சந்திரோதயம் J K SIVAN
முழு நிலவு ஒரு மயக்கு மோஹினி. கவிஞன் கண்டால் பாடுகிறான். காதலன் காதலியை compare பண்ணுகிறான். சந்திக்கிறான்.
சாப்பிடாமல் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைக்கு சந்தாமாமா சாப்பிட உதவுகிறார். சிவனுக்கு பிடித்து அவன் பிறையை மட்டும் தலையில் சூடிக்கொள்கிறான். பைத்தியம் பிடிக்க வைக்கிறான் சந்திரன் அதனால் lunatic என்று பெயர் அளிக்கிறான்.
'' எங்கே பாயும் தலைகாணியுமா மொட்டை மாடிக்கு போறே. அங்கே போய் படுக்காதே.''
''இல்லேம்மா. நல்ல குளுகுளு காத்து. பளிச்சுனு பால் போல சந்திரன்...
''வேண்டாம் பாரிசவாயு வரும். உள்ளே வந்து படு. ''
நமது ஜாதகமே சந்திரன் அடிப்படையில். அவனது 27 மனைவிகளா? நக்ஷத்திரங்கள்? அவற்றின் ஆதாரத்தில்.
நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், நிலா நிலா ஓடிவா, ஓ ஹோ வெண்ணிலாவே. ஆஹா இன்ப நிலாவினிலே,, சந்திரோதயம் ஒரு ... ''
பாட்டெல்லாம் மறக்கவில்லை. சந்தமாமா, அம்புலி மாமா என்று அருமையான சின்னவயசு பத்திரிகை நிறைய படங்கள் கதைகளோடு வரும். சித்ரா என்பவர் அற்புதமாக படங்கள்
வரைவார். பூர்ண சந்திரிகா என்று ஒரு ராகம் கூட உண்டு.
கிருஷ்ணன் ராதையோடு கோபியர்களுடன் விளையாட ஒரு பௌர்ணமி யையும் வீணடிக்கவில்லை என்று ஜெயதேவர் சொல்கிறார்.
நியூஸிலந்து நான் பார்த்ததில்லை. நண்பர்கள் உறவினர்கள் உண்டு. கூப்பிடுகிறார்கள். கரோனா விட்டபிறகு ஒரு தடவை முயற்சிப்போம்.
அங்கே வெல்லிங்டன் என்று ஒரு ஊர். அதில் இருந்து ஒரு குடும்பம் இங்கே வந்து என் வீட்டுக்கு பின்புற கல்யாண மண்டபத்தில் அவர்கள் குடும்ப விழாவிற்கு அழைத்தது.
வெல்லிங்டனில் விக்டோரியா என்று ஒரு மலை. அதன் மேல் நின்று பார்த்தால் பூர்ண சந்திரன் மெதுவாக தலை தூக்கி ஆகாயத்தில் பவனி வருவதை பார்க்க மக்கள் கூடுவார்கள். அந்த மலை உச்சியில் நின்று பூர்ணச்சந்திரன் புறப்பாடு பார்க்க 2.1 கி.மீ. தூரத்திலிருந்து ஒருவர் வீடியோ எடுத்தார். நாமே அந்த சந்த்ரோத யத்தை நேரே இருந்து பார்ப்பது போல் இருக்கிறது. படமெடுத்தவர் இதை பிடிக்க ரொம்ப நாள் காத்திருந்தேன் என்கிறார். முயற்சிகளில் பல முறை தோற்றாலும் கைவிடவில்லை. 28.1.2013 அன்று ஆசை நிறைவேறியது. அழகாக ஒரு பின்னிசை இணைத்திருக்கிறார். நிலவைப்போல மெதுவாக அணைக்கிறது அந்த இசை. ttps://vimeo.com/markg/fullmoonsilhouettes
No comments:
Post a Comment