Monday, April 20, 2020

SADHA SIVA BRAMMENDRA KRITHI





                      வனமாலி  வேணுகானன்  J K  SIVAN 

அவன் எளியோர்க்கு எளியவன். எது  அளிக்கப்படுகிறதோ, அதில்  அளிப்பவன் மனதை பார்த்து திருப்தி அடைபவன். அவன் வசித்த பிரதேச காட்டுமலர்களை மாலையாக அணிபவன்.  ஆஹா  அந்த சந்தோஷத்தில் அவனது வேணுகானம் ஒலிக்கும்  தேனிசை கேட்போர் மனதை கிறங்க வைக்கும்.  அசைவற்று சிலையாக்கும் 
அவன் இருக்கும் பிருந்தாவனத்தில் தென்றல்  வாசமிகு மலர்களின்  நறுமணத்தோடு எப்போதும் வீசும்.  சலசலவென்று அருகே ஓடும் யமுனை நதி  ஆனந்தமாக நர்த்தனமாடுவது போல்  ஓடும். எண்ணற்ற ரிஷிகள் முனிவர்கள், தவ ஸ்ரேஷ்டர்கள் போற்றி பாடும்  புண்ய நதி அல்லவா அது. 
கிருஷ்ணா  உன்னை நினைத்தால் மனது ரம்யமாகிறது. ஆத்மாவில் உன் நாதம் ஒலிக்கிறது. இடைவிடாது ஒலிக்கும் ஜீவநாதம் அல்லவா உன் வேணு நாதம்.

P: gAyati vanamAli madhuram gAyati vanamAli
C1: puSpa sugandhi sumalayasamIrE munijana sEvita yamunAtIrE
4: paramahamsa hrdayOtsavakAri paripUrita muraLIravadhAri


மேற்கண்ட  சதாசிவ ப்ரம்மேந்திராளின்  கீர்த்தனையை   அற்புதமாக இசையமைத்து பாடி இருக்கிறார் ஸ்ரீ பால முரளி கிருஷ்ணா. எல்லோருமே கேட்டிருப்பீர்கள். நானும் கேட்டேன். அதைப் பாடியும்  பார்த்தேன்.  அதில் ஒரு திருப்தி எனக்கு கிடைத்தது. கேட்கும் உங்களுக்கும் மனது இனிக்கும் என்று நம்புகிறேன். YOU MAY CLICK THE   YOU TUBE  LINK https://youtu.be/9zxL8LqwM1w



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...