலில்   ருக்குவை எப்போதும் பார்க்கலாம். பார்த்த சாரதியின்  புன்முறுவல் நிறைந்த  முகம்  எப்போதும் அவள்   நெஞ்சிலே.  அவள் அவனை நினைக்காத நேரமே இல்லை.  “சாமி,  நீயே துணை” என்பது அவளுக்கு  தெரிந்த ஒரே   மந்திரம்.   பார்த்தசாரதியை  நினைத்தாலே அவள்  கவலைகள் பறந்து விடும்.  குடிகார, குதிரை  ரேஸ்  பைத்திய  அப்பன் தினமும்  அம்மாவோடு சண்டையிட்டு  அவளையும்  ருக்குவையும்  தனி ஆவர்த்தனம்  வாசிக்கும் போதெல்லாம்   "சாமி நீயே  துணை" தான்  சொல்வாள்.   அப்பன்  கண்ணை மூடினான்  அவனது  கை  வண்டியில் ருக்கு காய்கறி  வியாபாரம் செய்து பிழைத்தாள் . வயிறு கழுவ  4வது   படிக்கும்போதே படிப்பை  நிறுத்தி  வீட்டு வேலை செய்து  பாத்திரம் கழுவியது  பழங்கதை.
***
பள்ளி செல்லும் முரளி தினமும்  ஒரு  மைல்  நடந்து குறுக்கு வழியில்  ஒரு  அடர்ந்த காட்டு  பாதையில் செல்ல வேண்டும்.  பஸ்  டவுன் வழியே  செல்லும்  அதில்   போக முரளிக்கு ஆசை தான்.
“அம்மா  என்னை  பஸ்ஸிலே  ஸ்கூலுக்கு   அனுப்பு”   ருக்கு அழுதாள்
“ ஏன்   அழுவுறே”
“நாம்ப ஏழை கண்ணு   என்கிட்டே காசு இல்லப்பா.   நீ  குறுக்கு வழியாகவே காட்டுப்பாதையில்   நடந்து போப்பா”
“ தனியாக  காட்டுப்பாதையில் போக  பயமா இருக்கு மா”.
“சாமி, நீயே  துணை  என்று சொல்லுடா.  கிருஷ்ணன்  காப்பாத்துவார்.  பயமா  இருக்கும்போது  கிருஷ்ணா
கிருஷ்ணா என்று கூப்பிட்டு கிட்டே  போ.  காப்பாத்துவான். எனக்கு  வேறே வழி தெரியலை கண்ணு.”
காட்டு பாதையில்  ஒரு  மாதமாக முரளி '' கிருஷ்ணா கிருஷ்ணா'' என்று கூப்பிட்டு கொண்டே ஸ்கூலுக்கு நடக்கிறான்.  மனதுக்கு  அது தெம்பாக  இருந்தது.  யாரோ  கூடவே  துணைக்கு  வருவது போல்  இருந்தது.
ஒருநாள்  பள்ளியில்  ஒய்வு பெறும்  தலைமை ஆசிரியருக்கு   பிரிவு உபசார விருந்தாம்.  ''எல்லா  பசங்களும்  எதாவது பரிசு கொண்டுவந்து கொடுக்கணும்''  என்று  தாமு  வாத்தியார்  ஆர்டர் போட்டார்.
'' அம்மாவிடம் நான்  தலைமை ஆசிரியருக்கு என்ன  பரிசு கொடுப்பது?''   வழக்கம்போல்  அம்மா   பஞ்சப்பாட்டு பாடினாள்.
“நமக்கு  யார்டா   இருக்க உதவ.  உனக்கு துணை  வரானே கிருஷ்ணன், அவனையே  ஏதாவது தரச்சொல்லு ''  மனமுருகி ருக்கு முரளியிடம்  சொன்னாள்.
“கிருஷ்ணா கிருஷ்ணா”  என்று  முரளி   கூப்பிட்டான்.
“என்ன முரளி  சொல்லு”  என்று   பழக்கமான குரல்  கேட்டது
“எங்க வாத்தியார்  தலைமை ஆசிரியருக்கு  பரிசு   கொண்டா” என்கிறார்.  அம்மா  உன்னை  கேக்க  சொல்றா.  ஏதாவது கொடுக்கிறியா”
. ''தரேனே . அதோ  உன் எதிரே  தெரியற  ஆலமரம்  அடியில்  ஒரு  செம்பு நிறைய  பால்  வச்சிருக்கேன்  அதை கொண்டு போய்  கொடு.  நான்  பசு மாடு மேய்க்கறவன். என் கிட்டே  பால்  தானே  இருக்கும்”.
