Thursday, April 30, 2020

HELP




                            இந்த கீச்சுக்குரல்....  J K   SIVAN 


பூர்வீக சொத்து நிறைய  நிலமும்  நீச்சுமாக இருந்தது வாஸ்தவம்.  நீலகண்ட சாஸ்திரி போகும் வரை எல்லாம் கட்டுப்பாட்டில் இருந்தது. பரசுராமன் தலை எடுத்தானே தவிர  தத்தாரி  பட்டம் தான் வாங்கமுடிந்து அந்த கவலையில் சாஸ்திரிகள் மண்டையை போட்டுவிட்டார்.    பரசுராமன் க்ஷத்ரியர்கள் அசுரர்களை,  அரசர்களை ஒழிப்பது என்று அவதாரம் எடுத்தாலும்  அந்த பெயர் கொண்ட  தஞ்சாவூர் பரசுராமன்  அப்பா தாத்தா சொத்தை அழிப்பதற்கே அவதாரம் எடுத்தவன்.


அலமேலுவை திருவையாற்றில் கல்யாணம் பண்ணிக்கொடுத்தபோது அவள் அப்பா நாலைந்து வீடு நிலம் மாடு கன்று தென்னந்தோப்புடன் சேர்த்து தான் நீலகண்ட சாஸ்திரியிடம்  கொடுத்தார்.  பரசுராமன் மாப்பிள்ளையாக வந்து அதை முதலில் அழித்தான்.  

தர்மன் சொக்கட்டான் ஆடி ராஜ்யத்தை இழந்தான். பரசுராமன் தானாகவே எந்த சகுனியும்  இல்லாமல்  தனது வீட்டு திண்ணையிலேயே   இருப்பதை எல்லாம் ஒன்று ஒன்றாக இழந்தான். 

ஏதோ ஒரு வருஷம்  எதிர்த்த வீட்டில்  கோபாலய்யர்  குடும்பம்   கும்பகோணம் மகாமகம் பார்க்க
 புறப்பட்ட   போது   அலமேலுவும் அவர்களோடு  சேர்ந்து கொண்டு கும்பேஸ்வரனை வேண்டி  கணவனுக்கு நல்ல புத்தி கேட்க கிளம்பினாள்.    கழுத்தில் கடைசியாக இருப்பது  அப்பா சொத்தில் ஒன்றான  எட்டு வடம் சங்கிலி  ஒன்று  தான் பாக்கி.  

''நான் வரலே  நீ போ ''என்று  பரசுராமன் தனியாக அவளை அனுப்பி விட்டான். 

கும்பகோணம் மகாமகம் ஸ்னானம் ஏக கும்பல்.  எதிர்த்த வீட்டு கும்பல் காணாமல் போய்  விட்டது தேடினால் கிடைக்கவில்லை.  கையில் காசு இருந்த பை  அவர்களிடம் தான் இருந்தது.  என்ன செய்வது என்று புரியவில்லை. அக்காலத்தில்  மொபைல் போனோ,  வேறு எந்த விதமான  வசதியோ இல்லை. மேலும் அலமேலு  வெகுளி.  படிக்காதவள் .  யாரோ  ஒரு 18 வயது வாலிபன் அருகே ஸ்னானம் செய்து கொண்டிருந்தவன்  அழுது கொண்டிருந்த  அவளை மெதுவாக கரையேற்றினான்.   அவன் பரம ஏழை. 

தாமோதரன் காலேஜ் படிச்சுட்டு வேலை தேடுபவன் கிடைக்கவில்லை.  அப்பா சுந்தரமய்யர் அம்மா கல்யாணி ஒரு பஸ்ஸில்  திருவனந்தபுரம் போகும்போது  விபத்தில் ஒன்றாகவே இறந்துபோய்  அவன் யாருமில்லாத அனாதை  .  படித்துக்கொண்டே  சுயமாக ஏதாவது  சின்ன சின்ன வேலை செய்து வயிறுகழுபவன். சென்னையிலிருந்து மஹாமஹம் தரிசனத்துக்கு  வந்தவன். 

