Monday, April 6, 2020

MOTHER



மாத்ரு தேவோ பவ :  J K SIVAN

ஒருத்தன்  ராஜாவானாலும் சரி, பிச்சைக் காரனாக இருந்தாலும் சரி அவனது முதல் தெய்வம், ப்ரத்யக்ஷ கடவுள் அம்மா.  அவள் படிக்காதவளோ, ஏழையோ,வேலைக் காரியோ, ராணியோ யாராயிருந்தாலும் அவளே முதல் குரு.  தனது குழந்தை நல்வழியில் வளர வேண்டும் என்று தான் நினைப்பவள். பாரபக்ஷம் பார்க்காதவள். தன்னுடைய தேவைகளை தியாகம் செய்ய தயங்காதவள்.  அதனால் தான்  அப்பாவைக்  காட்டிலும் குழந்தை அம்மாவிடம்  ஓடும்.

தனது ப்ராணனை அவளிடம் இருந்து கர்ப்பத்தில்  ஆகாரம்  - பானத்தோடு  சேர்த்து பெற்று வளர்வதால்  அவளது குண ஸம்பத்து  குழந்தைக்கு ஏற்படுகிறது.  அதனால் தான்  கருத்தரித்ததும் தாய் நல்ல விஷயங்கள்  பேசவேண்டும், நினைக்க வேண்டும், படிக்கவேண்டும். பொறுமை, அன்பு, பக்தி பிரேமை எல்லாம் கொள்ள வேண்டும்.  சாத்வீக உணவு உட்கொள்ள வேண்டும்.

உடல்வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சிக் கும் அது பெரிதும் உதவும்.   அது அத்தனையும்  வளரும் சிசுவிற்கு உபயோகம்.

அடுத்தது குழந்தை பிறந்ததும் அதை வளர்ப்பது. சில அம்மாக்கள் பேய்க் கதை, துப்பாக்கி கத்தி கொலை கொள்ளை டிவி நிகழ்ச்சிகள் எல்லாம் காட்டி சாதம் ஊட்டுகிறார்கள். குழந்தை  இதெல்லாம் கற்று, வளர்ந்து நடை முறையில் அம்மா விடமே காட்டும்.   குழந்தைகளுக்கு அதனால் தான்  ஸ்தோத்திரங்கள், நீதிப் பாடல்கள், இதிகாச கதைகள்,  சொல்லிக் கொடுத்து  வளர்க்க வேண்டும்.
மோஹன்தாசுக்கு அப்படி புத்லி பாய் சொல்லி வளர்த்து தான் நமக்கு காந்தி கிடைத்தார். ரூபாய் நோட்டில் சிரிக்கிறார்.
ஆதிசங்கரர் சந்நியாசி, பிரம்மச்சாரி,  இருந்தும் இதெல்லாம் கவனித்து  மாதா - பிதா - குரு என்று மூன்று பேருக்குமே - ‘ப்ரமாண காரணம்' என்ற பெருமை, உரிமை  உண்டு என்கிறார்.
‘ப்ரமாண காரணம்' என்றால்  ‘அதிகார பூர்வமான குரு ஸ்தானம்' என்று அர்த்தம். ஆமாம், அம்மா தான்  முதல் குரு.
கிருஷ்ணனை  தேவகி மைந்தன், தேவகி நந்தன், யசோத நந்தன்  என்று தான் அம்மா பேரை சொல்லி அழைக்கிறோம்.
ஆசை  என்பது நமக்கெல்லாம்  தீராத தணியாத ஒரு  தாகம். ‘த்ருஷ்ணா'  என்று வட மொழியில் சொல்வது.
கிருஷ்ணாவதாரம்  ஏற்பட்ட விதமே  தனி.  கிருஷ்ணன் ஜனனம் நிகழ  வித்து எதுவோ அதை வஸுதேவர்  தனது   மனஸிலே தரித்து தேவகியின் மனஸுக்கு அனுப்பி வைத்த தாகத்தான்  பாகவதம் சொல்கிறது. இங்கே  நம்மைப் போல்  பௌதிக  கர்ப்பம்  இல்லை.  physical  pregnancy  யை விட மானசீக  கர்ப்பம் தான் முக்கிய நிகழ்ச்சி.  கம்சன், மற்றும்   நம்மைப் போன்றவர்களுக்காக  தேவகியை  கர்ப்பவதியாக காட்டி  குவா குவா.  காவல் காரன் ஓடி போய்  கம்சனிடம் சொல்லி வாளைத்  தூக்கிக்கொண்டு அவன் ஓடிவருவது எல்லாம்.  தேவகிக்கு அதனால் தாய்ப் பதவி,  மாத்ரு ஸ்தானம். கிருஷ்ணன் தன்னை தேவகி புத்ரன் என்று சொல்கிறார்.
அம்மா பேரில் உபநிஷத்தில் சொல்லப்பட்ட இன்னொருத்தர் யாரென்றால், ‘ஸத்யகாம ஜாபாலர்' என்கிறவர். அம்மாவோடேயே அவர் இளவயதில் வசித்துக் கொண்டி ருந்தார். அப்பா, ‘போயே    போய் விட்டா ரோ, அல்லது எங்கே ஓடிப்போனாரோ?   மற்ற தன் வயஸொத்த பிள்ளைக ளெல் லாம் குருகுலவாஸம் பண்ணிக் கொண்டு ப்ரஹ்மசர்யம் அநுஷ்டித்துக் கொண்டி ருப் பதைப் பார்த்துவிட்டு  சிறு பாலக னாக  ஸத்ய காமன்  அம்மாவிடம் தானும் ஒரு குருவிடம் குருகுலவாசம் செய்து படிக்க ஆசையைச்  சொல்கி றான்.

