Monday, April 27, 2020

pesum deivam



பேசும் தெய்வம் பாகம் 3 J K SIVAN

வடக்கே ஒரு ஸ்வாமிநாதன்

நாம் எங்கு போனாலும் நம்மருகே ஒரு குட்டி கோவில் உண்டாக்கிவிடுவோம். அது நம் பண்பாடு. கோவிலில்லா ஊரில் குடியிருக்க மாட்டோமே .
அப்படித்தான் ஒரு காலத்தில் டெல்லி சென்ற சில தமிழர்கள் திருவண்ணா மலை மகரிஷி ரமணர் கொடுத்த மரத்தாலான ஒரு சிறு சுப்ரமணிய ஸ்வாமி சிலையோடுகோலாகலமாக டெல்லிக்கு உத்யோகத்துக்கு வந்தார்கள். அந்த முருகனை ஒரு இடத்தில் பிரதிஷ்டை பண்ணி 1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடினாலும் மனதில் ஏக்கம். அழகான கோபுரத்தோடு ஒரு முறையான கோவில் முருகனுக்கு இல்லையே.?

டெல்லியில் ராமக்ரிஷ்ணாபுரம் எங்கும் தமிழ் ஒலிக்கும் குட்டி தமிழகம். நான் சொல்லும் காலத்தில் அது ஒரு பொட்டல் காடு. நடுவே ஒரு சிறு குன்று. இந்த இடத்தை பார்த்த பக்தர்கள் '' அடடா இது சுப்பிரமணியனுக்கு உகந்ததல்லவா? அவன் தான் குன்று தோறாடும் குமரனாயிற்றே. இங்கே ஒரு முருகன் கோவில் உருவானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?'' பக்தர்கள் தமக்குள் பேசி முடிவெடுத்தார்கள்.

1961ல் டெல்லி சரோஜினி நகரில் இருக்கும் விக்னேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத்துக்கு வந்த முருக பக்தர் ஒருவரின் கனவில் யாரோ ஒரு தள்ளாத கிழவர் வந்து
''அப்பா என் கையை பிடிச்சிண்டு என்னை என் இடத்திலே கொண்டுவிடறியா ?'' என்ற கேட்டது போல இருந்து
''பெரியவரே கண்டிப்பாக ஜாக்கிரதையா உங்களை கொண்டுவிடறேன் என் கையை பிடிச்சுக்குங்கோ'' என்கிறார் பக்தர். ரெண்டு பேரும் நடக்கிறார்கள். மேலே சொன்ன காட்டுப்பிரதேசத்தில் உள்ள சின்ன மலை அருகே வருகி றார்கள். ராமக்ரிஷ்ணாபுரம் காட்டு குன்றைக் காட்டி ''அதோ அது தான் என் இடம்'' என்று கூறிய கிழவர் மறைந்து விடுகிறார்.
விக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷே கத்தில் கனவு கண்ட பக்தர் இந்த விஷயம் சொல்கிறார். அவருக்கு முருக பக்தர்கள் சிலர் முருகன் கோவில் கட்டலாம் என்று யோசித்ததோ, காட்டுக்குள் கண்ட அந்த சின்ன மலையில் கோவில் அமைக்க முடிவெடுத்ததோ ஒன்றுமே தெரியாது. அவர் அந்த மலையை பார்த்ததும் இல்லை.
முருக பக்தர்களுக்கு இந்த கனவு சம்பவம் ரொம்ப ஆச்சர்யமாகவும் சுப்ரமணிய சுவாமி ஆஞை யாகவும் பட்டது. கோவில் கட்ட எல்லா விவரங் களையம் எழுதிக்கொண்டு அருளாசி பெற விண்ணப்பம் ஒன்று தயாரித்து காஞ்சி மஹா பெரியவாளிடம் நேரில் சென்று சமர்ப்பித்தார்கள் . ஏகமனதாக பெரியவா ஆசியருள , அடுத்து கோவில் கட்ட அரசாங்க அனுமதியை வேண்டினார்கள்.

ஏற்கனவே சூரஜ்மல் என்று ஒரு சிற்றரசன் ஒருகாலத்தில் அந்த மலை மீது ஒரு உல்லாச பங்களா கட்ட எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் ''வேண்டாம் இங்கே எதுவும் காட்டாதே. சிவன் கோவில் இருந்த இடம்.'' என்று உத்தரவாகி பங்களா காட்டும் முயற்சி நின்றது. ஆகவே முருகன் கோவில் கட்ட விண்ணப்பித்தவுடன் அரசாங்க அனுமதி எளிதில் கிடைத்தது.