எல்லா  பிள்ளைகளும் வித  விதமான பரிசு  கொடுக்க  முரளியின்  பால் செம்பு  சீந்தப்பட வில்லை.  தாமு  அவனை   கேவலமாக பார்த்தார்.  அன்று  மதிய  வேளையில்  தாமு  வீட்டில் மனைவியிடம்
“ஒரு பையன்  செம்பு நிறைய  பால்  கொண்டு வந்தான். அதை எப்படி ஹெட்மாஸ்டருக்கு கொடுக்கிறது. அந்த  செம்பு  பாலை காய்ச்சி  நாம ரெண்டு   பேரும் குடிக்கலாம்”
மனைவி   அடுப்பில்  பாத்திரத்தில்   பால்  செம்பை   கவிழ்க்க  என்ன  அதிசயம்!   செம்பு   மீண்டும் பாலால் நிரம்பியது. மறுபடியும்  கொட்ட மீண்டும்  நிரம்பியது. பயந்துபோய் தாமுவிடம் விஷயம் சொல்ல, தாமு   பள்ளிக்கூடத்தில்  முரளியை பிடித்தார்.
“ஏலே, உனக்கு  யார்டா பால் செம்பு கொடுத்தது?”
''என் நண்பன்  கிருஷ்ணன்''  . முரளி விஷயம்  சொல்ல,   தாமுவும்   மற்ற பிள்ளைகளும்   கொல்லென்று சிரித்தனர்
“கிருஷ்ணாவது,  ராமனாவது  என்னடா இது  உளறல்.  கதை உடுறே.  யாரோ  மாஜிக்  காரன் கிட்டே  செம்பு  வாங்கி  வந்து  ஏமாத்தறே”
“ இல்லே சார்   கிருஷ்ணன்  தான் கொடுத்தான்”.
“ டே,  எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்.  திருப்பி  திருப்பி  கிருஷ்ணன்  தினமும்  கூப்பிட்டா  பேசுவான்,  துணை வருவான், பால்  செம்பு  தந்தான்  என்று  அதையே  சொல்லாதே.  கிருஷ்ணன்  ராமன்  எல்லாம்  எந்த காலமோ. இப்போ எங்கடா இருக்காங்க?  கோவில்ல தான்   சிலையாக,  படமாக  பாக்கலாம்.  புராணத்திலே தான் பேசியிரு காங்க”
“இல்
லீங்க ஸார்  கிருஷ்ணன்  தினமும்   என் கூட கிருஷ்ணன்  பேசுவான்  சார், அவன்  தான் சார் இந்த சொம்பை நிறைய பாலோடு  கொடுத்து  உங்க கிட்ட கொடுக்க   சொன்னான்”
.“டேய்   மேலே  பேசாதே, கோபம் அதிகமாகி உன்னை  விளாரிடுவேன்.  வா   இப்பவே  என்னோடு. எங்கே  இருக்கான் உன்  கிருஷ்ண னை  காட்றியாடா?”
“சரிங்க சார்”  என்றான்  முரளி
காட்டுப்பாதையில்   தாமு  அருகில் நிற்க
'' கிருஷ்ணா  கிருஷ்ணா''  என்று  முரளி  பலமுறை  கூப்பிட்டும்  பதிலே இல்லை.
முரளி  அழுதுகொண்டே
”கிருஷ்ணா  எங்க  வாத்தியார்  வந்திருக்கார்    நீ இருக்கிறதை பேசறதை சொன்னா நம்ப மாட்டேன்றார்  உன்னை பார்க்கணுமாம்   கொஞ்சம் வரியா.”
தீர்க்கமாக ஒரு  குரல்  அவர்கள் இரண்டு பேருக்கும்  கேட்டது.
“முரளி,   நான்  எப்படி அப்பா  வர முடியும். உங்க  வாத்யார்  தான்  நான்  இல்லவே  இல்லை  என்று  சொல்லிட் டாரே. என்னை   நம்பாதவர்  முன்  நான்  எதற்கு  வரணும் ?''
தாமு  கண்ணில்  நீர் வடிந்தது.  நடுங்கினார்
“கிருஷ்ணா  என்னை  மன்னிச்சுடு  நான்  தப்பு பண்ணிட்டேன்”
முரளியின்  காலை  பிடித்து கொண்டு
“சாமி, நீயே  துணை.  வழிகாட்டு”  என்றார்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...