பேசும் தெய்வம் J K SIVAN
எல்லோருக்கும் வளையல்
அது கொளுத்தும் மே மாத வெயில் நிறைந்த ஒரு வெள்ளிக்கிழமை. சூர்யன் கடுமையாக தஹித்துக் கொண்டிருந்தான் என்றாலும் காஞ்சி மடத்தில் சந்திரமௌளீஸ்வரர் பூஜையை முடித்து விட்டு முன் பக்கத்தில் மஹா பெரியவா அமர்ந்திருந்தார். சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அச் சமயம் வெய்யிலின் கொடுமையைத் தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்து போய் களைத்து உட்கார்ந்தான். அவனுடைய சோர்ந்த முகம் மகானின் பார்வைக்கு தப்பவில்லை. மடத்து ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை அருகே அழைத்து வரச் சொல்லி, மெதுவாக வளையல் வியாபாரியை விசாரித்தார்.
"உனக்கு எந்த ஊர்?
''சாமி எனக்கு இதே ஊரு தானுங்க''
''வளையல் வியாபாரம் எப்படி நடக்கிறது?''
''ஒண்ணும் சரியில்லீங்க சாமீ . ஆறு மாசமா ரொம்ப டல். சோத்துக்கே வழியில்லேன்னா பாத்துக்குங்க. இப்போ எல்லோரும் கடையிலே போய் வளையல் வாங்கறாங்க. வீடு தேடி போனா விலை குறைச்சு கேக்கறாங்க. நஷ்டத்துக்கு விக்க முடியலீங்க. சமயத்துலே வேறே வழியில்லாமெ கொடுத்துடறேன். சாப்பாட்டுக்கு கொஞ்சமாவது அன்னாடம் காசு வேணாமுங்களா?''
உனக்கு எத்தனை குழந்தைகள்?"''வீட்டிலே என்னையும் சேர்த்து 7 உருப்படிங்க. என் சம்சாரம், 4 குழந்தைங்க, ரொம்ப வயசான எங்கம்மா என்கூட இருக்காங்க''.
ஒரு கணம் யோசித்த மஹா பெரியவா, பக்கத்திலே இருந்தவர்களிடம் "இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை இன்னிக்கு நாம தான் ஏற்றுக் கொள்ளணும் . இன்னிக்கு வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா வளையலையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக்கொடுப்பது விசேஷமல்லவா? அதனாலே அவர் குடும்பத்துக்கும் நாம உதவி செய்ததாகும். இந்தப் புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!"
மடத்துக்கு வந்திருந்த வசதி படைத்த ஒரு பக்தர் வளையல் எல்லாவற்றையும் வியாபாரியிடமிருந்து
வாங்கும் புண்யத்தை ஏற்க முன்வந்தார்.
'' நீங்க வளையல் அத்தனையும் வாங்கிட்டேள் இப்போ. அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து வளையல் காரரிடமே கொடுங்கோ.''
ஏன் பெரியவா இப்படி சொல்றான்னு புரியலே. அவாளே சொன்னப்புறம் தான் புரிஞ்சுது.
''இன்னிக்கு வெள்ளிக்கிழமையில்லையா? வளையல் பெட்டி காலியாக இருக்கவே கூடாது. அந்த வளையல்

களை அவர் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.''
பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி, புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.
"இன்று வளையல் காரருக்கு தலை பாரமும், மனபாரமும் நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"
தன்னை நாடி வருபவர் களுக்கு அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கே தெரியாமல், எதிர்பாராத விதமாக உதவியைச் செய்து விடுபவர் பெரியவா என்பது அங்கிருந்த பக்தர்களுக்கு தெரிந்தது தானே. நடமாடும் தெய்வம் என்று எல்லோருக்குமே பெயர் கிடைக்கும். காசு கொடுத்து மேலே போட்டுக்கொள்ளும் பட்டமா அது? அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப்பெண்களுக்கும் வளையல்கள். அதுவும் அந்த தெய்வம் கையால் தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம் அன்று பெற்ற சுமங்கலிகள், பெண்கள் யார் யாரோ? அவர்கள் எங்கிருந்தாலும் சுபிக்ஷமாக வாழ்பவர்கள்.

No comments:
Post a Comment