Tuesday, April 14, 2020

JALLIAN WALABAGH MAASACRE




101 வருஷத்துக்கு முன் நடந்தது
நினைவிருக்கிறதா? J K SIVAN

101 வருஷத்துக்கு முன்பு. பஞ்சாப் அம்ரித்சர்ஸ் ஊரில் ஜல்லியனவாலாபாக் என்கிற இடத்தில் குறுகலான தோட்ட பகுதியில் , கண் மண் தெரியாமல் 400 நிரபராதிகளை, நிராயுத பாணிகளை ஒரு வெள்ளையன் சுட்டு கொன்றான். 1000 த்துக்கும் மேல் படுகாயம். அவர்களில் யாருமே இப்போது இல்லை. ஒரு தலை முறை, ரெண்டு தலைமுறை ஆன பின்னும் யாரும் அதை மறக்க வில்லை. நாடே ரத்தக்கண்ணீர் இன்று ம் வடிக் கிறது.
1919ல் இந்தியாவின் சுதந்திர போராட் டத்தை ஒடுக்க ரௌலட் என்ற நீதிபதி யின் சட்டம் அமுலுக்கு வந்தது. அதன் படி இந்திய பாதுகாப்பு விதிகள் இறுகி சுதந்திர போராட்டம் அமுங்கிவிடும் என்று எதிர்பார்த்தது ஆங்கிலேய அரசு.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து வலுவடைந்தது. நாடெங்கும் ஆதரவு பெற்றது. பஞ்சாப் , வங்காளம் இரண்டுமே இந்தியாவின் சரித்திரத்தில் சுதந்திர போரில் வலுவான தீவிர அங்கங்கள். அதன் விளைவாக நாட்டில் கொந்தளிப்பு.
1920-22 ஒத்துழையாமை இயக்கம் தீவிர மடைந்தது . இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முடிவு கட்ட இது ஒரு பலமான எதிர்ப்பாகியது. பஞ்சாபில் கிளர்ச்சி . நடந்தது. பஞ்சாப் ஜெனரல் மைக்கேல் ஓ' டயர் என்பவன் கட்டுப்பாட்டில் இருந்தது. சிப்பாய் கலகம் 1857ல் நடந்தது போல் வெடிக்குமோ என்று அஞ்சினான். வங்காளத்தில் ஒரு பக்கம் கலவரம் வளர்ந்து வந்தது.
10.4.19 அன்று சத்யாகிரஹ போராளிகள் சத்யபால், சைபுதின் கிச்லூ என்ற இருவர் ஏற்கனவே சிறைப்பட்டு ரகசிய பாதுகாப்பில் இருந்ததை எதிர்த்து அவர்கள் விடுதலை கோரி ஒரு கூட்டம் அம்ரித்சர் அதிகாரி இர்விங் வீட்டை சூழ்ந்தது.
11.4.19 அன்று மார்செல்லா ஷெர்வூட் என்ற கிருத்துவ மத பிரச்சாரக பெண் கூட்டத்தில் மிதிபட்டு உயிர் தப்பினாள் . டயரின் கோபம் உச்சமடைந்தது. டயரின் ஆட்கள் தெருவில் இருந்தோரை அடித்து உதைத்து மண்டிபோட வைத்து சாட்டை அடிகள் பெற ஆணையிட்டான்.
வெள்ளையர்கள் அரசாங்க அலுவல கங்கள் சீரழிக்கப்பட்டு. சில வெள்ளை யர்கள் உயிரிழந்தார்கள். மக்கள் பொதுக்கூட்டம் போடக்கூடாது என ராணுவ சட்டம் இயற்றி கொந்தளிப்பை சமாளித்தான் டயர். ரெண்டு நாள் அமைதி.
12.4.19 அன்று அம்ரித்சரில் ஹிந்து காலேஜில் ஒரு கூட்டம். ஹன்ஸ்ராஜ் என்ற கிச்லூவின் கூட்டாளி, கிச்லூ , சைபுதீன் விடுதலை கோறி ஒரு கூட்டம் ஜல்லியன் வாலாபாக் தோட்டத்தில் மறுநாள் 13.4.19 அன்று மாலை 6.30க்கு நிகழும் என்று வெளியிட ஜெனெரல் டயர் அதை ஒடுக்க முடிவெடுத்தான்.
