Wednesday, April 15, 2020

ghantasala



காந்தக் குரல் சொந்தக்காரர்  J K  SIVAN  

 கண்டசாலா என்று  ஒரு  கட்டை குட்டையான  தெலுங்கு  பாடகர்  வெண்கல  குரலுக்கு  சொந்தக்காரர்.  தமிழ் வார்த்தைகளை கடித்து  துப்பி விடுவார்.  அதுவும்  கூட  குழந்தைகளின் மழலை போல  அவர் குரல் இனிமையில் கேட்க  ரம்யமாக இருக்கும்.  சினிமா  தவிர எத்தனையோ  கச்சேரிகள் செய்தவர். திருப்பதி மலையில்  ''ஏடு கொண்டல வாடா''  மேல்  அவர் பாடிய  பாடல்கள் இன்றும்  அங்கே  காற்றில் ஒலிக்கும்.  விடியற்காலையில் கண்டசாலா குரல்  திருமலையில் ஒலிப்பதை கேட்க  பல ஜென்மம் காத்திருக்கலாம்.

எத்தனை  நாள் உஸ்மான் ரோட்டில் நடந்து போகும்போது அவர் வீட்டுக்கு முன்  நின்று  அவர் தரிசனத்துக்காக  காத்திருக்கிறேன் தெரியுமா. என் பள்ளிக்கு போகும் வழி அது.  முதல்   பால்கனியில் முண்டா பனியனுடன் நிற்பார். கையசைப்பார்.   என்ன அசாத்தியமான  ஒரு  கம்பீரம்  அந்த  குரலில்.   மாயா பஜாரில்  கதாநாயகி  காதலனை சந்திக்க துடிப்பாள்.  அவளுக்கு  தக்க நேரத்தில்  ஒரு  பரிசு.  ஒரு  மந்திரக் கண்ணாடிப் பேழை.

''இந்தாம்மா  பொண்ணே ,  இந்த  பேழையை  திறக்கு முன்பாக  நீ  யாரையாவது மனதில் நினைத்தால்  அவர்  நீ  இந்த  பேழையை திறந்ததும்  அதன்  கண்ணாடியில்  தோன்றுவார்''.   கதாநாயகி சாவித்திரி  ஓடுவாள். நாமும்  ஆர்வமாக  அவளை பின் தொடர்வோம்.  தனியே  தனது  அறையில் கதவை சார்த்திக்கொண்டு  அவள்  ஜெமினி கணேசனை (அபிமன்யுவாகத்தான்)  நினைத்துக்கொண்டு  மெதுவாக பேழையின்  மூடியை  கொஞ்சம் கொஞ்சமாக  திறப்பாள்  முழுதும் திறந்து அந்த மூடியின் உள்  பக்கமான  கண்ணாடியை ஒரு  கணம் நோக்குவாள்.  காதல் மன்னன்  கம்பிரமாக  தோன்றி சிரிப்பார். உதடசைப்பார். கண்டசாலா குரல் திரையை பிளந்துகொண்டு வெளியே வந்து அரங்கத்தில்  ''நீ  தானா  எனை  நினைத்தது ''  என்று எதிரொலிக் கும்.  சினிமா கொட்டகை  பூரா  ஆனந்த  அலையில்  அதிரும்.  கண்டசாலா  அனைவரையும்  தனது காந்த சக்தி குரலால்  கட்டி போட்ட   மந்திரவாதி. எத்தனைபேர்  இதை  அனுபவித்தி ருக்கிறீர்கள்?.  அப்படியானால் நிச்சயம்  60 க்கு  மேல்  உங்கள்  வயது.   எப்படி  என்  ஜோசி
யம்?   எனது ஜோசிய உண்மைக் காக  நீங்கள்  கட்டாயம்  ஒரு  சினிமா  கொட்டகையில்  அன்று  அமர்ந்திருக்க வேண்டியிருக்குமே.  

இதே  கண்டசாலா  மற்றொரு  படத்தில்  பாதாள பைரவி படத்தில்  ''அமைதி யில்லா  என்  மனமே'' ''காதலே''  என்று N T ராமராவுக்காக   பாடியதை கேட்டு  முதலில் அவர்  அடிமையானேன்.  70-75 வருஷங்களுக்கு  முன்பு கல்யாண வீடுகளில்  பெரிய  LOUDSPEAKER   ஒலி  பெருக்கி ஒரு முக்கிய அங்கம்.  அதில் கிராமபோன் பிளேட்டில் பாடல்கள்  போடுவார்கள்.  கண்டசாலா குரல்    சந்தோஷ நிகழ்ச்சிக்கு  எதிராக  ''உலகே மாயம் '' என்று  இருமலோடு  ஒலிக்கும்.  அதை கேட்காத  பாடிக்கொண்டு  இறுமாத ஆளே கிடையாது.

தேவதாஸ்  பட  ''துணிந்த பின் மனமே, கனவிதுதான் '' ஆகிய  பாடல்கள் இன்றும் நான் பாடுபவை. நேற்று VINTAGE குரூப்பில்   ''ஆடும் மயில் வா'' என்ற அற்புத பாட்டை கண்டசாலா குரலில் கேட்டேன். உடனே இதை எழுத தோன்றியது.  அவரது பாடல்கள் எதகனையோ, குறிப்பாக, '' முத்துக்கு முத்தாக'' , சுயநலம் பெரிதா,  விதியா இது  சதியா, ஆஹா  இன்ப நிலாவிலே   போன்ற பாடல்கள் நெஞ்சில் நிற்பவை. என்போல் கிழவர்கள் கிழவிகள் இன்றும்  பாடுபவை என்பது வாஸ்தவம் தானே?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...