''ரொம்ப சந்தோஷம் டா பையா''  எப்படியோ என்னை  தஞ்சாவூர் பஸ் லே  ஏத்தி உக்காரவச்சே. அங்கே இறங்கி கிட்டே தான் வீடு. போய் சேர்ந்திடுவேன்''  

''அம்மா  நீங்க  என் அம்மா மாதிரியே  இருக்கீங்க. உங்களை நமஸ்காரம் பண்ணி வேண்டிக்கிறேன்'' நான் நினைக்கிறது நடக்கணும் . என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ''

''என்னப்பா நீ  நினைக்கிறே ?''

''ரியல் எஸ்டேட் லே நிறைய விஷயம் கத்துண்டிருக்கேன்''     வக்கீலுக்கு படிச்சிண்டிருக்கேன்  இன்னும் ஒரு வாரத்தில் பரிக்ஷை. ஒரு வக்கீலாகணும்னு லக்ஷியம்.  அதே சமயம்  சென்னைக்கு பக்கத்திலே ஒரு சின்ன இடம் ரொம்ப  நல்ல ப்ரொஸ்பெக்ட்ஸ் இருக்கு. அதை மட்டும் வாங்கிட்டேன்னா கொஞ்சம் கொஞ்சமாக  கால் ஊன்றி  ரியல் எஸ்டேலே சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்'' ஆனா ...

''என்ன ஆனா?''
   
''அந்த பழைய வீட்டோட இருக்கிற நிலத்தை வாங்க பணம் இல்லையே. எங்கே  போவேன்  ரெண்டு  லக்ஷத்துக்கு? கடன் கேட்டா யாரும் கொடுக்க மாட்டேங்கிறா'' அந்த இடத்துலே பிளாட் போட்டு வித்தா பலமடங்கு சீக்கிரமே சம்பாதிக்கலாம்னு  விஜாரிச்சு வச்சிருக்கேன்.''

ஒரு யோசனையும் பண்ணாமல்  அலமேலு கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து அவனிடம் கொடுத்தாள் '' 

தாமோதரன் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்.  அவன் அதிர்ந்து போகும்போது ''குழந்தே, இது இன்னும் கொஞ்ச நாள் லே  சீட்டாட்டத்திலே என் புருஷனாலே என்னை விட்டு போகப்போறது. நீயாவது உருப்படியா இதை வச்சுண்டு   உழைச்சு முன்னுக்கு வா'' எனக்கு பிள்ளை குட்டி கிடையாது. நானும் ஒரு அனாதை. 

''நான் இதை கடனா பாவிச்சு எப்படியும் ஒருநாள் திருப்பி கொடுப்பேம்மா''

''நான் இதை இப்பவே மறந்தாச்சு..எனக்கு நீ ஒன்னும் திருப்பி தரவேண்டாம். உன்னைப்போல  யாராவது  நாணயமா உழைச்சு முன்னேற அந்த பணத்தை உபயோகி. உனக்காக என் கிருஷ்ணனை வேண்டிக்கிறேன்''

தாமோதரன் பரசுராமன் செயல்களை பற்றி அறிந்து  அவள்  கஷ்டங்களை தெரிந்துகொண்டு  வருந்தினான். மாமியைப் பார்த்த பார்வையில் கண்களில் கண்ணீர். 

 பரசுராமன் வீடு திரும்பியவளிடம்  ''அலமேலு கழுத்து சங்கிலி எங்கே காணோம்?''

