இன்னும் மனமிரங்காதோ? J K SIVAN
பக்த ராமதாஸ் சிறையில் வாடும்போது அவர் முழு மனது ராமன் மீதே இருப்பதை இந்த கீர்த்தனையை அறிகிறோம். ராமனை கோதண்ட பாணி என்கிறார்.
''ஹே கோதண்டபாணி, உன் குரல் என்ன விலை உயர்ந்த அடையமுடியாத தங்கமோ? கொஞ்சம் என்னிடம் பேசினால் என்ன?
ஹே, மறக்க முடியாதவனே, உன் நாமம் என் நாவில் எப்போதும் ஒலிப்பதை கேட்டும் என் தந்தையே ஏன் என்னிடம் ஒரு வார்த்தை நீ பேச வில்லை" ராமா, உன்னை நினைவிலும் கனவிலும் நான் மறக்கவே இல்லையே. உன் நாமம் தானே என் மூச்சு. ஏன் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை?
திரும்ப திரும்ப நான் உன்னையே தானே தேடுகிறேன். வேண்டுகிறேன். நான் ஒரு சாதாரணன். உன் சக்திக்கு முன் நான் ஒரு துரும்பு. எனக்கு என்ன சக்தி இருக்கிறது உன்னை சரணடைவதை விட்டு? . ராமா ஏன் என் மேல் கருணையே துளிக்கூட உனக்கு
இல்லை ?
இப்படி கதறும் எனக்கு கண் திறக்காத நீ எப்படி அப்பா ராமா, துளித் துளியாக மணலை முதுகில் ஒட்டியவாறு சேது பந்தனத்துக்கு உதவிய ஒரு அணிலுக்கு கருணை காட்டினாய் என்பதை நான் நம்புவது?
ராமா, இந்த ராமதாஸ், நான், உன் சேவகன், அடிமை, நீ கருணை உள்ளவன் என்பதை என் விஷயத்தில் நிரூபி அப்பனே. நீ தான் என் போன்ற தீனர்களை பாதுகாப்பவன் அல்லவா?
அவரது தாய் மொழி தெலுங்கு. அற்புதமாக அனுபவித்து ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா ஆனந்த பைரவியில் பாடுவதை கேட்டு எனக்கும் உற்சாகம்.
LATE AT THIS AGE I SIMPLY TRIED TO SING THIS SONG UNABLE TO CONTROL THE TEMPTATION. CLICK THE YOU TUBE LINK https://youtu.be/O8n9tpfu420
Paluke bangaramaayena Kodandapani - 4
paluke bangaramaaye pilichina palukavemi - 2
kalalo nee naama smarana marava sakkani saami paluke 3
Yentha vedina gaani suntaina daya raadhu - 2
panthamu seya nen entha ti vaadanu tandri - 2 Paluke
Saranagatha thraana birudhanki sudavu kaava - 2
karuninchi Bhadrachala vara Ramadasa posha - 2 Paluke
No comments:
Post a Comment