பேசும் தெய்வம் J K SIVAN
ஆஸ்பத்திரியில் தெய்வ தரிசனம்
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் முன்பு என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிரபல நீதிபதி. மைலாப்பூர் வாசி. கோர்ட், கேஸ், என்று பிஸியான ஜட்ஜ். பேசக்கூட நேரம் இல்லாதவர். ஒரு நண்பர் அவர் வீட்டில் '' ஒரு முருக பஜனை வைத்துக் கொள்ள லாமா, அருமையாக திருப்புகழ் பாடி பலர் வீடுகளில் பஜனை செய்யும் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் மைலாப்பூர் வந்திருக்கிறார். நம் இல்லத்தில் ஒரு நாள் ஒரு சத்சங்க நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டார்.
''ஒ, திருப்புகழ் பற்றி கேள்விப்பட்டிருக் கிறேன். பாடி கேட்க நேரமில்லை. இந்த சந்தர்ப்பத்தில் வேண்டு மானால் அது நடக்கட்டும். பேஷாக நமது வீட்டில் ஸ்வாமிகளை அழைத்துவந்து திருப்புகழ் பஜனை ஏற்பாடு பண்ணிவிடு வோம்.'' என்கிறார் ஜட்ஜ். வள்ளிமலை ஸ்வாமி களை அழைத்து திருப்புகழ் பஜனை நடத்த ஒரு நாள் ஏற்பாடாயிற்று.
குறிப்பிட்ட நாளில் ஸ்வாமிகள் வீட்டுக்குள் நுழைகிறார். திருப்புகழ் எங்கும் ஒலிக்கிறது. வீடு இதுவரை அனுபவியாத ஒரு ஆனந்த பக்தி தோய்ந்த உணர்வில் திளைக்கிறது.
''திருப்புகழ் புத்தகம் இந்தாருங்கள். இதை பார்த்து படித்துக்கொண்டே நீங்களும் என்னோடு சேர்ந்து பாடு ங்களேன், சங்கீதம் குரல்வளம் எதுவும் தேவையில் லை. மனதில் பக்தி இருந்தால் போதும். '' ஸ்வாமிகள் புத்தகத்தை ஜட்ஜ் கையில் அளிக்கிறார். அன்று முதல் இறைவன் அருளால் திருப்புகழ் பாடுவது பிரதானமாகவும் நேரமிருந்தால் ஜட்ஜ் வேலையும் ஸ்ரீ T .M . கிருஷ்ணஸ்வாமி அய்யருக்கு வழக்கமாகிவிட்டது. திருப்புகழில் ஈர்ப்பு அவரை '' திருப்புகழ் மணி '' என்று ஊரும் உலகமும் அறியச் செய்து விட்டது.
திருப்புகழ் மணி மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் மட்டும் அல்ல அவர் குடும்பமே பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி உள்ள சாத்வீக குடும்பம்.
ஒரு சமயம் திருப்புகழ் மணி கிருஷ்ணஸ் வாமி அய்யரின் மனைவி காசநோய் (TB) உபாதை தாங்கமுடியாமல் தவித்தார். ஆந்திராவில் மதனபள்ளி ஆஸ்பத்திரியில் வைத்தியம். அங்கே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது , பெரியவா கால்நடையாக காஸி யாத்ரை புறப்பட்டு, மதனபள்ளியில் வந்து தங்கி இருந்த சமயம். விஷயம் பரவி ஆஸ்பத்திரிக் குள்ளும் தெரிந்தது. மணிஐயர் மனைவி காதிலும் விழுந்தது. ''அப்படியா, பெரியவா இந்த ஊருக்கு வந்திருக்கிறாரா, அடடா நான் என்ன பாவி இவ்வளவு சமீபத்தில் பெரியவா வந்திருப்பதை அறிந்தும் என்னுடைய பாபம் , அவரைப் போய் நேரிலே தரிசனம் செய்ய முடியாமல் செய்கிறதே.'' அய்யர் மனைவி கண்ணீர் விட்டாள் .
” என்னோட கடைசி மூச்சு, இந்த மதனப்பள்ளி ஆஸ்பத்திரி படுக்கை யில்தான் போல் இருக்கு என் விதி ' காலன் வந்து இழுத்துண்டு போற துக்கு முன்னே ஒரு தரம் அந்த சங்கரனை ஒரு நிமிஷம் கண்ணால் பாத்துட் டேன்னா போதும். நான் கொடுத்து வைச்சது அவ்வளவோ தான்...'' இரவெல்லாம் அழுதாள்.
மதனப்பள்ளியில் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்த நம்ம ஊர் பக்தர் ஒருவர் பெரியவாளை தரிசனம் பண்ணியபோது
''பெரியவா, நம்ம திருப்புகழ் மணி கிருஷ் ணஸ்வாமி அய்யர் சம்சாரம் உடம்பு காச நோயில் க்ஷீணமாகி இங்கே தான் எங்கேயோ ஒரு ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்கான்னு சொல்றா. அட்வான்ஸ் ஸ்டேஜ் எங்கிறதாலே பிழைக்கிறது துர்லபம்னு சொல்றா. அவா குடும்பமே மடத்தில், பெரியவா கிட்ட பக்தி சிரத்தை உண்டு. ... அவர் சொல்லி முடிக்க வில்லை,
பெரியவா யாரோ ஒரு மடத்து அதிகாரியை ஜாடையாலே அழைத்தார்...
” மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லாக்குலேயே உள்ள போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு…”
ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து நோயாளி களை பார்க்கும் ஸம்ப்ரதாயம் ஸ்ரீ மடத்தில் இல்லை. ஆனால் இது special கேஸ்! திருப்புகழை தமிழ்நாட்டில் பரப்பிய முருக பக்தரின் ஸம்ஸாரம்….ஶுத்தாத்மா!!! ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த அம்மா படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா!!
இது முன் பின் நடந்திராத அபூர்வ நிகழ்ச்சி!!யாருக்குமே கிடைக்காத மஹாப் பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் மணி அய்யர் பாரியாளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
“நான் கனவுல கூட இதை நெனச்சு பாக்கல….பெரியவாளே வந்தாளே! இந்த ஜன்மத்தை கரையேத்தி விட்டுட்டாளே! இனிமே நேக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல….ஶங்கரா….ஶங்கரா” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தாள் ஜட்ஜ் மனைவி. தர்ஶனத்துக்கு முன் வரை மனம் சோர்ந்திருந்தவள், பின்னர் எப்போதும் மன தெம்போடு இருந்தாள்..
சில நாட்களிலேயே ஶிவ கணங்கள் பவ்யத்தோடு வந்து அவள் கைலாச பதவி அடைய அழைத்துச் சென்றார்கள்.
திருப்புகழ் மணி அய்யர் வாழ்க்கையில் சில விசித்திர அதிசயங்கள் நடந்ததை பற்றி படித்தேன். அதை ப் பிறகு சொல்கிறேன். ATTACHED IS A THIRUPPUGAZH BHAJAN SONGBY THIRUPPUGAZH MANI. https://youtu.be/95VA8F_lnMU
No comments:
Post a Comment