Monday, April 13, 2020

GARBAGE




கிருஷ்ணா  காப்பாற்று.  J K SIVAN

எங்கும்   சுத்தம். சுகாதாரம்.  வீட்டிலே ஒருவரை ஒருவர்  தொடக்கூட கொஞ்சம்  யோசனை. இப்படி எத்தனையோ குடும்பங்கள். பிளாட்ல நடமாட்டம் ஜாஸ்தி. நாலு பேருக்கு மேலே சேர்ந்து காணோம். தெருக்கள்  காலி.  வீடுகள்  நிசப்தம்.  பண்டிகைகள், வெளியில்  வாங்கி தின்பது  மறந்து போய் விட்டது.  வேப்பிலை க்கு  டிமாண்ட்.  வாசலில் விற்பதற்கு எவரும் இல்லை.  வாங்கவும் அரை மனசு.
பல நாட்கள் ஆகிவிட்டது.   தெருவில்  தெலுங்கு பேசும்  சேஷம்மா குப்பை வண்டியை  தள்ளிக்கொண்டு  வருவாள். விசில் ச த்தம் தெருமுனையில்  கேட்கும்போதே  குப்பைகளை கூடை நிறைய வைத்துக் கொண்டு  வாசல் கேட்டுக்கு உள்புறம் நின்று  வெளியே தலையை மட்டும்  நீட்டிக்கொண்டு  மூக்கு  வாய் எல்லாம் மூடிக்கொண்டு கையில் கூடையோடு அங்கும் இங்கும் பார்வை.  இதோ  பல வீடுகளில் கொடிய  குப்பையே  வண்டி நிறைத்து விட்டது. இன்னும் நான்கு வீடு தாண்டி  என் வீடு.   ராஜாவுக்கு அவசரம் . சீக்கிரம் ஏன் வரமாட்டேன் என்கிறாள்? 

ராவ்  வீட்டில்  வாக்குவாதம்.

ஏன்  நேற்று  மூன்று கூடையில் ரெண்டு கூடை எடுக்கவில்லை.

நான் எப்படிங்க  வீட்டுக்குள் வந்து எடுக்க முடியும்?

ஏன் எடுத்தால் என்ன குறைஞ்சு போய் விடுவாயா?

இல்லிங்க.  குழந்தை அழுவுது.

குழந்தையா?


மாம்  எட்டி பார்த்தேன்.

சேஷம்மா  குப்பை வண்டியில்  ஒரு மூலையில் குப்பை  கருப்பு  பொட்டலங் களுக்கு  இடையில்  ஓரமாக  ரெண்டு வயது  பையனை உட்கார்த்தி  வைத்திருக்கிறாள்.

அவன் கையில் ஒரு உடைந்து போன  பிளாஸ்டிக் mug  அது தான் அவன் விளையாடும்  பொம்மை. 

இன்னும்  குப்பை போட போட  அவன் உட்காரும் இடத்துக்கும்  இட நெருக்கடி வராதோ?

அவனுக்கு  யார்  வாய்  மூக்கை மூட வேண்டும் என்று கவலைப் படவில்லை? அவன் குப்பையோடு குப்பையோடு  ஜீவிதமாக இருப்பதை  பற்றி கவலை இல்லையே ?.

சேஷம்மா கவலைப்பட்டு  என்ன செய்வாள்? 

வீட்டில்  யாரும் இல்லாமல் ரெண்டு வயது குழந்தை தனியாகவா இருக்கும்?   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...