முருகன் தானாகவே அங்கே தான் நான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தபின் எவர் தடை செய்யமுடியும்?

1961ல் பக்தர்கள் ஒன்று கூடி ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற சங்கம் துவக்கி அரசாங்க அனுமதி பெற்று அந்த நிலத்தை வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணிக்கு காஞ்சி வாலாஜாபாத் அருகே பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் தேர்ந்தெடுத்து, மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடித்தார்கள் .
மஹா பெரியவா எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி என்று எத்தனை தரம் வலியுறுத்தி சொல்லி இருக்கிறேன். இந்த விஷயத்தில் அது நிரூபணம் ஆகிறதுஜே. பக்தர்கள் அவ்வப்போது டில்லி கோவில் கட்டும் விவரம் அவருக்கு அறிவித்தார்கள்.
''உத்தர சுவாமிநாதன் மூல விக்கிரக த்துக்கு கல் எங்கே இருக்குன்னு சொல்றேன்.கேளுங்கோ. அறுபது எழுபது வருஷம் முன்னாலே செந்திலாண்டவன் சிலை வடிக்க தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் கல் எடுத்தபோது அதிலே கொஞ்சம் மீதி இருக்கு. அது அங்கே பூமியிலே புதைஞ்சு இருக்கு அதை தோண்டி எடுங்கோ. அதுலே தான் புது ஸ்வாமிநாதன் தோன்றுவான்'' என்று அருள்வாக்களித்தார். அவர்களுக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பும்போது ஒரு வார்த்தை:
''இது சம்பந்தமா உதவி தேவைப்பட்டா நெல்லையப்பர் கோவில் சிவாச்சார் யரை போய் பார்த்து கேட்டா சொல்வார் '
என்ன ஆச்சர்யம். பெரியவா சொன்ன இடத்தில் பூமிக்கடியில் அந்த குறுக்குத்துறை பாறைகள் அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. அறுபது எழுபது வருஷத்தில் முக்கால்வாசி மண் மேடாக போய் விட்டிருந்தது. பெரியவா குறிப்பிட்ட கல்லை எப்படி கண்டு பிடிப்பது?

பெரியவா சொன்னது ஞாபகம் வர, நெல்லையப்பர் கோயில் சிவாச்சா ரியாரை போய் கேட்டார்கள்.

