கண் அவன் = கணவன் J K SIVAN
ஐந்து வயது குழந்தை ஒன்று. ராஜா வீட்டில் பிறந்த இளவரசி. வடக்கே மேவார் நாட்டில், ராஜபுத்திர வம்சம். ஒருநாள் மாளிகைக்கு வெளியே ஊர்வலம் வருவதை பார்த்து அந்த குழந்தை கேட்டது “இது என்னம்மா?”. கல்யாண ஊர்வலம் டீ கண்ணு!” “அவன் யாரு தலப்பா கட்டிண்டு?”. “அது தான் மாப்பிள்ளை.
''மாப்பிள்ளை ன்னா யார்?''
'' அதோ அழகா சிங்காரம் பண்ணிண்டு பட்டு சட்டை போட்டுண்டு இருக்கிற சின்ன பெண்ணுக்கு புருஷன், அவளைக் கல்யாணம் பண்ணிண்டவன் '' கணவன் ”.
“ அம்மா நீ எனக்கும் கல்யாணம் பண்ணுவியா?” “ ஆமாம் தடபுடலா” “அப்போ எனக்கு யாரு நீ சொல்ற புருஷன் கணவன்?” “வா காட்றேன்.”
பூஜா அறையில் குழந்தையை அம்மா அழைத்துக் கொண்டு போய் காட்டியது கிருஷ்ணனின் படம்.
“இதோ இவன் தான் உனக்கு கணவன்” கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் மீரா. பல யுக தொடர்பு மீண்டும் இணைந்ததா? விட்டுப்போனது தொட்டுவிட்டதா? விரைவில் எரியும் விளக்குக்கு எண்ணையும் கிடைத்தது. தெருவில் ஒருநாள் ஒரு பொம்மை விற்பவன் ஒரு சின்ன அழகிய கிருஷ்ணன் பொம்மை வைத்திருப்பதை பார்த்து விட்டு அதை வாங்கினால் தான் விடுவேன் என்று அடம் பிடித்து அதை வாங்கி தன் உயிர் போகும் வரை வைத்திருந்தாள் மீரா. அவள் மூச்சு, பேச்சு எல்லாமே கிருஷ்ணன் தான். அவன் பெயர் கிரிதாரி என்று வைத்தாள் . விளையாட்டு வினையாகப் போய்விட்டதே என்று பெற்றோருக்கு கவலை அரித்து தின்றது.
பேசாமல் ஒரு ராஜகுமாரனுக்கு அவளை கல்யாணம் செய்து வைத்தனர். ராஜஸ்தானில் இளம் குழந்தை வயதிலேயே கல்யாணம் நடைபெறும். யாரோ ஒருவனுடன் பேருக்கு தான் கல்யாணம்.
அவளை ஆக்ரமித்தவன் கிருஷ்ணனே. அவள் மனம் பூரா வியாபித்தவன் கிருஷ்ணன் ஒருவனே.
வயது ஏற ஏற , அவளை எல்லோரும் ஒரு இளம் சன்யாசினியாகவே கண்டனர்.
இருபது வயதுக்குள்ளேயே அவள் தனியள் ஆனாள் . அவள் கணவன் ஒரு போரில் மாண்டான். மீராவின் உலகில் ஒரே ஜீவன். அது கிருஷ்ணன்.
ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து தெருவுக்கு சென்று விட்டாள் மீரா. கண்ணன் மீது அவள் கொண்ட மட்டற்ற காதல் அவளை அவன் கோபியாகவே மாற்றியது. நினைவு கண்ணனிடமே.
அவன் வாழ்ந்த ஆயர்பாடி, கோகுலம் க்ஷேத்ரங்கள் எல்லாம் இப்போது அவள் வாசம் செய்யும் இடமாக மனத்தில் பதிந்தது. கண்ணனை நினைத்து இரவும் பகலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கிருஷ்ணன் பக்தர்கள் எந்தக் காலத்திலும் எங்குமே உண்டே. அதனால் பக்தர்களும் ஆவலுடன் அவளுடன் சேர்ந்து கொள்ள அவளது ராஜ வம்சம் இப்படி கூட்டமாக ஆணும் பெண்ணுமாக இரவும் பகலும் ஆடிப்பாடுவதை எதிர்த்தது.
