கண்ணனைப் பணி மனமே J K SIVAN
ஜெயதேவரின் மூச்சு கிருஷ்ணனும் ராதையும், என்பதை நாம் அவர து கீத கோவிந்தம் பாடல்களை படிக்கும் போது அறியலாம். தன்னை பல நூற்றாண் டுகள் முன்பு, ஏன் ஒரு யுகம் தாண்டி என்றே சொல்லலாம், துவாபர யுகத்துக்கு கடத்திச் சென்று பிருந்தா வனத்தில் கிருஷ்ணன் பக்கத்தில் இடம் பிடித்தவர். இல்லை என்றால் கிருஷ்ணன் ராதை ராஸ லீலைகள் எப்படி அவருக்கு தெரியும்?
'' ராதா என்னை படுத்தாதே? ரொம்ப கஷ்டம் உன்னோடு? எப்படி உன்னால் காலம் தள்ள முடியும் என்று கவலைப் படுகிறாள் தோழி.
'' ராதா என்னை படுத்தாதே? ரொம்ப கஷ்டம் உன்னோடு? எப்படி உன்னால் காலம் தள்ள முடியும் என்று கவலைப் படுகிறாள் தோழி.
ராதை பிரிந்தாவனத்திலேயே சுற்றுகிறாள், அவள் நெஞ்சக்கனல் காட்டுத் தீயை விட உஷ்ணமாக இருக்கிறது. இருக்காதா பின்னே? கிருஷ்ணனை எங்கே தேடுவது? வரேன் என்பான் வரமாட்டான். அவனைக் காணாமலும் இருக்க முடியாதே. ஒரு
நாளைக்கு கண்ணனைப் பார்க்கா விட்டாலும் கூட உடம்பு இப்படியா துரும்பாக இளைக்கும்? கழுத்திலே தொங்கும் ஹாரம் கூட சுமையாக கனக்கிறதே. கழுத்து தாங்காமல் வளையுமா? .
நாளைக்கு கண்ணனைப் பார்க்கா விட்டாலும் கூட உடம்பு இப்படியா துரும்பாக இளைக்கும்? கழுத்திலே தொங்கும் ஹாரம் கூட சுமையாக கனக்கிறதே. கழுத்து தாங்காமல் வளையுமா? .
ராதாவுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே தான். '' ஹரி ஹரி'' எனும் நாமம்.
உனக்காக ஏங்குகிறேன். நீ இன்றி என் உயிர் எண்ணை யின்றி அணையும் தீபமாக கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறதே''
.
ஒரு பக்தையின் மன நிலையை ரொம்ப வருஷங்களுக்கு முன்பு ''கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்'' என்ற ஒரு அற்புத பாட்டில் கேட்டது நினைவுக்கு வருகிறது..
ஜெயதேவர் ராதையின் மனநிலையை இவ்வாறு படம் படித்து பாட்டாக காட்டி கண்ணனின் தாமரைத் திருவடிகளை பாடுங்கள் மோக்ஷக் கதவு உங்களுக் காக திறந்து வைத்திருப்பது தெரியும் என்கிறார்..
இந்த சின்ன பாடலை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அற்புதமாக ரசித்து பாடி இருப்பதை கேட்டு இன்று நானும் பாடிப் பார்க்கிறேன்.
rAdhikA krishNA
stana vinihita mapi hAra mudAram
sA manutE kruSa tanuriva bhAram
stana vinihita mapi hAra mudAram
sA manutE kruSa tanuriva bhAram
rAdhikA krishNa rAdhikA
rAdhikA
rAdhikA
tava virahE kESavA ||
haririti haririti japati sa kAmam
viraha vihita maraNEna nikAmam||rAdhikA|
viraha vihita maraNEna nikAmam||rAdhikA|
Sri jayadEva bhaNita miti geetam
sukhayati kESava pada mupaneetam||rAdhikA||
No comments:
Post a Comment