''காணோமா? நடிகையர் திலகமாக  சங்கிலியை தேடி,  ''அடேடே  மஹாமஹா கும்பல்லே யாரோ அறுத்துண்டுட்டாளோ''  என்று கத்தினாள். அடித்தான்   கண்  கிட்டே இன்னும்  தையல் போட்ட  வடு இருக்கு.  அழுதாள். விஷயம்  மறந்துபோய் வருஷம் ஆறு   ஓடிவிட்டது. பரசுராமனிடம் எந்த மாறுதலும் இல்லை. ஒவ்வொன்றாக எல்லாம் கரைந்துபோய் இருக்கும் வீடு ஒன்று தான். அதையும்  விற்பதற்கு ஏற்பாடு நடந்தது. அவன் பேரில் இருந்ததால்  அலமேலுவுக்கு தெரியாமலேயே விற்று விட்டான்.  சீட்டில் காலத்தோடு 
பணமும் கரைந்தது. பரசுராமன் உயிரும் வியாதியில் படுத்து  ஒருநாள்  விலகியது. நிர்க் கதியாக  வீட்டில் அவளை விட்டு விட்டு ஹாலில் சுவற்றில்  படமானான்.

ஏதோ ஒரு சிலர்  உதவியுடன், உடலால் உழைத்து காலம் தள்ளினாள் அலமேலு. 
ஒருநாள்  வீட்டு வாசலில்  வக்கீல் ஒருவன் வந்து நின்றான். 'அருகே  உள்ளூர்  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்''
''அலமேலு அம்மா நீங்களா?
''ஆமாம்''  நீங்க யாரு?
இவரு  இந்த வீட்டு ஓனர் வக்கீல்,  வீட்டை  காலி  பண்ணி ஒப்படைக்காம  வருஷம்  நாலரை ஆவுது.  கோர்ட் ஆர்டர் வாங்கி உங்களை அப்புறப்படுத்த வந்திருக்கேன். நாளைக்கு காலை பத்துமணிக்குள்ளாற  சாமான் எல்லாம் எடுத்துக்கிட்டு காலி பண்ணனும். இல்லேன்னா  கைது பண்ணவேண்டி வரும். 

''ஐயோ  என் புருஷன்  படுபாவி  எனக்கு ஒண்ணுமே பண்ணாமே, என்னை  நிராதரவா   நடுத்தெருவில் நிக்க வச்சிட்டா போய்ட்டான். கடைசி நாலுமாசம் படுக்கையா  கிடந்தபோது கூட வீட்டை வித்தாச்சுன்னு சொல்லலியே. ராவும் பகலும் பக்கத்திலேயே இருந்து  காப்பாத்தினேனே'' 