அவளை கொன்றாலே நிம்மதி என்று மீராவுக்கு விஷம் வைத்தார்கள். அவதூறு பேசினார்கள். எதற்கும் மசியவில்லை மீரா. அவள் கண்ணன் மீது வைத்த மாசற்ற காதல். அவள் குடித்த விஷத்தை அம்ருதமாக மாற்றி அவள் உயிரைக் காத்தது.
படுக்கையில் கூரான விஷம் தோய்ந்த ஆணிகள் வைத்தார்கள். அவள் அதன் மேல் படுக்க, ஆணிகள் அனைத்தையும் ரோஜா இதழ்களாக மாற்ற கிருஷ்ணனால் முடியாதா என்ன !
. “இந்தா உன் கிருஷ்ணனுக்குப் பூ” என்று பூக்குடலையில் பசியோடிருந்த கோபமான கருநாகத்தை வைத்தனர். மீரா கூடைக்குல் கைவிட்டு கிரிதாரிக்கு பூச்சூட புஷ்பத்தை எடுத்தாள். கொடிய விஷம் காக்கும் கருநாகம் மல்லிகை மாலையாய் மாறி இருந்தது. “ ரூபா கோஸ்வாமி ஒரு மிகப் பிரசித்த கிருஷ்ண பக்தர் என அறிந்ததும் அவரை சந்தித்து நமஸ்கரித்து அவர் திரு வாயிலிருந்து கண்ணன் பெருமையைக் கேட்க ஆசையாய் இருக்கிறது. ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் அவரை சந்திக்க ஓடி வந்திருக்கிறேன். அனுமதி வேண்டும். '' சிஷ்யரிடம் கெஞ்சுகிறாள் மீரா.
சிஷ்யர் உள்ளே போய் சொன்னார்.
சைதன்யரின் சிஷ்யரான ரூப கோஸ்வாமி சொன்னார்: “நான் பெண்களை பார்ப்பதில்லை பேசுவதில்லை. மீராவை சந்திக்க முடியாது என்று சொல்லிவிடுங்கள்'' சிஷ்யரிடம் கட்டளையிட்டார் கோஸ்வாமி. “ஐயா, புருஷர்கள் என்று யாருமே இல்லையே இந்த உலகில். இருப்பது ஒரு புருஷன் தான். அவனே கிருஷ்ணன். எனவே நாம் எல்லோருமே பெண்கள் தானே '' மீரா தெளிவாக மிருதுவாக சொல்கிறாள்.
பிறகு என்ன நடந்தது.?
ரூப கோஸ்வாமி ஓடி வந்து மீராவின் காலடியில் 'தடால்'''. அப்போதே கோஸ்வாமி மீராவிடம் தாசனாக சரணமடைந்தார்.
ஊர் ஊராக கிருஷ்ணன் நாமத்தை பஜித்துக்கொண்டு , பாடிக்கொண்டு நேரமாகி விட்டது. காதலின் உச்சகட்டம் வந்து விட்டது.
கிருஷ்ணனுக்காகவே வாழ்வை அர்ப் பணித்து எண்ணற்ற பக்திபாடல்களை கர்ணாம்ருதமாகவழங்கிவிட்டு துவாரகையில் எல்லாரும் பார்க்க மீரா கிருஷ்ணனோடு கலந்தாள்.
நீயும் என்னைப்போல் பெண்ணல்லவோ. உன் குரல் பொன்னல்லவோ.
நீயே என் பாடல்களைப் பாடு என்று தமிழ் நாட்டில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாள் .
பாரத ரத்னம். என்றும் மறையாத, நெஞ்சை வீட்டு நீங்காத எம். எஸ். சுப்புலக்ஷ்மியிடம் மீரா தனது பஜனைப் பாடல்களை ஜாக்ரதையாக ஒப்படைத்தாள் .
கிருஷ்ணனுக்கு ரெட்டை மகிழ்ச்சி. தன் மேல் பக்தியுடன் பஜிக்க ஒருவர்.
தன்னை கர்ணாம்ருதமாக அதை பாடி துதிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்களே.
நாமும் பாக்யசாலிகளா யிற்றே. அவர்களை நினைக்கிறோம் மீரா பஜன் நம் காதில் ஒலிக்கிறதே.
இறைவனோடு கூடிய வாழ்க்கைக்கு ஈடு உண்டா
|
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Wednesday, April 8, 2020
MEERA
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment