Sunday, January 26, 2020

LOVING FRIENDS

நான்  பெற்ற  செல்வம்  - 1:     J K   SIVAN 
                                                                                   
நான்  முகநூலில் எழுத ஆரம்பித்தபோது அதை வெறும் பொழுது போக்காக நினைத்தேன். அதன் ஆழம் அகலம் அப்போது  அறியேன். நிறைய  முகநூல் பதிவுகளை பார்க்கும்போதே மனதில் ஒரு வித வெறுப்பு வளர்ந்தது.  நேரம் வீணாக்க ஒரு இடமோ, வேண்டாத விஷயம்  வண்டிவண்டியாக  விளையும் இடமோ  என்று ஒரு சலிப்பு. நான் வம்பு தும்புக்கு போகாமல் கிருஷ்ணன் பற்றியே என் மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தேன்.  சே


ணம் கட்டிய  குதிரை போல், வேறு பக்கம் திரும்பவில்லை.  J.K Sivan  / SREE  KRISHNARPANAM SEVA TRUST  என்ற  பெயர்களில் நான் துவங்கிய  FB  பக்கங்களில் மட்டும் என் கட்டுரை/கதை வெளிவந்தது.  5000-7000 அன்பர்கள் அதில் சேர்ந்து அன்றாடம் என்னோடு தொடர்பு கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு 18-20மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்வதில் ஆனந்தம்.

 என் எண்ணத்தின் வடிகாலாக  நான் விதைத்த வேதத்தின் வித்து வலையில் அவனது அநேக பக்தர்களை என் பக்கம் திருப்பினான். பலரின் நட்பு என்னை மேலும் ஊக்குவித்து நிறைய எழுதினேன். வருஷம்  ஆறு ஆகிவிட்டது.  லக்ஷக்கணக்காக  வாசகர்கள் என்று முகநூல் சொல்லியபோது நம்ப முடியவில்லை. நான் எழுத்தாளனே இல்லையே. 75 வயதுக்கு பிறந்து தானே  முதன் முதலாக எழுத ஆரம்பித்தவன். ஆறு வருஷங்களில் 70 புத்தகங்கள். அதில் 30க்கு மேல்  புத்தகங்களாக பிரசுரிக்கப்பட்டு விநியோகம் ஆகிக்கொண்டிருக்கிறது. மற்றவை புத்தகமாக  காத்திருப்பவை.

இப்படி எழுத ஆரம்பித்ததால் எனக்கு என்ன நன்மை சொல்லட்டுமா?  எழுத அநேக  விஷயங்கள் என் மனதில் பதிந்து  வரிசையில் நிற்கிறது. நிறைய படிக்க வேண்டியிருப்பதில் சந்தோஷம் வளர்கிறது  பதினைந்து பக்கம் படித்தால் அதை 10 வரியில் எழுதவேண்டும்.   எவருக்கும் நேரமின்மை யால்   சுருக்கமாக  சொல்லவேண்டியது  இரத்தின சுருக்கமாக  சொல்லப்பட வேண்டும்.  நான் அடைந்த மகிழ்ச்சியை மற்றோரும் அடையவேண்டும் என்ற  ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகிறது.  

என் எழுத்து  எவரையும் பின்பற்றி எழுதப்படுவது எல்லை. என் எண்ண ஓட்டங்களுக்கு எந்த எழுத்து மனதில் படுகிறதோ அது தான். அது சரியா, பொருத்தமா என்று யோசிக்கக்கூட  நேரமில்லை.  என் எழுத்து எனக்கு புரிந்தால் நிச்சயம் மற்றவர்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை . ஏனென்றால் நான் அதிகம் படித்தவன் அல்ல. எந்த விஷயமாவது படித்தால் சட்டென்று புரிந்தால் தான் படிப்பேன். அப்படி என் எழுத்து எனக்கே  புரிந்தால் தான் வெளியிடுவேன். என்னைக்  காட்டிலும் என் வாசகர்கள் எல்லோருமே  நன்றாக விஷயானுபவம் உள்ளவர்கள். புரிந்து கொள்வார்கள்.   அவர்களுக்கு என் எழுத்து புரிந்து தானே குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும்  என் புத்தகங்கள்  செல்கிறது.  எனவே  மேலும் மேலும் எழுதுவேன். கிருஷ்ணன் ஆட்டுவித்தால் ஆடாதார்  யாரே.