பாவம் அவளுக்கு  குரு கோத்ரம் என்ன என்று  கேட்பாரே என்ன சொல்வது?  என்று வருத்தம்.  அவள் ஞான சூன்யம்.  “குழந்தே,  பல எடத்துல ஸேவகம் செஞ்சுண்டு, பல பேருக்கு   ஸுஸ்ருஷை  பண்ணிண்டு வாழ்க்கையை நடத்திண் டு போற எனக்கு என்னிக்கோ யௌவ னத்துல பொறந்த ஒன் கோத்ரமும் தெரியலை, விவரம்  ஒண்ணும் தெரியலை!

ஒண்ணு வேணா பண்ணு. என் பேர் ஜாபாலா. என் பிள்ளையானதுனால என் பேரை வெச்சு  ஜாபாலன். ஒனக்குப் பேர் ‘ஸத்யகாமன்'னு வெச்சிருக்கேன். அதனால குரு உன் விவரம்   கேட்கும் போது   விஷயத்தை  உள்ளதை உள்ளபடி சொல்லி உன்னை ‘ஸத்யகாம ஜாபாலன்' என்று   சொல்லு'' என்று அனுப்புகிறாள். என்ன நேர்மை, தைர்யம் அவளுக்கு.   சத்தியத் தின் மேல் ஆசை வை என்ற பெயரை பிள்ளைக்கு சூட்டியவள். ஸத்ய காமன்.  நாம்  பள்ளிக்கூடத்தில் சேர்க்க பிறந்த நாளையே  புளுகி, மாற்றி,  பொய்யாக சொல்லவில்லையா. எனக்கு அப்படித் தானே பிறந்த நாள் வாழ்த் துக்கள்  நான் பிறக்கவே பிறக்காத  ஒவ்வொரு ஏப்ரல் முதல் நாளும் வந்து  என்னை முட்டாளாக் குகிறது.'

''தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை''   அதனால் தான் வந்தது.  பெயருக்கேற்ற பையன்  ஜாபால சத்யகாமன்.  பின்னர்  பிரபல  ஜாபாலி  ரிஷி.  ரிஷி மூலம் நதி மூலம்  பார்க்க வேண்டாம் என்பதற்கு இந்த ரிஷி ஒரு காரணமாக இருந்திருப்பாரோ?

ஹாரித்ரும கௌதமர்  என்கிற  ரிஷியிடம் குருகுல வாசம் செய்ய  ஜாபாலன்  போகிறான். நீ யார் உன் கோத்ரம் என்ன என்று   கேட்டவரிடம்  அம்மா சொன்னதை சொல்லி  ஆகவே நான் '' ஸத்யகாம ஜாபாலன்'' ஐயனே!' என்று  நமஸ்காரம் பண்ணினான்.

“உத்தம புத்ரன் நீ, உயர்ந்த எண்ணம் உள்ளவளின்  பிள்ளை. அது போதும்.  உனக்கு உபநயனம் பண்ணி வைக்கி றேன்" என்று சொல்லி அவனை சிஷ்யனாகச் சேர்த்துக் கொண்டார் என்று கதை போகிறது.

அம்மா பேரில் வம்சம், அடையாளம், சொல்கிறதும்  பாரதத்தில்  ராமாய ணத்தில்  வருகிறதே.  குந்தி பிள்ளை என்பதால் கௌந்தேயன், ப்ருதை பிள்ளை என்பதால் பார்த்தன், என்று அர்ஜுனனையும்,  ஜரை பிள்ளை  ஜரா சந்தன், என்று,  ராதை வளர்த்தவன் என்பதால் கர்ணன் ராதேயன், அஞ்சனை வளர்த்த பிள்ளை அஞ்சனா நந்தன், ஆஞ்சநேயன் என்பது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

சிஷ்யன் எப்படி ஸத்ய ஸந்தனாக இருக்கணும், மானாபிமானம் விட்டு இருக்கணும், வித்யைக் காக  தாஹம் எடுத்தவனாக இருக்கணும் என்பதெல் லாமும் சத்யகாமன் விஷயத்தில் நமக்கு தெரிகிறது.  குழந்தைகளுக்கு வாத்யா ரிடத்தில் குருபக்தியை இனியாவது வளர்ப்போம்.  இதற்கு  பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும்.  இதைப் படிக்கும் வாத்யார்களும் தாங்கள் அதற்கு பொறுப்பு டையவர்களாக,  பெற்ற பிள்ளையைவிட மாணவர்களை குழந்தைகளாக அன்போடு, பண்போடு  பாவித்து கல்வியறிவு போட்டி, அவர்கள்  வாழ்வில் வளர உதவவேண்டும்.   நமது நாடு சுபிக்ஷம் பெற இது முதல் படி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...