Saturday, April 25, 2020

SMARAVARAM



கண்ணனை பணி மனமே J K SIVAN இது சதாசிவ ப்ரம்மேந்திரரின் ஒரு சின்ன கீர்த்தனை. ஸ்ரீ பால முரளி கிருஷ்ணா செவிக் கினிமையாக பாடி இருக்கிறார். நீ என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன் கேள். கோகுலத்தில் கோபியர்கள் வீடுகளில் சத்தம் போடாமல் சென்று வெண்ணெய் திருடுகிறானே அந்த சிறுவன், நந்தகோபன் குமாரன், கிருஷ்ணனை விடாமல் அடிக்கடி தியானம் செய்து கொண்டிரு, ஸ்மரித்துக் கொண்டே இரு. அவன் தானும் தின்றுவிட்டு கோகுலம் பிருந்தாவனத்தில் அவனோடு சுற்றிக்கொண்டு கூட இருக்கும் சகாக்களுக்கும் அல்லவோ வாரி வழங்குபவன். இந்த இடத்தில் வெண்ணை பக்தி, அவன் விரும்பி அதை ஏற்று வழங்குவது மோக்ஷ சாம்ராஜ்யம். ஆஹா அந்த சிறுவன் இடுப்பிலிருந்து புல்லாங்குழலை எடுத்து ஊதும்போது வெறும் காற்றை இழுத்து அவன் தரும் சுநாதம் அம்ருதத்தை பருகுவது போல அல்லவோ இருக்கிறது. நமது இதயம் ஒரு கூண்டு என்றால் அதில் சுகமாக வசிக்கும் கிளி கிருஷ்ணன். அவனை மனம் குளிர நினைத்தால் நமது ஆத்ம விசாரத்தில் நாம் மோக்ஷத்தை அடைவதை எந்த பகன் , தேனுகன் போன்ற ராக்ஷஸனும் தடுக்க முடியாது. கிருஷ்ணன் சுலபமாக அவர்களை அழிப்பவன் அல்லவா அவன்? அடியேனும் இந்த அருமையான கீதத்தை பாடிப் பார்க்கிறேன்

I SANG MORE OUT OF MY PASSION FOR KRISHNA SONGS AND MY DEVOTION TO HIM THOUGH MY VOICE NOT COOPERATING AT 81+ https://youtu.be/Cgqt2wrH_MI

Pallavi:: Smaravaram varam Smaravaram varam Manasa smara nandakumAram Charanam 1:: Gopa kuteera payoghrutha choram Gokula brundavana sancharam Charanam 2:: Venuravamrutha pana kishoram Srushti sthithilaya hethuvicharam Charanam 3:: Parama hamsa hruth-panjara keeram Patuthara dhenuka baka samharam Pallavi:: Smaravaram varam Smaravaram varam Manasa smara nandakumAram Charanam 1:: Gopa kuteera payoghrutha choram Gokula brundavana sancharam Charanam 2:: Venuravamrutha pana kishoram Srushti sthithilaya hethuvicharam Charanam 3:: Parama hamsa hruth-panjara keeram Patuthara dhenuka baka samharam

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...