ஒரு புது விஷயம். என்னை நிறைய பேர்  சந்திக்கிறார்கள். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி .  வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், சென்னையின்   தமிழ்நாட்டின் இதர பகுதிகள் ஆகியவைகளிலிருந்தெல்லாம் நங்கநல்லூர் வந்து சந்திக்கும் நட்புள்ளங்களை பற்றி ஒவ்வொருவராக எழுத ஒரு எண்ணம்
இதில் யார் முத லில்  யார் அப்புறம் என்பதற்கு  இடமே   இல்லை. இன்று யாரைப்  பற்றி மனதில்  தோன்றியதோ அவரைப் பற்றியே ஆரம்பிக்கிறேன். இதில்  ஆண் , பெண், வயது, ஏழை, பணக்காரர், தமிழர் இதரர்,  முதியவர் இளையவர், படித்தவர்  படிக்காதவர்  என்ற  எந்த பாகுபாடும் இல்லை. மனம்,  அதில் நிறைந்த  பாசம், அன்பு, நேசம்,  ஒன்றே பிரதானம்.  என்னை சந்தித்தவர் அனைவரிடமும் அதை அபரிதமாக உணர்ந்ததால் எல்லோரும்  எனக்கு  ஒரே வரிசையில் தான்  எப்போதும்.   ஆரம்பிப்பது வட்டத்தின் ஏதோ ஒரு புள்ளியிலிருந்து.   .... அவ்வளவுதான்.

                                           கோயமுத்தூர்    டாக்டர்  எல்.என்.


டாக்டர்  லக்ஷ்மிநாராயணன்,   நடராஜன்:     எனக்கு  இந்த  நண்பர்  பரிச்சயமானது  தெய்வ சங்கல்பம்.   என் எந்த  கட்டுரைக்கும் முதலில் ஒரு லைக் போடுபவர்.  யார் இவர்? எனக்கு லைக் முக்கியமில்லை.  அதை எதிர்பார்க்கவில்லை. பிடித்திருக்கிறது என்று தானாகவே தெரிவிப்பவர்கள்  சிலர்  ஏதாவது எழுதுவார்கள். சிலர் விடாமல் லைக் போடுவார்கள்.  சிலகாலம் இப்படி  மௌன தொடர்புக்கு பின் டெலிபோனில் பேச்சு. பிறகு நேரில் சந்திப்பு. இதுவரை மூன்று முறை சென்னை வந்தபோதெல்லாம்  என்னை அன்போடு வந்து பார்த்தவர்.

 அசப்பில்  எதிரே  உட்கார்ந்திருப்பவர்  கொஞ்சம்  அருண்  ஜேட்லீயோ என்று தோன்றியது. அப்படி  ஒரு  தீர்மானமான சிறிய உறுதிவாய்ந்த  உதடுகள்.  1987ல் கோயமுத்தூரில் நரம்பு வியாதி நிபுணராக  பணி  துவங்கிய  இவர்  பிரபல  நரம்பியல் மருத்துவர் நிபுணர்.   இடையே சங்கீதத்துக்கும் தன்னை அர்ப்பணித்தவர்.  நாலாவது படிக்கும்போதே மிருதங்கம்  இவரது பிஞ்சுவிரல்கள் சொன்னதை கேட்டது. சொல் தப்பவில்லை. 

ஆரம்ப கல்வி  ஆதிசங்கரர் அவதரித்த காலடி  க்ஷேத்ரத்தில் கேரளாவில். குடும்பம் அப்புறம் திருநெல்வேலிக்கு தாவியது.   விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?  இவரது மகளும் கர்நாடக சங்கீத வித்துவான்.  பிள்ளையும் அப்பாவழியில் மிருதங்க வித்துவான்.  இந்த சங்கீத குடும்பத்தில் பிரபல கர்னாடக சங்கீத வித்துவான்  ஸ்ரீ  சிக்கில்  குருசரண் மாபிள்ளையானதில் என்ன ஆச்சர்யம்.  அவரவர் உத்யோக சம்பந்தமாக  நிறைய அலையவேண்டி இருக்கிறது. சென்னை கோயமுத்தூர்  என்று குடும்பம் கிளையாக உள்ளது.
 
எனது சதாபிஷேகத்துக்கு வருவதற்கு  ஒரு மாதம் முன்பாகவே  குறித்து வைத்துக்கொண்டாலும் அவசரமாக வெளிநாடு செல்ல நேரிட்டதால் ஒருசில தினங்கள் முன்பாகவே  தம்பதிகளாக டாக்டர் குடும்பம் என்னை சந்தித்ததில் ஒரு ஐந்து வயது எனக்கு குறைந்துவிட்டது.

கிருஷ்ணன் எல்லோரையும் பரஸ்பர அன்பு, பாசம், நேசம்  நட்பு மூலம்   ஒரே கிருஷ்ண குடும்பமாக்கும்  மாயாவி என்பதில் சந்தேகமில்லை.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...