Thursday, April 23, 2020

FORGOTTEN MATTER



சில சுவாரஸ்யங்கள். J K SIVAN சாரங்கபாணி சுவாரஸ்யமான விஷயங்களை சேகரிப்பவன். ஒருநாள் என்னோடு பேசிக் கொண்டிருக் கும்போது என்னிடம் ஒரு பழைய 1960ம் வருஷ Hoe &Co குண்டு டயரியை கொடுத்து இதில் உள்ள விஷயங்களை படித்து எல்லோருக்கும் சொல்லுங்கள் என்றான். எத்தனை பேருக்கு ஹோ அண்ட் கம்பெனி ஞாபகமிருக்கிறது என்பதே என் முதல் கேள்வி.? அதில் எழுத writer ரைட்டர் பேனா உபயோகித்தோம். இங்க் பாட்டில் பெயர் கிருஷ்ணவேணி. பிரில் BRIL குயின்க் QUINK இந்த பெயர்கள் இப்போது மறந்தே போய்விட்டது. MY என்று ஒரு இங்கே இருந்ததாக ஞாபகம். பேனாக்களில் WRITER ரைட்டர் என்று ஒன்று இருந்ததாக ஞாபகம். அதே போல் பேனாக்களுக்கு சிறந்த இடம் ஒன்று ப்ராட்வே யில் இருந்தது. சின்ன கடை. ஜெம் அண்ட் கம்பெனி. GEM &CO என்று பெயர். நிறைய பேனாக்கள் வாங்கியிருக்கிறேன். நான் மோசம்போனதெல்லாம் தரையில் சல்லிசாக விலையில் பேரம் பேசி வாங்கிய பேனாக்கள். ஒழுகும். கையெல்லாம் இங்க் . அதற்கு சாக் பீஸ் துணி, நூல் ட்ரீட்மெண்ட் கொடுத்தான் மசியாது. சோப்பு தடவினாலும் அல்பாயுசு தான். ரைட்டர் அப்புறம் சீனா தேசத்து பைலட் PILOT ட்டோடு போட்டிபோடமுடியாமல் மறைந்து போய்விட்டது. என் தகுதிக்கு எட்டாமல் சில பேனாக்கள் பெயர்கள் உண்டு. பார்க்கர்,PARKER, MONTBLANC மான்ட்பிளாங் , மேன்ட் மோர் டிப்ளோமாட் MEANTMORE DIPLOMAT வாட்டர்மான்ஸ், WATERMANS போன்றவை. என் அப்பாவிடம் பிளாக்பேர்ட் பழசக் BLACK BIRD என்ற தடிமனான இங்க் ரொப்பும் பேனா இருந்தது. ஒரு முக்கியமான விஷயம், பேனாவின் கழுத்தை திருகி திறந்து அதனுள் இங்க் பாட்டிலிருந்து இங்க் சொட்டி நிரப்புவது இன்னும் என்னால் முடியாத ஒரு காரியம். அந்தக்காலத்தில் நிறைய பேர் சட்டை பாக்கெட் கிட்ட இங்க் கரை, கட்டை விறல் ஆள்காட்டி விரலிலும் இங்க் கரை உண்டு. இங்க் தலையில் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். சாரங்கபாணி சேகரித்த சில ருசிகர சேதிகள் சிலது மட்டும் சொல்கிறேன். மாதுரி தேவி அப்பா, மைனாவதி எந்த பள்ளியில் படித்தார் என்பது நமக்கு அவசியம் இல்லை. 1. நீ என்ன காலணி அணிந்திருக்கிறாய் என்று தான் மக்கள் பொது இடங்களில் முதலில் கவனிப்பார்கள். பர்மா ரப்பர் செருப்பு, சேற்றை வாரி வேட்டியில் சட்டையில் பின்னால் அடிக்கும் செருப்பு அணிந்திருந்தாள் செருப்பை பார்த்தவுடன் உன் முகத்தை கூட பார்க்கமாட்டார்கள். 