“தெற்கு ற்கு ரத வீதியிலே 85 வயது சுந்தர தீக்ஷிதர் இருக்கார். அவர் கிட்டே தான் போய் கேக்கணும் செந்திலாண்டவன் கோவில் முருகன் சிலா சாசனம் பண்ணும்போது அவர் தான் சிவாச் சாரியார் . அவரிடம் போனார்கள்.
''பெரியவா சொன்னாளா? அடாடா ப்ரத்யக்ஷ தெய்வம்னா அவர். பாதி வேலையை முடிச்சிருந்தேன். இன்னும் மீதியை முடிச்சுட்டு வா'' ன்னு சுப்ரமணியன் என்னை இன்னும் ஜீவனோடு விட்டுருக்கான். வாங்கோ ' என்று அவர்களோடு சென்று குறுக்குப் பாறையில் முருகன் மூல விகிரஹத்துக்கான கல் இருக்கும் சரியான இடத்தை காட்டினார்.
முப்பது தொழிலாளிகள் ரெண்டு நாளில் பூரா மண்ணை தோண்டி 10 அடி ஆழத்தில் மஹா பெரியவா
குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது.
ஜூன் 2, 1965- அன்று குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் தாமிரபரணி நதிப்படுகையிலிருந்து அந்த கல் எடுக்கப்பட்டு மஹாபலிபுரம் போனது. . மஹா பெரியவா பூர்வாஸ்ரம பேர் ஸ்வாமிநாதன் என்பதால் அவர் ரூபத்திலே சுப்ரமணியன் '' தான் எங்கே இருக்கேன்'' என்று காட்டி கொடுத்தான் போல் இருக்கு.
கல் கிடைத்தும் சுப்பிரமணியர் விகிரஹம் பண்ண கல்லில் ஆண் ரகம் சப்தம் வரவில்லையே என்று ஸ்தபதிக்கு கவலை. ஆபத்பாந்தவன் மஹா பெரியவாளிடம் ஓடினார்கள்.
காஞ்சியில் பக்தர்கள் வரிசையில் அவர்கள் ஸ்தபதியோடு நிற்பதை பார்த்த மஹா பெரியவா
அவர்களை முன்னாலே வரச்சொன்னார். அவர் தானாகவே ஸ்தபதியிடம்
சிலையைச் செதுக்க ஆரம்பிங்கோ ! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்கிறார். சிலைஉருவானதும்
,அதை மகா பெரியவாளின் பார்வைக்கு கொண்டு வந்தார்கள். அப்போது யாரும் கவனிக்காததை அவர் கண்கள் நோக்கின.
''ஓஹோ, தக்ஷிண சுவாமிநாதனி டமிருந்து சற்று வித்யாசமா காட்ட இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிட்டியோ? கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார். தெற்கிலுள்ள தனியாக வெள்ளி மாலையில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம்.
அந்த விக்ரஹத்தை ஒரு ராத்திரி, ஒரு பகல், அருகே வைத்துக்கொண்டு தடவிப் பார்த்து மகிழ்ந்தார். தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் பண்ணினார். சிலை அப்புறம் டெல்லி போயிற்று. கும்பாபிஷேகத்தன்று கணபதி ஸ்தபதி இதை பக்தர்களிடம் விவரித்தார்.
கோவில் கட்ட அடிக்கல் நாட்ட முகூர்த்த நாள் நேரம் கூட மஹா பெரியவா குறிப்பிட்டது தான். 8.9.1965 காலை 6.30 - 8.30 மணிக்குள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பங்கேற்பாரா என்கிற சந்தேகம் . ஏனென்றால் அன்று
காலை 4.30-க்கு இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானத்தை டில்லி ஷாதரா வில் இந்திய விமானப்படை நொறுக்கி வீழ்த்தியது. அபாய கட்டம் தாண்டிவிட்டதால் முகூர்த்த நேரத்தில் அப்போதைய தமிழகமுதல்வர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் முருகன் கோவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
மூலவர் சுவாமிநாத சுவாமி விக்கிரஹ சந்நிதி பீடத்தில் ஆகம சாஸ்திரப்படி 25 வஸ்துக்களோடு ''சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ பிரதிஷ்டை ஆயிற்று. மஹா பெரியவா ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலை தலைவர் ஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் இன்றும் அருள்பாலிக்கிறார்.
கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம். காலை சூரிய கிரணங்கள் ஸ்வாமிநாதனின்
இடப்பாகத்தில் பட்டு ஜொலித்தது. இவ்வாறு மார்ச் 20 முதல் 24 வரை இவ்வாறு சூரிய பூஜை அற்புதமாக நடந்தது. மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனத்துக்கு இன்னொரு சான்று. '' சந்நிதி கிழக்கு பார்த்து இருக்கு வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னும் சில அடிகள் பின்னாலே தள்ளி வையுங்கோ'' என்று அவர் சொன்னது இந்த சூரிய கிரண பூஜைக்கு'' என்று அப்புறம் தான் புரிந்தது.
நம் தமிழக காவேரி அருகில் சுவாமி மலையில் சுவாமிநாதன், அங்கே டில்லியில் அவன் மாமன் கிருஷ்ணன் விளையாடிய யமுனை நதியை பார்த்து மலை மந்திரில் கோவில் கொண்டான். எங்கிருந்தோ வந்து மயில்களும் சேவல்களும் முருகன் ஆலயத்தில் குடிகொண்டன .

“ ஆலய நிர்மாணத்தில் பணத்தட்டு ப்பாடு வந்தபோது நிர்வாகிகள் கவலைப்பட்டபோது மஹா பெரியவா ஆச்சர்யமாக விரைவில் பண ஏற்பாடு பண்ணி கொடுத்துவிட்டு ‘ஆறு இப்போ வறண்டு வற்றிக் கிடக்கு. சீக்கிரமே ஒரு பிரவாஹம் வரும். அப்போ யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.” என்று ஆசிர்வதித்தபடி இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...