''ஐயா,  வக்கீல், போலீஸ்காரரே , ஒரு வாரம் டைம் கொடுங்கோ நான் ஏதாவது ஏற்பாடு பண்ணிண்டு போய்ட்றேன்''
''இல்லேங்கம்மா  ஏற்கனவே  நோட்டீஸுக்கு பதிலே போடலே. வீடையும்  காலி பண்ணலே. ரொம்ப டிலே ஆயிடுச்சே.
மறுநாள் காலையிலே அண்டை அசல் வீட்டில் சில சாமான்களோடு அடைக்கலம் புகுந்தாள் . யாரோ அங்கே ஒரு அனாதை இல்லத்தில் அவளை சேர்த்தார்கள்.''
ஆறு மாதம் ஆகிவிட்டது.  அனாதை இல்லத்துக்கு வருபவர்கள் ஏதாவது கொஞ்சம் உதவுவார்கள். வாழ்நாளை எண்ணிக்கொண்டு  மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தபோது ஒரு நாள்  அனாதை இல்ல முதலாளி அவளை அழைத்தார்.
''ஐயோ  பணம் கேட்க போகிறாரே. எங்கே போவேன் இதற்கும் ஆபத்து வந்துவிட்டதா?''
அவர் அறையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். 
அம்மா உங்களை இங்கேயிருந்து இப்போவே  ரிலீஸ் பண்ணுகிறேன். இனிமே நீங்கள்  செளக்கியமாக இவரோடு போகலாம்.
''யார் இவர்? நான் எதற்காக இவரோடு போகவேண்டும்?  நான்  இங்கேயே  இருக்கேன்.  என்னால் இனிமே சமையல் வேலை செய்ய உடம்பில் தெம்பில்லையே '' கண்ணும் சரியா தெரியலே''
''அம்மா  நீங்க  சமைக்கலாம் வேண்டாம்.  எங்க வீட்டிலே சமையலுக்கு ஆள்  இருக்கு '' வந்தவர் குறுக்கிட்டார்.
''யாரு நீங்க?  இந்த கீச்சு குரல் கேட்ட மாதிரி இருக்கே ன்னு ஒரு கணம் யோசித்தாள் .  ஞாபகம் இல்லை. 
''நான் எதுக்கு இந்த இடத்தை விட்டு போகணும். எனக்கு வேறே போக்கிடம் இல்லை. வயசும்  ஆயுடுத்து. இங்கேயே நான்  கடைசிகாலத்தில் இருந்துட்டு  போயிடறேனே''
''உங்க வீட்டுக்கு தாம்மா  நீங்க போக போறேள் ,  'அலமேலு க்ரஹம்'' சென்னை தாம்பரத்தில்   அலமேலு லேஅவுட் லே.  என்கிறார்  வந்தவர். 
''யார் நீங்க என் பேரு  சொல்றேள் ''
''உங்கள் பிள்ளை.  அனாதை  தாமோதரன். இந்தாங்கோ''
 கையிலே ஒரு சின்ன நகைப்  பெட்டி. அதை வாங்கி திறந்தாள். புதிகாக  எட்டு வட சங்கிலி, அதில் அவளுடைய  அப்பா கல்யாணத்துக்கு  கொடுத்த பழைய  ராமபட்டாபிஷேக டாலர் இணைத்திருந்தது.
''பகவானே, தாமோதரனா, .... கும்பகோணத்தில்..மகாமக குளத்திலே ...
''ஆமாம்மா  நீங்க  பிச்சை போட்ட   உங்கள்சங்கிலியை வித்து தான் தாம்பரத்திலே   நிலம் விலை பேசி வாங்கி அதை இம்ப்ரூவ் பண்ணி  அலமேலு லேஅவுட் போட்டு,  ஒரு வீடு உங்கள் பேரில் கட்டி அதிலே இருக்கேன். மத்த  பிளாட்  எல்லாம்  நல்ல விலைக்கு விற்றுவிட்டேன். வக்கீலாக வேலை செய்றேன். 

போனமாசம் இந்த சங்கிலியை எடுத்துண்டு  தஞ்சாவூர் வந்தேன். உங்க அட்ரஸ் ஜாக்கிரதையா வச்சிருந்தேன். அங்கே போய் பார்த்தேன். வீட்டை இடிச்சு புதுசா கட்டிண்டு இருக்கா.  அக்கம் பக்கத்திலே  கேட்டதில் வீடு வித்துட்டு இந்த அனாதை இல்லத்தில் இருக்கறதா  எதிர்த்த பக்கத்து வீடுகளில் சொன்னா.  ஒருத்தர் இந்த அட்ரஸ் கொடுத்தார். வந்து  இவரை பார்த்தேன்.  உங்களுக்காக இந்த வருஷ  பணம் பாக்கின்னு சொன்னார். கட்டிட்டேன்.  இருந்தாலும்  என் வீடு இப்போ  ரெடியா ஆயிடுத்து. முதல்லே உங்கள அங்கே அழைச்சுண்டு போகணும்னு இவர் கிட்டே அனுமதி வாங்கிண்டுட்டேன். நீங்க  அங்கே வந்து  என்னோடு இருக்கலாம்.  
''உனக்கு கல்யாணம் ஆயுடுத்தா?
'' நீங்க தானே  என் அம்மா .  யாரையாவது பார்த்து பண்ணி வையுங்கோ''.
   




''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...