2. ஒரு நாளைக்கு பதினோரு மணி நேரம் உட்கார்ந்திருப்பவன் 3 வருஷத்தில் மடிந்து போக பாதிக்குமேல் வாய்ப்பு. ஐயோ இது பிடிக்கவில்லை. 3. இந்த உலகத்தில் நம்மைப்போலவே ஆறு பேர்கள் உண்டாம். அவர்களில் ஒருவரை நீ பார்ப்பதற்கு 10% சான்ஸ் உண்டாம். ஆமாம் நான் கூட படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஏழு ஹிட்லர்கள் இருந்தார்களாம். 4. தலைகாணி இல்லாமல் படுக்கிறவனுக்கு முதுகு வலி குறையும். தண்டுவடம் தான் வளையாமல் நேராக இருக்குமே. . 5. நீ உயரம் எவ்வளவு என்பது உன் அப்பாவின் உயரத்தை பொறுத்தது. குண்டு அம்மா ஒல்லியா குண்டா என்பதை பொருத்ததாம். 6. மூணு விஷயங்களை நமது மூளை கவனிக்கிறதாம். உணவு, கவர்ச்சிகரமான மக்கள், ஆபத்து. 7 . நாம் வலது கை காரர்கள் என்றால் நாம் சாப்பிடும் உணவை வாயில் வலது பக்கம் தான் மெல்கிறோமாம். அடுத்ததடவை சாப்பிடும்போது கவனிக்கலாம். 8. ஜிம் கொண்டு போகும் பய், கால் ஷூ இதற்குள் டீ பாக்கெட்டை போட்டு வைத்தால் நாற்றம் ல்போய் கம்மென்று மணக்குமாம். 9. ஆல்பர்ட் ஈன்ஸ்ட்டின் ஆல்பர்ட் Albert Einstein ஒரு அருமையான விஷயம் கண்டுபிடித்திருக்கிறாராம். உலகில் தேனீக்கள் இல்லையென்றால் நாலு வருஷத்தில் மனித இனம் காலியாம். 10.ஆப்பிளில் எத்தனையோ ஜாதியாம். ஒரு நாளைக்கு ஒரு ரகம் என்று சாப்பிட்டாலே எல்லாவற்றையும் ருசிக்
க இருபது வருஷம் ஆகுமாம். 11. சாப்பிடாமல் எத்தனையோ வாரம் இருக்கலாமாம். தூங்காமல் பதினோரு நாளைக்கு மேல் இருக்க முடியாதாம்.. 12. சிரிப்பவன் ஆரோக்கியமாக இருக்கிறான். இது ஏன் நரசிம்ம ராவுக்கு மன்மோகன் சிங்குக்கு தெரியவில்லை? 13. சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது சிகரெட், புகை பிடித்தால் நேரும் மரணத்தை சுலபத்தில் தந்துவிடுமாம். 14. நமது மூளை வேலை செய்ய, ஒரு 10வாட் பல்ப் எரிய தேவையான சக்தி தேடுகிறது. 15. ஒரு அரை மணி நேரத்தில் நமது உடலில் இருந்து வெளிப்படும் சூடு, உஷ்ணம் இருக்கிறதே அது 1.5 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கும் உஷ்ணமாம். 16. நமது வயிற்றில் உள்ள ஹைட்ரொ கிளோரிக் அமிலம் HCL முக க்ஷவரம் பண்ணும் ப்ளேடுகளை க்கூட ஜீரணமாக்கி விடுமாம். 17. தினமும் பத்து நிமிஷம் முதல் 30 நிமிஷம் வரை நடக்கவேண்டும். நடக்கும் போது சிரிக்கவேண்டும்... யாரைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு அருங்கலை . அது தெரியாமல் ஈடுபட்டால் ஆபத்து விளையலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...