13.4.19 ஞாயிறு பஞ்சாபியர் விசாக விழா கொண்டாடும் நாள். 144 சட்டம் போட்டு யாரும் அம்ரித்சர் வெட்டு வெளியேறவோ, உள்ளே வரவோ கடவு சீட்டு பெறவேண்டும். 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று curfew ஆணை பிறப்பித்தான் டயர்.
ஜல்லியன் வாலாபாக் என்ற தோட்ட வெளி இடம் அம்ரித்சரில் ஹர்மந்திர் சாஹிப் எனும் இடம் அருகே உள்ளது. பொற்கோவில் செல்ப வர்கள் வரும் வழி. ஆறு ஏழு ஏக்கர் திடல். 200 x 200 கஜம் நீள அகலம். சுற்று சுவர்கள் 10அடி உயரம் ஐந்து குறுகிய நுழை வாயில்கள். சிலது கதவு பூட்டி இருக்கும். நடுவில் மயான பூமி,ஒரு பெரிய 20அடி விட்டம் வாயகன்ற கிணறு. வழக்கம்போல வியாபாரிகள், பொதுமக்கள், பொற்கோவில் செல்பவர்கள், விசாக விழா கொண்டாடுவோர், ஆயிரக்கணக்கானோர் அங்கே திரண்டனர். குதிரைகள், கேளிக்கைகள், எல்லாம் நிறைந்திருந்தது. எல்லோரும் போராளிகள் அல்ல.நிரபராதி அப்பாவி ஜனங்கள்.
திட்டமிட்டபடி ரௌலட் சட்ட எதிர்ப்பு வெளியிட, இரு போராளிகள் விடுதலை கோரி தீர்மானம் போட தீவிரவாதிகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள். விமான வேவு மூலம் கிட்டத்தட்ட ஜல்லியன் வாலா தோட்டத்தில் 6000 பேர் இருப்பார்கள் என்று டயர் அறிந்தான்.
இரவு 7.30க்கு அவர்கள் கூட்டம் ஆரம்பித்த ஒரு மணி நேரம் கழித்து கவசமிட்ட 2 மோட்டார் வண்டிகள் , தவிர அநேக இயந்திர துப்பாக்கி வீரர்களுடன் யுத்தத்துக்கு வருவது போல் வந்து ப்ரதான நுழைவு வாயிலை அடைத்துக் கொண்டான். கதவுகள் அடைபட்டன . ''கூட்டத்திலிருந்து விலக இது எச்சரிக்கை அல்ல, கட்டளைக்கு அடிபணியாததற்கு தண்டனை'' என்று அறிவித்தான். பத்து நிமிஷம் துப்பாக்கில் தோட்டா மழை பொழிந்தன. நிலைகுலைந்து ஓடிய ஜனங்கள் கூட்டத்தின் மேல் சுட்டு பொசுக்கின. எத்தனையோ பேர் கிணற்றில் விழுந்து மடிந்தார்கள். தோட்டாக்கள் தீர்ந்தபிறகு தான் சுடுவது நின்றது. 1650 round சுற்று துப்பாக்கி குண்டுகள் மக்களை குளிப்பாட்டின . திகைத்த, பீதியடைந்த மக்கள் அங்குமிங்கும் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து மிதித்துக் கொண்டு சின்ன நுழைவு வாயில்களை நோக்கி மொத்தமாக ஓடினர். டயர் அவர்களை கொல்ல உத்தரவிட்டு துப்பாக்கிகள் அந்த வாசல்களை நோக்கி சுட்டு அவர்களை கொன்றது.
1500 பேருக்கு மேல் மாண்டதாக பேச்சு. அரசாங்கம் விவரம் எதுவும் சொல்லாமல் பூசி மழுப்பியது.
.
1919 ஜூலை மாதம் சர்ச்சில் ஆவேசமாக டயர் செய்தது ராக்ஷசத்தனம் என்று மக்கள் சபையில் லண்டனில் வாதாடி மக்கள் சபை டயர் குற்றவாளி என்று ஒப்புக்கொண்டது.
1919 அக்டோபர் மாதம் ஹண்டர் கமிஷன் HUNTER COMMISSION நியமிக்கப்பட்டு விவரம் சேகரித்து 379 சாவு, 1500 பேர் போல காயம் என்றது. அதில் 192 பேர் உயிருக்கு ஊசலாடு பவர்கள் என்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 1500 பேர் காயமுற்றதாகவும் அதில் 1000 பேருக்கு மேல் மாண்டதாக கூறியது. இந்தியா முழுதும் சாட்சிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
1919 நவம்பர் 19 அன்று டயர் நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்.தனக்கு வாதாட வக்கீல் வேண்டாம் என்றான்.
''டயர், உனக்கு எத்தனை மணிக்கு தீவிரவாதிகள் கூட்டம் பற்றி சேதி வந்தது.?''
''1240 க்கு ஜல்லியன் வாலாபாக் கில் கூட்டம் போடுகிறார்கள் என்று அறிந்தேன். தடுக்க முயலவில்லை. கூட்டம் நடந்தால் அதை சுட்டு பொசுக்கவே முடிவெடுத்தேன்''.
'' கூட்டத்தை உன்னால் விலக்கி இருக்க முடியும் அல்லவா?
''ஓ. நிச்சயமாக. கூட்டத்தை என்னால் சுடாமல் விரட்டி அடித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் மீண்டும் கூடுவார்கள். விலக்கி இருந்தால் நான் முட்டாளாக்கப் பட்டிருப்பேன்'
சிரித்தான் டயர். '' நாட்டுக்கு தீமை செய்யும் அரசாங்க விரோத நாசகார கும்பல் அது. அவர்களை தீர்த்துக் கட்டுவது ஒன்றே வழி என்று முடிவெடுத்தேன்.''
'' சரி, தோட்டத்தின் நுழைவு வாயிலில் கவசமிட்ட மோட்டார் வண்டி புக முடிந் திருந்தால் அப்போதும் நீ இயந்திர துப்பாக் கிகளை உபயோகித்திருப்பாயா?''
''ஆமாம். சந்தேகமே இல்



லை''
''அப்போது இன்னும் அதிக படுகாயம், மரணம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?''
''ஆமாம்''
''பஞ்சாபில் இப்படி ஒரு செயல் புரிந்தால் நாடு முழுதும் கொஞ்சம் கலவரம் அடங்கும் என்று என் எண்ணம்'' முழுதும் அடக்குமுறை அமல் செய்யவே கடைசி தோட்டா வரை சுட கட்டளையிட்டேன்.''
டயர் வாக்குமூலம் முடிந்தது. டயர் மேலிடத்து உத்தரவை நிறைவேற்றும் கடமையில் பணி புரிந்தான். அவன் கொலைகாரன் அல்ல, இந்தியாவில் இனி பணி கிடையாது. உத்யோக உயர்வு கிடையாது என தீர்ப்பு.
சில நாட்கள் கழித்து மஞ்சள் காமாலை நோய் வந்தது. கால் மூட்டு நோயும் வந்தது. மருத்துவ னையில் சேர்ந்தான்.
1940 மார்ச் 13 அன்று லண்டனில் காக்ஸ்டன் ஹால் எனும் இடத்தில் 75 வயதான மைக்கேல் ஓ டயர் எனும் பஞ்சாபி பிரதேச அதிகாரி ஜல்லியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவன், இந்தியன் ஒரு சீக்கியன் உதம் சிங் என்பவனால் சுடப்பட்டு இறந்தான். உதம் சிங் ஜல்லியன்வாலாபாகில் காய மடைந்து உயிர் பிழைத்து பழிவாங்கிய இந்திய சீக்கியன்.1940ல் ஜூலை 31 அன்று தூக்கிலிடப்பட்டான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...